காற்பந்து உலகம் கண்ணீருடன் இறுதிவிடை

காற்பந்து உலகம் கண்ணீருடன் இறுதிவிடை

2 mins read
0bfac599-41de-48b2-8a70-fa16b584c407
-
multi-img1 of 2

சான்டோஸ்: பிரே­சில் காற்­பந்து சகாப்­தம் பெலே, தமது கடைசி ஆட்­டத்தை 1977ல் விளை­யா­டி­னார் - அவ­ரு­டைய நியூ­யார்க் காஸ்­மோஸ் குழு­விற்­கும் அவ­ரு­டைய இத­யத்­தில் நிறைந்­தி­ருந்த, பிரே­சி­லில் தமது காற்­பந்து வாழ்க்­கை­யைத் தொடங்கி, முடித்த இட­மான சான்­டோஸ் குழு­விற்­கும் இடை­யி­லான ஆட்­டம் அது.

அந்த ஆட்­டத்­தில் முதல் பாதி­யில் காஸ்­மோஸ் சார்­பா­க­வும் இரண்­டாம் பாதி­யில் சான்­டோஸ் சார்­பா­க­வும் பெலே விளை­யா­டி­னார். இப்­போது, பெலே­வின் இறு­திச் சடங்­கிற்­காக சான்­டோஸ் விளை­யாட்­ட­ரங்­கம் தயா­ராகி வரு­கிறது.

கடந்த வியா­ழ­னன்று தமது 82 வய­தில் கால­மான பிரே­சி­லின் தேசிய புதை­ய­லாக விளங்­கிய பெலே­வின் நல்­லு­டல் நாளை காலை சான்­டோ­சுக்­குக் கொண்டு செல்­லப்­படும். அங்­குள்ள விலோ பெல்­மிரோ விளை­யாட்­ட­ரங்­கத் திடல் நடுவே பெலே­வின் நல்­லு­டல் தாங்­கிய சவப்­பெட்டி வைக்­கப்­படும்.

திங்­கட்­கி­ழமை காலை 10 மணி முதல் 24 மணி நேரத்­திற்கு அவ­ரது நல்­லு­டல் பொது­மக்­கள் அஞ்­சலி செலுத்­து­வ­தற்­காக அங்கு வைக்­கப்­பட்­டி­ருக்­கும்.

சான்­டோஸ் நக­ரின் முக்­கி­யப் பகு­தி­கள் வழி­யாக பெலே­வின் நல்­லு­டலை ஊர்­வ­ல­மாக எடுத்­துச் செல்­ல­வும் திட்­ட­மி­டப்­பட்­டு உள்­ளது.

பின்­னர் அங்­குள்ள 14 தளங்­களைக் கொண்ட நெக்­ரோ­போல் எக்­யூ­மெ­னிக்கா கல்­ல­றைத் தோட்­டத்­தில் அவ­ரது நல்­லு­டல் அடக்­கம் செய்­யப்­படும். கடந்த 2020ஆம் ஆண்டு உயி­ரி­ழந்த தம் இளைய சகோ­த­ரர் ஸோக்­கா­விற்­கும் 2006ஆம் ஆண்டு இறந்­து­போன தம் மகள் சாண்ட்­ரா­விற்­கும் அருகே அவர் நல்­ல­டக்­கம் செய்­யப்­ப­டு­வார்.

முன்­ன­தாக, பெலே­வின் இறப்பை அடுத்து, அவ­ருக்கு மூன்று நாள் துக்­கம் கடைப்­பிடிக்­கப்­படும் என்று பிரே­சில் அர­சாங்­கம் அறி­வித்­தி­ருந்­தது.

ஐரோப்பிய நாடுகள் மரியாதை

சுவிட்­சர்­லாந்­தின் ஸூரிக் நக­ரில் அமைந்­துள்ள அனைத்­து­ல­கக் காற்­பந்­துக் கூட்­ட­மைப்­பின் (ஃபிஃபா) தலை­மை­ய­கத்­தில் அனைத்து உறுப்பு நாடு­க­ளின் கொடி­களும் நேற்று முன்­தி­னம் அரைக்­கம்­பத்­தில் பறக்­க­வி­டப்­பட்டன.

இரு­ப­தாம் நூற்­றாண்­டின் ஆகச் சிறந்த காற்­பந்து ஆட்­டக்­கா­ரர் என அறி­வித்து, ஃபிஃபா பெலே­வைச் சிறப்­பித்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. மூன்­று­முறை உல­கக் கிண்­ணம் வென்ற ஒரே ஆட்­டக்­கா­ரர் அவர்­தான்.

இங்­கி­லாந்து, இத்­தாலி, பிரான்ஸ் ஆகிய நாடு­க­ளின் முதல்­நிலை காற்­பந்து லீக் போட்­டி­களில் அடுத்த சுற்று ஆட்­டங்­களின்­போது பெலே நினை­வு­கூரப்­ப­டு­வார் என்று அந்­நா­டு­களின் காற்­பந்­துச் சங்­கங்­கள் அறி­வித்­துள்­ளன.

ஆட்­டம் தொடங்­கு­முன் ஒரு நிமிடம் கர­வொலி எழுப்­பப்­படும் என்று இங்­கி­லாந்­தும் பிரான்­சும் அறி­வித்­துள்­ளன. அது­போல, இத்­தா­லி­யி­லும் ஸ்பெ­யி­னி­லும் ஒரு நிமிடம் மௌன அஞ்­சலி செலுத்­தப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.