புத்தாண்டை இனிதாக வரவேற்கலாம்

புத்தாண்டை இனிதாக வரவேற்கலாம்

2 mins read
222e5c06-9350-4cd6-b325-59afcc78bb01
-

மரினா பேயில் இவ்­வாண்டு மீண்­டும் வழக்­க­மான கொண்­டாட்­டங்­கள் இடம்­பெ­ற­வுள்­ளன. குடி­யி­ருப்பு வட்­டா­ரங்­க­ளி­லும் பல்­வேறு நிகழ்ச்­சி­களை எதிர்­பார்க்­க­லாம். சிங்­கப்­பூர் முழு­வ­தும் நடை­பெ­ற­வுள்ள புத்­தாண்­டுக் கொண்­டாட்­டங்­க­ளைத் தெரிந்­து­கொள்­ள­லாம்.

'அவர் தெம்­ப­னிஸ் ஹப்'

'அவர் தெம்­ப­னிஸ் ஹப்' மையத்­தில் 'கவுன்ட்­டௌன் டு மேஜிக்­கல் மோமன்ட்ஸ்' எனும் நிகழ்ச்சி, சர்க்­கஸ் வட்­ட­ரங்கு கேளிக்கை நிகழ்ச்­சியை இவ்­வாண்டு கருப்­பொ­ரு­ளா­கக் கொண்டு நடத்­தப்­படும். நட­னம், மத்­த­ளம், செப்­பிடு வித்­தை­கள், தீச்­சு­ழல் பயிற்­சி­கள் எனப் பல்­வேறு அங்­கங்­களை எதிர்­பார்க்­க­லாம். வாண­வே­டிக்­கை­யும் உண்டு.

'ஒன் பொங்­கோல் கவுன்ட்­டௌன்'

'ஒன் பொங்­கோல்' ஒருங்­கி­ணைந்த மையத்­தில் இசை, பாடல்­க­ளு­டன், குடும்­பங்­க­ளுக்கு உகந்த நிகழ்ச்­சி­கள் நடை­பெற உள்­ளன.

குழந்­தை­கள் குதிப்­ப­தற்கு காற்று மாளி­கை­கள், முகத்­துக்கு வண்­ணம் பூசும் கூடா­ரங்­கள், தொடர் திரைப்­பட காட்­சி­கள், இல­வச சிற்­றுண்டி போன்ற பல அம்­சங்­கள் இடம்­பெ­ற­வுள்­ளன. வாண­வே­டிக்­கை­களும் இடம்­பெ­றும்.

மரினா பே வட்­டா­ரம்

மரினா பேயில் புத்­தாண்­டுக் கொண்­டாட்­டங்­கள் இவ்­வாண்டு களை கட்ட உள்­ளன.

அவற்­றில் ஒன்று 'தி ஸ்டார் ஐலண்ட்' புத்­தாண்­டுக் கொண்­டாட்­டம். ஜப்­பா­னிய பாணி­யில் கலை நயத்­து­டன் வடி­வ­மைப்­பில் வாண­வே­டிக்­கை­கள் இதில் இடம்­பெ­ற­உள்­ளன. பல்­வேறு இசை, நட­னம், தொழில்­நுட்­பக் காட்­சி­கள் போன்­றவை இதில் இடம்­பெ­றும்.

அடுத்த ஆண்டு வேறு வடி­வம் பெற­வி­ருக்­கும் மிதக்­கும் மேடை­யில் இதுவே கடைசி புத்­தாண்­டுக் கொண்­டாட்ட இசை­நி­கழ்ச்­சி­யாக அமை­யும்.

மிதக்­கும் மேடை­யி­லி­ருந்து சிறிது தூரத்­தி­லி­ருந்து, மீடி­ய­கார்ப் நடத்­தும் இசை­நி­கழ்ச்சி நடை­பெ­றும். உள்­ளூர், தென்­கி­ழக்­கா­சி­யப் பிர­ப­லங்­கள் இதில் கலந்­து­கொள்­கின்­ற­னர். இரு நிகழ்ச்­சி­க­ளுக்­கும் கட்­ட­ணம் உண்டு.

'ஃபுல்லர்­டன்' ஹோட்­ட­லும் மெர் லயன் சிலை­யும் வண்­ணங்­களில் ஒளி­ரும் அழகை இன்றே ரசிக்­க­லாம்.

'ஷேர் தி மோமன்ட்' எனும் நிகழ்ச்­சி­யில் மாண­வர்­க­ளின் ஓவி­யங்­கள் ஒளிச் சித்­தி­ரங்­க­ளாக மாற்­றப்­பட்டு கட்­டட முகப்­பு­களில் இடம்­பெற்று வரு­கின்­றன.

தேசிய தொண்­டூ­ழிய, கொடை நிலை­யத்­து­டன் இணைந்து ஒளிக்­கோ­வைக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

வரும் 30ஆம் தேதி வரை இரவு மணி 8 மணி முதல் 10.30 மணி வரை ஒளிக்­காட்சி இடம்­பெ­றும். 31ஆம் தேதி இரவு 8 மணி முதல் 11.45 வரை அது இடம்­பெறும்.

புதிய ஆண்டை புத்துணர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்பது பலருக்கும் விருப்பமானது. இசை, நடனம், வாணவேடிக்கை என ஆரவாரமாக புத்தாண்டை வரவேற்க சிங்கப்பூரர்கள் காத்திருக்கின்றனர்.