உடற்குறை ஒரு தடையல்ல

அனுஷா செல்­வ­மணி

உடற்குறை யாருக்­கும் ஒரு தடை­யாக இருக்­கக்­கூ­டாது என்­பதை வலி­யு­றுத்­தும் வகை­யில், நாள்­பட்ட சிறு­நீ­ரகக் கோளாறு உள்ள பிள்­ளை­க­ளுக்­கும் சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்­சை­

க­ளுக்­குச் சென்ற சிறு­வர்­க­ளுக்­கும் இளை­ஞர்­க­ளுக்­கும் கடந்த 22 ஆண்­டு­க­ளாக தேசிய பல்­க­லைக்­க­ழக

மருத்­து­வ­மனை ‘எ கிப்ட் ஆஃப் அட்­வென்­சர்’ எனும் முகாம் ஒன்றிற்கு ஏற்­பாடு செய்து வரு­கிறது.

பள்ளி விடு­மு­றை­யின்­போது, உடல்­

ந­லத்­து­டன் இருக்­கும் மாண­வர்­கள் தங்­கள் பெற்­றோ­ரு­டன் வெளி­நா­டு­

க­ளுக்­குச் செல்­வது, பள்ளி முகாம்­

க­ளில் கலந்துகொள்வது போன்ற நட­

வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கி­றார்­கள்.

ஆனால், உடல் குறை­பாடு உள்ள சிறு­வர்­க­ளால் இது­போன்ற நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட முடி­யாது. அவர்­கள் சிறுநீரக சுத்திகரிப்புக்குச் செல்ல வேண்­டிய கட்­டா­யத்­தில் இருக்கிறார்­கள்.

மற்­ற­வர்­க­ள் பெறும் அனு­ப­வங்­க­ளை சிறு­நீ­ரக பிரச்­சினை உள்ள சிறு­வர்­களும் பெற­வேண்­டும், அவர்களும் மகிழ்ச்­சி­யான தரு­ணங்­களை அனு­ப­விக்க வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் இந்த முகாம் ஏற்­பாடு செய்யப்படுகிறது.

இந்த முகா­மில் உடற்குறை உள்ள சிறு­வர்­க­ளுக்­குத் தேவை­யான மருத்­துவ வச­தி­க­ள், அவர்­க­ளின் உடல்­

நி­லையைத் தொடர்ந்து கண்­கா­ணிக்­கும் வகை­யில், 20க்கும் மேற்­பட்ட மருத்து­வர்­கள், பத்து தாதி­யர்­கள், இதர சுகா­தார பரா­ம­ரிப்­பா­ளர்­கள் ஆகி­யோர், இந்த மூன்று நாள் முகா­மில் சிறுவர் களுடன் தங்கி அவர்களைக் கவ­னித்­துக்கொண்­ட­னர்.

டிசம்­பர் 16ஆம் தேதி­யி­லி­ருந்து, 18ஆம் தேதி வரை நடந்த இந்த முகா­மில், எட்டு வய­தி­லி­ருந்து 21 வய­துக்குட்­பட்ட 50 சிறு­வர்­களும் இளை­ஞர்­களும் கலந்துகொண்­ட­னர்.

சாங்கி சிவில் சர்விஸ் கிளப்­பில் நடை­பெற்ற இந்த முகாம், தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யின் சிறு­வர்­கள், சிறு­நீ­ரக நிலை­யத்­தின் தலை­வர், முனை­வர் யாப் ஹுய் கிம்­மால் வழி­ந­டத்­தப்­பட்­டது.

“கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக நோய்த்­தொற்று கார­ணங்­க­ளால் மெய்­நி­கர் வழி­யாக நடந்­தே­றிய இந்த முகாம், நீண்டகால காத்­தி­ருப்­பிற்குப் பிறகு பங்­கேற்­பா­ளர்­களை ஈர்த்­த­தோடு, புது வித­மான அனு­ப­வத்­தை­யும் அவர்­

க­ளுக்கு அளித்­தது,” என்­றார் முனை­வர் யாப் ஹுய் கிம்.

செந்­தோ­சா தீவைச் சுற்றி நடை­பெற்ற ‘அமே­சிங் ரேஸ்’ பந்­த­யம், பலகை விளை­யாட்­டு­கள் ஆகி­யவை பங்­கேற்­பா­ளர்­களை மகிழ்ச்­சி­யில் ஆழ்த்­தும் வண்­ணம் அமைந்­திருந்தது.

தின­மும் பயன்­ப­டுத்­தப்­படும் ரத்த சுத்­தி­க­ரிப்பு இயந்­தி­ர­மும் முகா­முக்கே கொண்­டு­ செல்­லப்­பட்­டது.

சுகா­தார நிபு­ணர்­கள் மட்­டு­மின்றி, மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து வந்த தொண்­டூ­ழி­யர்­கள், பங்­கேற்­பா­ளர்­கள் நேரம் தவ­றா­மல் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளானவர்கள் மருந்­து­களை உட்­கொள்­வதை கண்­கா­ணித்­த­தோடு, ‘பெரிட்­டோ­னி­யல் டய­லி­சிஸ்’ செய்­

வ­தற்­கும் உத­வி­யாக இருந்­த­னர்.

எட்டு ஆண்­டு­க­ளாக இந்த முகா­மிற்குச் சென்­று­வ­ரும் 20 வயது சத்யா ஆனந்த், இளம் வய­தி­லி­ருந்து பெரிட்­டோ­னி­யல் டயலி­சிஸ் செய்து வரு­கி­றார்.

இந்த முகாம் மூலம் தன்னைப் போன்ற இளை­ஞர்­களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்ததோடு, தங்­க­ளுக்கு இருக்­கும் நோயைப் பற்றி கலந்­து­ரை­யா­டியதாகவும் கூறி­னார்.

மேலும், உடல்­ந­ல­மு­டன் இருக்­கும் சிறு­வர்­கள் எப்­படி முகா­மில் நடந்­து ­கொள்­வார்­கள் என்ற ஓர் அனு­ப­வத்­தைப் பெற்­ற­தாகவும் அவர் பகிர்ந்­தார்.

சத்­யா­வின் தந்­தை­யான திரு ஆனந்த், “இந்த முகாம் மூலம், சத்­தி­யாவை போன்ற பிள்­ளை­கள் பெற்­றோ­ரின் ஆத­ர­வின்றி, தன்­னிச்­சை­யாக எப்­படி வாழ்­வது என்­பதை கற்­றுக்­கொள்­வார்­கள்.

“மேலும், அன்­றா­டம் மற்ற பிள்­ளை­கள்போல இன்­ப­மாக வெளியே செல்­வது, விளை­யாட்­டு­களில் ஈடு­ப­டு­வது போன்ற வாய்ப்­பு­கள் கிட்­டாத இந்த சிறு­வர்­க­ளுக்கு, இதுபோன்ற முகாம், அவர்­க­ளின் வாழ்­வில் மறக்க முடி­யாத ஓர் அனு­ப­வத்தை அளிப்பதோடு இந்த அனு­ப­வம் அடுத்த ஆண்டு மீண்­டும் இந்த முகாம் தொடங்­கும் வரை அவர்­

க­ளின் நினைவில் இருக்கும்,” என்­றும் கூறி­னார்.

sanush@sph.com.sg

சிறுநீரகக் கோளாறினால் சிகிச்சை பெறும் ரயான் மேத்யூவும் முகாமில் பங்கேற்றார். இவருடைய இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கிறார் இந்த தொண்டூழியர்.

தொண்டூழியர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் உதவியோடு சிறுவர்கள் கட்டைகளை அடுக்கி, விளையாடி மகிழ்கிறார்கள்.

மற்றவர்களுடன் இணைந்து விளையாடி மகிழ்கிறார் இந்த சிறுவன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!