விளைச்சல் குறைந்ததால் விலைகள் உயர்ந்தன

விளைச்சல் குறைந்ததால் விலைகள் உயர்ந்தன

4 mins read
13af8b50-b843-4159-916b-bf8b6aa7895e
-

ரச்­சனா வேலா­யு­தம்

மலே­சி­யா­வில் மழை, வெள்­ளம் கார­ணமாக காய்­களின் வரத்து குறைந்­த­தால் இறக்­கு­மதி செய்­யப்­படும் காய்­

க­றி­க­ளின் விலை­கள் பல மடங்கு உயர்ந்­துள்ளன.

அத­னால் சிங்­கப்­பூர் மளிகை வர்த்­த­கர்­களும் காய்­க­றி­க­ளின் விலை­களை வேறு வழி­யின்றி உயர்த்­தும் சூழ்­நி­லைக்­குத் தள்­ளப்­பட்டு உள்­ள­னர்.

தொற்­று­நோய் காலத்­திற்கு பின், கடை­க­ளுக்குச் சென்று காய்கறிகள் வாங்­கும் பழக்­கம் அதி­க­ரிக்­கும் இவ்­வே­ளை­யில், மளிகைப் பொருள்­களை

வாங்­கு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை டிசம்­பர் மாதத்­தில் குறைந்­துள்­ளது என்று 'சென்னை ட்ரே­டிங் & சூப்­பர்­மார்ட் பிரைவேட் லிமிட்டெட்' திரு வை. இராம மூர்த்தி குறிப்­பிட்­டார்.

"இந்த விடு­மு­றைக் காலத்­தில், பலர் வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்று விடு­வ­தால் காய்­க­றி­க­ளுக்­கான தேவை குறைந்து, விநி­யோ­கம் கிட்­டத்­தட்ட 20 விழுக்­காடு குறைந்­துள்­ளது.

"மேலும் விலை­கள் உய­ர்வ­தால், விற்­ப­னை­யும் பாதிக்­கப்படுகிறது. புத்தாண்டில், காய்­க­றி­க­ளுக்­கான தேவை அதி­க­ரிக்­கும்­போது விலை யேற்றம் ஏற்பட வாய்ப்­புள்­ளது," என்றார் திரு வை.இராம மூர்த்தி.

எனி­னும், மலே­சி­யா­வி­லி­ருந்து சிங்கப்பூருக்கு வரும் காய்கறிகளின் விலை­கள், வரி, சரக்கு கட்­ட­ணம் ஆகியவற்றால் உயர்ந்­துள்­ளது என்று குறிப்­பிட்­டார்.

இதற்குமுன் மலே­சி­யாவில் இருந்து வரும் ஒரு கிலோ $1.50க்கு வாங்­கப்­பட்ட தக்­காளி தற்­பொ­ழுது $2.80க்கு வாங்­கப்­ப­டு­வ­தா­க­வும் கூறி­னார்.

விலை உயர்வு கார­ணத்­தி­னால் மலே­சி­யா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்

­வ­தைக் குறைத்து, சிங்கப்பூரில் விளையும் காய்கறிகள், இந்­தி­யா­வி­ல் இருந்து வரும் காய்­க­றி­களை வாங்­கு­வ­தாக கூறி­னார் ஸ்ரீ செல்வி கடை­யின் உரி­மை­யா­ளர் திரு சோ. கோவிந்­த­சாமி.

"விலை­கள் உய­ரும்­போது, வேறு நாடு­க­ளி­லி­ருந்து வாங்க நேரி­டும். அதனால் அக்­காய்­கறிகளின் தரம் குறைய வாய்ப்­புள்­ளது.

"தக்­காளி போன்ற விரை­வில் அழு­கிப்­போ­கும் காய்­க­றி­கள் இந்­தி­யா­வில் இருந்து வர­வ­ழைப்­ப­தால் நட்­டம்

ஏற்­ப­டு­கிறது.

"விமா­னத்­தில் வரும் இந்த பொருள்களுக்கு ஒரு கிலோ­வுக்கு மூன்று வெள்ளி கட்­ட­ணம் செலுத்த வேண்­டும். ஆனால் மலே­சி­யா­வில் இருந்து வரும் காய்­க­றி­களுக்கு கிலோ­வுக்கு பத்து காசு மட்டுமே கட்டணமாக செலுத்தப் படுகிறது.

"செய்­தி­கள் படிப்­ப­தால் மக்­க­ளுக்கு இந்த நிலைமை புரியும். விலை உயர்­வு­க­ளின் விழு­க்காட்டை பொறுத்து காய்­க­றி­க­ளின் விலை­யும் அதி­க­ரிக்­கின்­றன. இந்த விலை உயர்­

வி­னால் அதிக லாபம் கிடைப்­ப­தில்லை.

சில காய்­க­றி­கள் பெரி­தாக உள்­ள­தா­லும் விரை­வாக அழு­கிப்­போ­கக்­

கூ­டி­ய­தாக இருப்­ப­தா­லும் மற்ற நாடு­

க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­வது கடி­னம்," என்றார் இராம மூர்த்தி.

"மலே­சி­யா­வி­லி­ருந்து வாங்க வேண்­டிய சூழ்­நி­லையை மக்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும் என்­றார் பால­வீர டிரே­டிங் நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ளர் திரு பாலா.

"மக்­கள் விலை உயர்வை பற்றி கடைக்­கா­ரர்­க­ளி­டம் புலம்­பு­வ­தோடு பணம் சேமிக்க பல உத்­தி­களை கையாளுகி­றார்­கள். ஒரு கிலோ தக்­காளி வாங்­கு­வ­தற்கு பதில் அரை கிலோ மட்­டுமே வாங்­கு­கி­றார்­கள்.

"குறைந்த அள­வில் வாங்­கு­வ­தோடு, மலி­வாக விற்­கும் கடை­களை நாடி செல்­கி­றார்­கள். அத­னால் சிறிய வர்த்­த­கர்­கள் இறக்­கு­மதி செய்­யும் நிறு­வ­னங்­க­ளோடு போட்டி போட முடி­யா­மல் தவிக்­கின்­ற­னர்," என்றார் திரு பாலா.

இந்­தக் கருத்­தை­யும் திரு இராம மூர்த்­தி­யும் குறிப்­பிட்­டார். "என்­டி­யுசி போன்ற பெரிய நிறு­வ­னங்­கள் தங்­க­ளின் விலை­களை வாரத்­திற்கு ஒரு முறை­தான் மாற்­று­வார்­கள். ஆனால், தனிப்­பட்ட வர்த்­த­கர்­கள் அன்று வாங்­கும் விலைக்கு ஏற்ற விலை­யில்­தான் காய்­க­றி­களை விற்க முடி­யும். இந்த உறுதி இல்­லாத நிலை அவர்­க­ளுக்கு தீங்­காக முடி­கிறது," என்றார் திரு ராம மூர்த்தி.

"மளி­கைப் பொருள்­களை மலே­சி­யா­விற்­குச் சென்று வாங்குவேன். காய்­

க­றி­களை மட்­டும் சிங்­கப்­பூ­ரில் வாங்­கு­வேன். சிங்­கப்­பூர் காய்­க­றி­க­ளின் தரம் நன்­றாக உள்­ளது. ஆனால் விலை­கள் மட்­டும் கொஞ்­சம் கொஞ்­ச­மாக உயர்­வ­தால், நான் இந்த விலை உயர்வை கவ­னிக்­க­வில்லை," என்று கூறி­னார் 60 வயதாகும் திரு­வாட்டி கலா­வதி.

நல்ல தர­முள்ள காய்­க­றி­களை வாங்க சிங்­கப்­பூ­ரில் பல இடங்­க­ளுக்கு சொல்­கி­றார் இவர். பணம் சேமிக்க, அவர் தனது தள்­ளு­வண்­டி­யு­டன் கடை கடை­யா­கச் சென்று, விலை­க­ளைக் கவ­னித்து, பிற­கு­தான் காய்­க­றி­களை வாங்­கு­வதாகக் கூறி­னார்.

விலை­க­ளின் உயர்வை சமா­ளிக்­கும் போது தரத்தை உன்­னிப்­பாக கவ­னிக்கத் தேவை இல்லை என்­கி­றார் திரு­வாட்டி தேவி. 58 வய­தான இவர், விலை குறைந்த நேரங்­களில் காய்­க­றி­களை வாங்கி, குளிர்­சா­தனப் பெட்­டி­யின் உறைய வைக்கப்படும் பிரி­வில் வைத்து பயன்­ப­டுத்­து­வ­தா­கக் கூறி­னார்.

"சில காய்­க­றி­களை உறை­யும் பிரி­வில் வைத்து, நீண்ட நாள்­க­ளுக்கு பயன்­ப­டுத்­த­லாம். இத­னால், காய்­க­றி­கள் வீணாவதைத் தடுக்கலாம். அதே சம­யம் சத்­துள்ள காய்­க­றி­களும் எனக்கு கிடைக்­கிறது," என்று கூறி­னார் திரு­வாட்டி தேவி.

நான்கு நாள்­களில் அழுகிப் போகும் காய்­கறி, இலை­கள், உறையும் பகுதியில் வைத்து பயன்படுத்தும்போது காய்கறிகள் வீணாவதைத் தடுக்க முடிகிறது. தரத்­தி­லும், சுவை­யி­லும் எந்த மாற்­றமும் இல்லை என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

அதிகரிக்கும் விலை­வாசி, வரி உயர்வு ஆகி­ய­வற்­று­டன் மலே­சி­யா­வி­லி­ருந்து வரும் காய்­க­றி­க­ளின் விலை உயர்­வும் சேர்க்­கப்­பட்­டுள்­ளது. அதைச் சமா­ளிக்க, சிங்­கப்­பூர் மக்­கள் தொடர்ந்து வெவ்­வேறு புதிய வழி­களை நாடு­கின்­ற­னர்.

அதே சம­யம், இந்த ஏறும் விலை­களை எதிர்த்து சிங்­கப்­பூர் அர­சாங்­கம் உதவி செய்­யுமா என்று காய்­கறி விற்­ப­னை­யா­ளர்­கள் காத்து இருக்­கி­றார்­கள்.

தேக்கா வட்டாரத்தில் இருக்கும் கடையில் காய்கள் வாங்கும் தம்பதி. கோப்புப் படம்