கென்யாவில் உள்ள சியாயா மாவட்டத்தில் அமைந்திருக்கும் உகுஞ்ா எனும் இடத்தில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இது. ஆப்பிரிக்க தேவாலய ஆணையத்தின் லேஜியோ மரியா என்ற பிரிவைச் சேர்ந்தவர்களின் கிறிஸ்துமஸ் வழிபாட்டின் ஒரு பகுதியாக உடலில் சேற்றைப் பூசிக் கொண்டு அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். படம்: ராய்ட்டர்ஸ்
ஒவ்வொரு கிறிஸ்துமஸ் தினத்தின்போதும் வாட்டிக்கன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் தேவாலயத்திலிருந்து போப் ஆண்டவர் பிரான்சிஸ் வழிபாட்டை வழிநடத்தி உலகுக்கு பேருரை ஆற்றுவது வழக்கம். இவ்வாண்டும் அது தொடர்ந்தது. வாட்டிகன் உயர் அதிகாரிகளும் பேராயர்களும் உடன் இருந்தனர்.
படம்: ராய்ட்டர்ஸ்
ரஷ்யா, உக்ரேன் உள்ளிட்ட சில நாடுகளில் கிறிஸ்துமஸை ஜனவரி 7ஆம் தேதி கொண்டாடுவது வழக்கம். ஆனால் ரஷ்யாவிடம் இருந்து தனித்திருப்பதைக் காட்டும் பொருட்டு, உக்ரேனின் சில பகுதிகளில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. கியவ்வில் உள்ள ரயில் நிலையத்தில் பொதுமக்கள் கிறிஸ்துமஸ் வழிபாட்டுப் பாடல்களைக் பாடி மகிழ்ந்தனர். படம்: ஏஎஃப்பி

