வித்யா அருணின் 'காலாழ் களரில் உலகு' சிறுகதைத் தொகுப்பு நவம்பர் 26ஆம் தேதி இணையம் வழியாக அறிமுகம் கண்டது. எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் முன்னுரையுடன் வெளிவந்துள்ள இந்நூலில் சிங்கப்பூரைக் களமாகக்கொண்ட 12 சிறுகதைகள் உள்ளன.
அறிவியல் கதைகள், சமூகக் கதைகள் என்று பல்வேறு வகைமைகளிலும் வித்யா அருண் வெற்றிபெற்றுள்ளதாக நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா பாராட்டினார்.
'சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்த்திங்கு சேர்ப்பீர்' என்ற பாரதியின் வரிகளுக்கு மற்றொரு சான்றாக இத்தொகுப்பு இருப்பதாக பன்மொழி எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான மதுமிதா தன் உரையில் கூறினார்.
'கதை எனப்படுவது' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய திரு நாஞ்சில் நாடன், தமிழில் முதல் சிறுகதை எப்போது எழுதப்பட்டது என்று தொடங்கி, உல கெங்கிலுமிருந்து எழுதப்படும் தமிழ்ச் சிறுகதைகள் நம்பிக்கை அளிப்பதாக சொன்னார்.
மேலும் திருக்குறள், முத்தொள்ளாயிரம், புறநானூறு, திருமுறை போன்ற பல நூல்களிலிருந்து, சிறப்பான எடுத்துக்காட்டுகளோடு, அவற்றில் சிறுகதைக்கான பண்புகள் காணப்படுவதைச் சுட்டினார்.
நூல் வேண்டுவோர் தொடர்புகொள்க திருமதி வித்யா அருண்: 94895848 (kavidhya@gmail.com)

