கூகலை கதிகலங்கச் செய்திருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தளம்

கூகலை கதிகலங்கச் செய்திருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தளம்

2 mins read

டெஸ்லா உரி­மை­யா­ளர் இலோன் மஸ்க் தோற்­று­வித்த செயற்கை நுண்­ண­றிவு ஆய்வு நிறு­வ­ன­மான 'ஓபன்­ஏஐ' தொடங்­கி­யுள்ள செயற்கை நுண்­ண­றிவு உரை­யா­டல் தள­மான 'சாட்­ஜி­பிடி', பல­ரின் கவ­னத்­தை­ ஈர்த்­துள்­ளது.

தளம் தொடங்­கப்­பட்ட ஒரு வாரத்­தில் ஒரு மில்­லி­யன் பேர் இதைப் பயன்­படுத்­தி­னர்.

இத­னால் கூகல் தேடு­த­ளம்­தான் ஆட்­டம் கண்­டி­ருக்­கிறது. 20 ஆண்­டு­ க­ளாக பல­வற்­றுக்­கான விடை­க­ளைத் திரட்­டித் தரும் கூக­லின் பணியை 'சாட்­ஜி­பிடி' மேம்படுத்திச் செய்­வ­தாக அதைப் பயன்­ப­டுத்­து­வோர் கூறு­கின்­ற­னர்.

அத­னால் கூகல் வரும் மாதங்­களில் அதன் வர்த்­தக அணு­கு­மு­றையை மாற்றி, தானும் புதிய செயற்கை நுண்­ண­றிவு உரை­யா­டல் தளத்தை அறி­மு­கம் செய்­யப்­போ­வதாக ஊட­கங்­கள் கூறின.

செயற்கை நுண்­ண­றி­வைப் பயன்­படுத்தி பல கேள்­வி­க­ளுக்கு பதில் சொல்­கிறது 'சாட்­ஜி­பிடி' தளம்.

செய்­தி­கள், வேலை விண்­ணப்­பங்­கள், ஆய்­வுக் கட்­டு­ரை­கள் போன்­ற­வற்றை அது எழு­தித் தந்­துள்­ளது. அதைக் கொண்டு கதை­கள், கவி­தை­கள், போன்­ற­வை­யும் எழு­தப்­பட்­டுள்­ளன.

எது மனி­த­னின் அறி­வு­சார் கலைப்­ ப­டைப்பு என்ற விவா­தத்­தை­யும் தளம் எழுப்­பி­யுள்­ளது.

தமிழ் முர­சும் அதைச் சோதித்­துப் பார்த்­தது. சிங்­கப்­பூ­ரின் சிறந்த இடங்­கள் என்ன என்று கேள்­விக்கு அத்­த­ளம் செந்­தோசா, பூமலை, கரை­யோ­ரப் பூங்கா, லிட்­டில் இந்­தியா உள்­ளிட்ட இடங்­க­ளைப் பட்­டி­யல் இட்­டது.

'சாட்­ஜி­பிடி' தமி­ழி­லும் உரை­யாடி பதில் தந்­தது. தமி­ழில் கவிதை பாடு என்ற கேள்­விக்கு தளம் அளித்த பதில் இதுதான்:

பெரும் கடல் மீது பெம் நிலம்

பெரும் நாடு பெரும் செங்கை

பெரும் சமுதாயத்தைப் பெரும் சுவாசம்

பெரும் வடம் பெரும் தெறி

அதனிடம் மீண்டும் கவிதையைக் கேட்டதற்கு ஒழுங்கற்ற சொற்களே பதிலாக வந்தன. தமி­ழில் முறையான கலைப் படைப்பு­களை வழங்­கும் ஆற்­றலைத் தளம் இன்னும் பெறவில்லை என்று இதன் வழி தெரிகிறது. தமிழ் படைப்பாளிகள் தப்பித்தனர். இப்போதைக்கு.

கூடுதல் செய்தி: கவிதா கரும்