'அன்னலட்சுமி கஃபே'

'அன்னலட்சுமி கஃபே'

2 mins read
166457c0-e49a-4414-a6d4-70646b6ebf29
-

ஆ. விஷ்ணு வர்­தினி

அன்­ன­லட்­சுமி சைவ உண­வ­கத்­தின் புதிய 'அன்­ன­லட்­சுமி கஃபே' இம்­மா­தம் 27ஆம் தேதி­யி­லி­ருந்து மக்­க­ளுக்­காக திறக்­கப்­பட்­டுள்­ளது. ஷென்­டன் வேயில் உள்ள டெளன்­ட­வுன் கேல­ரி­யின் மூன்­றாம் தளத்­தில் அமைந்­தி­ருக்­கும் 'அன்­ன­லட்­சுமி கஃபே', இந்­திய சிற்­றுண்டி, பல­கார வகை­களை வழங்­கு­கின்­றது.

நண்­பர்­கள் கூடு­வ­தற்­கும் சந்­திப்­ப­தற்­கு­மான இட­மாக அமைய விழை­யும் 'அன்­ன­லட்­சுமி கஃபே' அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை, "விரும்­பி­யதை உண்­ணுங்­கள், விரும்­பி­யதைக் கொடுங்­கள்," என்ற முறை­யில் இயங்­கும். அதைத் தொடர்ந்து, உண­வுப் பட்­டி­ய­லில் குறிக்­கப்­பட்ட விலை­களில் தோசை, ஊத்­தப்ப வகை­கள், மதிய உண­வு­கள் முத­லி­யவை விற்­கப்­படும்.

செவ்­வாய் முதல் ஞாயிறு வரை இயங்­கும் இந்த 'கஃபே', மூன்று வேளை­க­ளுக்­கும் திறந்­தி­ருக்­கும். ஒவ்­வொரு நாளும் மக்­கள் எதிர்­நோக்­கக் கூடிய வெவ்­வேறு சிறப்பு உண­வு­களும் அன்­ன­லட்­சு­மி­யின் உண­வுப் பட்­டி­ய­லில் இடம்­பெ­று­கின்­றன. மதிய, இரவு வேளை­க­ளுக்கு 'புஃபே' முறை­யில் இயங்­கும் அன்­ன­லட்­சுமி உண­வ­கத்­தில் வழங்­கப்­ப­டாத, புது உணவு வகை­களை இந்த 'கஃபே' வழங்­கு­கிறது.

மத்­திய பகு­தி­யில் இத்­த­கை­ய­தொரு இந்­திய 'கஃபே'யின் மூ­லம் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்குப் புது­மை­யான ஓர் அனு­ப­வத்தை தர முயற்சி செய்­துள்­ளது அன்­ன­லட்­சுமி. இந்தப் புது முயற்சி குறித்து நல்ல வர­வேற்­பை­யும் அது பெற்­றுள்­ளது.

செப்­டம்­பர் மாதம் வரை சென்ட்ரல் ஸ்கு­வே­ரில் இயங்கி வந்த அன்­ன­லட்­சு­மி­யும் டெம்­பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் நிறு­வ­ன­மும், டௌன்டவுன் கேல­ரிக்கு இட­மாற்­றம் கண்­டுள்­ளன. முத­லாம் தளத்­தில் அமைந்­துள்ள அன்­ன­லட்­சுமி உண­வ­க­மா­னது, வரும் மாதங்­களில் திறக்­கப்­ப­ட­வுள்­ளது. தொடர்ந்து, விரும்­பி­யதைக் கொடுக்­கும் முறை­யில் அன்­ன­லட்­சுமி உண­வ­கம் இயங்­கும். டௌன்டவுன் கேல­ரி­யின் இரண்­டாம் தளத்­தில் தற்­போது அமைந்­துள்ள ஃபைன் ஆர்ட்ஸ் நிறு­வ­ன­மும் அடுத்த மாதம் 3ஆம் தேதி அன்று திறக்­கப்­ப­ட­வுள்­ளது.