நாளை முடிவுசெய்யும் காலை உணவு

நாளை முடிவுசெய்யும் காலை உணவு

2 mins read

உடல் ஒரு­நாள் முழு­வ­தும் எப்­படி இயங்­கப்­போ­கிறது என்­பது காலை­யில் வெறும் வயிற்­றில் முத­லில் என்ன சாப்­பி­டு­கி­றோம் என்­பதை பொறுத்­து­தான் இருக்­கிறது. இந்த உண­வா­னது நம் உடல்­நி­லையை பொறுத்­தும், சூழ்­நி­லையை பொறுத்­தும்­தான் இருக்க வேண்­டும்.

தண்­ணீர்: ஒரு நாள் முழு­வ­தும் குடிக்க வேண்­டிய தண்­ணீரை காலை எழுந்­த­வு­டன் வெறும் வயிற்­றில் அரை­மணி நேரத்­திற்­குள் குடிக்க வேண்­டும். குளிர்ந்த நீர் குடிப்­பதே நல்­லது. குளிர்ந்த நீருக்கு அமி­லத்­தைக் குறைக்­கும் தன்மை அதி­கம். நீர் அமி­லத்­தின் அதி­கப்­ப­டி­யான வீரி­யத்தை சமன்­செய்து வயிற்றை சீராக இயக்க உத­வு­கிறது. தொடர்ந்து தண்­ணீர் குடித்து வந்­தால் உயர் ரத்த அழுத்­தம், நீரி­ழிவு, மார­டைப்பு, உடல்­ப­ரு­மன், சிறு­நீ­ர­கக் கோளாறு போன்ற நோய்­க­ளின் தாக்­கத்தை வெகு­வாக குறைக்க முடி­யும். முக்­கால் லிட்­டர் நீரை முழு­மை­யாக குடிக்க முடி­யா­த­வர்­கள் 5 நிமிட இடை­வெ­ளி­யில் நான்கு டம்­ள­ராக பிரித்து குடிக்­க­லாம்.

வெந்­த­யம்: நீரி­ழிவு, உயர் ரத்த அழுத்த நோயா­ளி­க­ளுக்கு அரு­ம­ருந்து. உடல் சூட்டை தணிக்­கும். வெந்­த­யத்தை முதல் நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊற­வைத்து, மறு­நாள் வெறும் வயிற்­றில் தண்­ணீ­ரு­டன் சேர்த்து சாப்­பிட வேண்­டும்.

ஊற வைக்­கா­மல் அப்­ப­டியே சாப்­பிடு­வது செரி­மா­னத்தை தாம­தப்­ப­டுத்தி மலச்­சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­வி­டும்.

வெந்­த­யம், மோர் இரண்­டுமே குளிர்ச்­சியை தரக்­கூ­டி­யது என்­ப­தால் உட­ன­டி­யாக சளி பிடிக்­கக்­கூ­டிய வாய்ப்பு அதி­கம் உள்­ளது. சில நேரங்­களில் வயிற்று போக்­கிற்­கும் வழி­வ­குத்­து­வி­டும்.

அரு­கம்­புல்: பைகளில் அடைத்து விற்­கப்­படும் அரு­கம்­புல் பொடி உட­லுக்கு உகந்­தது அல்ல. அரு­கம்­புல்­லின் தண்டு மட்­டும்­தான் மருத்­து­வ­கு­ணம் கொண்­டது. இலை­யின் ஓரங்­களில் காணப்­படும் வெண்­மை­யான சுனைப் பகு­தி­யா­னது நச்­சுத்­தன்மை கொண்­ட­தால் வயிற்று போக்கை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய வாய்ப்பு உள்­ளது. அரு­கம்­புல் செடியை வீட்­டி­லேயே அரைத்து சாறு எடுத்து வெந்­நீ­ரு­டன் பயன்­ப­டுத்­து­வது நல்­லது.

இஞ்சி: இஞ்­சி­யில் தோல் பகுதி நச்­சுத்­தன்மை வாய்ந்­தது. இஞ்­சித் தோலை நீக்­கி­விட்டு சாறு எடுத்து அதோடு தேன் கலந்து குடித்து வந்­தால் தேவை­யில்­லாத கொழுப்பு குறை­வ­து­டன், நுரை­யீரல் தொடர்­பான நோய்­களும் சரி­யா­கும். ஆனால் வாய்ப்­புண், வயிற்­றுப்­புண் உள்­ள­வர்­கள் இதை தவிர்ப்­பது நல்­லது.