மனநலனுக்கு முன்னுரிமை தரலாம்

மனநலனுக்கு முன்னுரிமை தரலாம்

2 mins read

மன­ந­லனின் முக்­கி­யத்­து­வத்­தைக் கடந்த சில ஆண்­டு­கள் பல­ருக்­கும் உணர்த்­தி­யுள்­ளன. புத்­தாண்­டில் மன­ந­ல­னுக்கு முன்­னு­ரிமை தர விரும்­பு­வோர் சில எளிய பழக்­க ­வ­ழக்­கங்­க­ளைக் கடை­பி­டிக்­க­லாம்.

மன அழுத்­தத்தைச் சமா­ளித்து மனம் இளைப்­பாற சில உத்­தி­க­ளைத் தெரிந்து வைத்­துக் கொள்­ள­லாம். அதில் முக்­கி­ய­மா­னது மூச்­சுப் பயிற்சி. முறை­யான மூச்­சுப் பயிற்சி உட­லும் மன­மும் அமை­தி­கொள்­ள­ உத­வும்.

அதைத் தவிர, வாசித்­தல், நறு­மண சிகிச்சை, உடற்­பி­டிப்பு போன்­ற­வை­யும் மன அழுத்­தத்­தைக் குறைக்க உத­வும்.

அடுத்து நன்­றி­கூ­று­தல். நன்­றி­கூ­று­தலை அன்­றாடப் பழக்கமாக்குவதால், மன அழுத்­தம் குறைந்து வாழ்க்கை குறித்த உற்­சா­க­மும் நம்­பிக்­கை­யும் பெரு­கும். நன்றி கூறு­வ­தற்கு நம்­மைச் சுற்றி உள்ள அம்­சங்­களை பட்­டி­ய­லிடலாம்.

சமூ­கத்­து­டன் உற­வா­டுங்­கள். குடும்­பத்­தா­ருக்­கும் நண்­பர்­களும் நேரம் ஒதுக்­கும்­போது, தனித்­தி­ருக்­கும் உணர்வு குறை­யும். பிரச்­சி­னை­க­ளால் உங்­கள் மனது சோர்­வ­டை­யும்­போ­தும் உத­விக்­கரம் நீட்ட அவர்­கள் உடனிருப்­பார்­கள்.

மேலும், உடல் உறு­தி­யாக இருந்­தா­லும் மன­தும் நலம் பெறும் என்­பதை மறக்க வேண்­டாம். தூக்­க­மும் தண்­ணீ­ரும் போது­மான அள­வில் இருப்­பதை உறுதி செய்­யுங்­கள். முறை­யான உண­வுப் பழக்­கத்­தைக் கடை­பி­டி­யுங்­கள். மகிழ்ச்­சி­யைத் தூண்­டும் உண­வு­வ­கை­க­ளைச் சேர்த்­துக் கொள்­ளுங்­கள். அடிக்கடி உடற்­ப­யிற்சி செய்யுங்கள்.

அள­வுக்கு அதி­க­மாக சமூக ஊட­கத் தளங்­க­ளைப் பயன்­ப­டுத்­தும்­போது தேவை­யில்­லா­மல் மற்­ற­வர்­க­ளு­டன் நம்மை ஒப்­பி­டத் தோன்­றும்.

அத­னால் சமூக ஊட­கத்தை அள­வு­டன் பயன்­ப­டுத்­துங்­கள். எழுந்த பின்­ன­ரும் தூங்­கும் முன்­ன­ரும் சமூக ஊட­கங்­க­ளைத் தவிர்த்­தி­டுங்­கள்.

அடுத்து, எண்­ணங்­களை எழு­துங்­கள். தின­மும் 15 நிமி­டத்­துக்கு எண்­ணங்­களை­யும் உணர்­வு­க­ளை­யும் எழு­தி­வ­ரு­ப­வர்­களுக்கு மன அழுத்­த­மும் பதற்­ற­மும் குறைந்­த­தாக 2018ல் நடத்­தப்­பட்ட ஆய்வு ஒன்று கூறி­யுள்­ளது. ஆனால் தின­மும் எழுத வேண்­டும் என்­­பது கட்­டா­ய­மில்லை.

சிரித்து வாழுங்கள். மனம் சோர்வாக இருக்கும்போது நகைச்சுவைக் காட்சி அல்லது திரைப்படத்தைப் பாருங்கள். அல்லது வீட்டில் ஆடிப் பாடி மகிழுங்கள். ஆடுவது மன அழுத்தத்தையும் குறைக்க உதவும். ஆடிப் பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்ற பாடல் வரிகளை நினைவில் கொள்ளுங்கள்.