அதிக சிங்கப்பூரர்கள் மனநல நிபுணர்களை நாட விரும்பினர்

அதிக சிங்கப்பூரர்கள் மனநல நிபுணர்களை நாட விரும்பினர்

3 mins read
870fcac0-5c04-4b44-9079-400b660d1a24
-

கொவிட்-19 காலத்தில் உடல்நலம் குறித்து சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருந்து உள்ளனர். அதாவது 2021ல் 58.3 விழுக்காடு குடியிருப்பாளர்கள் மனநல நிபுணர்களின் உதவியைப் பெறத் தயாராக இருந்தனர். இது, 2019இல் 47.8 விழுக்காடாக இருந்தது.

மேலும், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிபு­ணர்­க­ள் மட்டுமல்லாமல் மற்ற வகை­யி­லும் சிங்­கப்­பூ­ரர்­கள் உத­வியை நாடி­யி­ருக்­கின்­ற­னர்.

நண்­பர் உள்ளிட்டவர்களிட மிருந்து 69.1 விழுக்­காட்­டி­னர் உத­வியை நாடி­யுள்­ள­னர்.

அதே சம­யத்­தில் 2019இல் நண்­பர்­கள் மற்றும் குடும்­பத்­தி­ன­ரி­டம் இருந்து உதவி பெற்றவர்களின் விழுக்காடு 74.5லிருந்து குறைந்தது.

கொள்­ளை­நோய் காலத்­தில் தனிப்­பட்ட சுகா­தா­ரம் குறித்து அதிகமனோ­ரி­டம் விழிப்­பு­ணர்வு ஏற்­பட்­டதே அதற்கு கார­ண­மா­கும்.

சிங்­கப்­பூ­ரர்­களில் அதி­கமா­னோர் தங்­க­ளு­டைய உடல் நல­னில் அக்­கறை செலுத்­தி­னர் என்று தேசிய மக்­கள்­தொகை சுகா­தார ஆய்வு அண்மையில் வெளி­யிட்­ட­போது சுகா­தார அமைச்­சின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரிவித்­தார்.

மன­நல சிகிச்­சைக்­கான மற்ற வழி­களும் சமூக ஆத­ர­வை­யும் வலுப்­ப­டுத்­தும் முயற்­சி­கள் அதி­கம் தேவை என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

மக்­க­ள் சுகா­தா­ரத்­தைத் தெரிந்து ­கொள்­வ­தற்­காக தேசிய மக்­கள்­தொகை சுகா­தார ஆய்வு ஆண்­டு ­தோ­றும் நடத்­தப்­ப­டு­கிறது.

தேசிய மக்­கள்­தொகை சுகா­தார கணக்­கெ­டுப்பில் 18 முதல் 74 வய­து­டைய சிங்­கப்­பூர் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் உடல்­ந­லம் மற்­றும் ஆபத்­தான அம்­சங்­கள் கண்டறியப் படுகின்றன. சுகா­தார அமைச்­சும் சுகா­தார மேம்­பாட்­டுக் கழ­க­மும் இந்த ஆய்வை நடத்­து­கின்­றன.

ஜூலை 2020 மற்­றும் ஜூன் 2021க்கு இடை­யில் குடி­யி­ருப்­பா­ளர்­கள் பங்­கேற்ற ஆய்­வில் மன ­ந­லத்­திற்கு உத­வி­யைப் பெற விரும்பு­வோர்களிடம் வயது மற்றும் பாலி­னத்­தின் அடிப்­ப­டை­யில் வேறு­பா­டு­கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

பெண்­களில் 59.8 விழுக்­காட்­டி­னர், ஆண்­க­ளை­விட (56.8%) பொது­வாக மன­நல உத­வியை நாடு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் சற்றுக் கூடு­த­லாக உள்­ளது.

ஆனால் 60 முதல் 74 வயது வரை­யி­லான முதி­ய­வர்­களில் 45.8 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிபு­ணர்­க­ளின் உத­வி­யைப் பெற விரும்­பு­கின்­ற­னர். இத­னால் இந்த வய­துப் பிரி­வி­னர்­குறை­வா­ன­ உதவி பெறுபவர்களாக உள்ளனர்.

முப்­பது முதல் 39 வயது வரை­யி­லான பிரிவு 67.7 விழுக்­காட்­டுடன் அதிக உத­வி­யைப் பெறு பவர்களாக இருக்கின்றனர்.

மக்­க­ளின் மன­ந­லம் தொடர்­பாக தேசிய மக்­கள்­தொகை ஆய்­வில் கண்­ட­றிந்­தவை கொள்­ளை­நோய் காலத்­தில் சுகா­தா­ரம் தொடர்­பான மன­ந­லப் பிரச்­சி­னை­கள் அதி­கரிப் புடன் ஒத்­துப்­போ­கிறது.

2020 மே முதல் 2021 ஜூன் வரை­யில் மன­ந­லக் கழ­கம் மேற்­கொண்ட ஆய்­வில் பங்­கேற்ற 1,000க்கும் மேற்­பட்­டோ­ரில் ஏறக்­கு­றைய 13 விழுக்­காட்­டி­னர் கொள்ளை­நோய் காலத்­தில் மன அழுத்­தம் அல்­லது கவ­லைக்­கான அறி­கு­றி­கள் இருந்­த­தா­கத் தெரி­வித்­த­னர்.

நேர்­கா­ணல் காண்­ப­தற்கு இரண்டு வாரங்­க­ளுக்கு முன்பு 8.7 விழுக்­காட்­டி­னர் மன­உ­ளைச்­ச­லுக்­கான அறி­கு­றி­கள் இருந்­த­தா­க­வும் தெரி­வித்­த­னர். 9.4 விழுக்­காட்­டி­னர் கவலை இருந்­த­தா­க­வும் கூறி­னர். மேலும் 9.3 விழுக்­காட்­டி­னர் மித­மானது முதல் தீவிர மன­ உளைச்­சலில் இருந்­த­தா­கக் கூறி­னர். 7.4 விழுக்­காட்­டி­ன­ருக்கு தூக்­க­மின்மை இருந்­தது. இந்­தக் கண்டு­பி­டிப்­பு­க­ளுக்குப் பதி­ல­ளித்த சுகா­தார அமைச்சு, மன­நல ஆத­ர­வுக்­கான முயற்­சிகளை மேம்­ப­டுத்­து­வ­தில் உறு­தி­யாக இருப்­ப­தா­கக் கூறி­யுள்ளது.

சமூக மன­நல சுகா­தார சேவை­கள், மன­ந­லம் குறித்த விழிப்­புணர்வு, முன்­கூட்­டியே கண்­டு ­பிடிப்­ப­தற்­கான மருத்­துவ சோத­னை­களை நடத்­து­வது, மன ­நலத்தை மதிப்­பி­டு­வது போன்­றவை அவற்­றில் அடங்­கும்.

கொள்­ளை­நோய் காலத்­தில் ஊழி­யர்­க­ளின் மன­ந­லத்­தைப் பாது­காக்­கும் முக்­கி­யத்­தும் குறித்­தும் பொது மற்­றும் தனி­யார் துறை­யில் உள்ள முத­லா­ளி­க­ளுக்கு வலி­யுறுத்­தப்­பட்­ட­தாக 2021 ஆகஸ்­டில் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் ஒரு கட்­டு­ரை­யில் குறிப்பிட்டது.

தனி­யார் துறை­யில் குறைந்­தது நான்கு நிறு­வ­னங்­கள், கிரு­மித் தொற்­றின் ஆரம்­பக் காலத்­தி­லேயே மன­ந­லத்­திற்­கான நட­வ­டிக்­கை­களை மேம்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

உதா­ர­ண­மாக, உணவு விநி யோகிப்பு நிறு­வ­ன­மான சோடெக்சோ, ஜூலை 2020ல் 12 மன­ந­லம் தொடர்­பான கருத்­த­ரங்­குளை நடத்­தி­யது.

சுகா­தார அமைச்­சும் நடப்­பில் உள்ள மன­ந­லத் திட்­டங்­களை மறு­பரிசீ­ல­னை செய்ய, பல அமைப்­பு­க­ளுக்கு இடை­யி­லான பணிக்­ கு­ழுவை அமைத்­தது.

இந்­தப் பணிக்­கு­ழு­வில் 30க்கும் மேற்­பட்ட அர­சாங்க அமைப்­பு­களும் அதன் உறுப்­பி­னர்­களும் இடம்­பெற்று இருந்­த­னர். இது, அண்­மை­யில் பொது ஆலோ­ச­னையை நடத்­தி­யது. இதில் பெறப்­பட்ட கருத்­து­க­ளைக் கொண்டு சிங்­கப்­பூ­ரின் மன­ந­லத் திட்­டங்­களை மேம்­ப­டுத்த அமைச்சு திட்­ட­மிட்­டுள்­ளது.

( தகவல்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் )