நீரிழிவும் நுண்ணூட்டச் சத்து குறைபாடும்

நீரிழிவும் நுண்ணூட்டச் சத்து குறைபாடும்

1 mins read

நீரி­ழிவு நோயா­ளி­க­ளுக்கு நுண்­ணூட்­டச் சத்து குறை­பாடு ஏற்­ப­டக்­கூ­டும் என்று மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

புர­தச் சத்து, மாவுச் சத்து, கொழுப்­புச் சத்து ஆகி­யவை தவிர்த்து மனித உட­லுக்கு அவ­சி­ய­மான நுண்­ணூட்­டச் சத்­து­களும் சரி­யான விகி­தத்­தில் தேவைப்­ப­டு­கின்­றன.

எடுத்­துக்­காட்­டாக, இரும்­புச் சத்து, வைட்­ட­மின் பி 12, வைட்­ட­மின் டி, வைட்­ட­மின் சி, மெக்­னீ­சி­யம், கால்­சி­யம், செலி­னி­யம் உள்­ளிட்ட தாதுக்­கள் போன்­றவை.

உடலில் நுண்­ணூட்­டச்­சத்து குறைந்­தால் பல வகை நோய்­கள் ஏற்­படும்.

அயோ­டின் குறைந்­தால் தைராய்டு அழற்சி, இரும்­புச்­சத்து குறை­பாட்­டால் ரத்த சோகை ஆகியவை ஏற்படும். வைட்­ட­மின் பி குறைந்­தால் நரம்புகள் பாதிக்கப்படும். வைட்­ட­மின் டி அல்­லது கால்­சி­யம் குறை­பாட்­டால் எலும்பு பல­வீ­னம், ஃபோலேட் குறை­பாட்­டால் கரு வளர்ச்சியில் பாதிப்பு போன்றவை ஏற்­படு­கின்­றன.

காய்ச்­சல், நாள்­பட்ட நோய்­கள், குடல் செய­லி­ழப்பு, நுண்­ணூட்­டச் சத்­து­களை உண­வில் சேர்த்­துக்­கொள்­ளாமை, வயிற்­றுப்­போக்கு, வாந்தி, மன அழுத்­தம் போன்­ற­வற்­றால் உடலில் நுண்­ணூட்­டச் சத்து குறைய வாய்ப்புண்டு.

இத­னால் குழந்­தை­கள் அல்­லது கர்ப்­பி­ணி­க­ளுக்கு மூளை, எலும்பு, நோய் எதிர்ப்­புச் சக்தி, ரத்­தம் உறை­தல் ஆகி­யவை பாதிப்­ப­து­டன் முக்­கிய உட­லுறுப்பு ­க­ளின் செயல்­பா­டும் வளர்ச்­சி­யும் பாதிக்­கக்­கூ­டும் என்று மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

வய­தான நீரி­ழிவு நோயா­ளி­க­ளுக்கு வேறு சில உடல்நலச் சிக்­கல்­களும் இருந்­தால் பாதிப்பு அதி­க­மா­யி­ருக்­கும். இருப்­பி­னும் மருத்­து­வ­ரின் ஆலோ­சனை இன்றி தாங்­க­ளா­கவே நுண்­ணூட்­டச் சத்து மாத்­தி­ரை­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது நல்­ல­தல்ல என்று வல்லுநர்கள் எச்­சரித்துள்ளனர்.