சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மாதாந்திரக் கதைக்களத்தில் எழுத்தாளர் செ.ப. பன்னீர்செல்வம் 'நம் எழுத்துலகம்: சில பார்வைகள்' என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றவிருக்கிறார்.
கதைக்களம் வரும் சனிக்கிழமை, 7/1/2023 அன்று மாலை 5.00 மணிக்கு, சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் ஐந்தாவது தளத்தில் உள்ள இமேஜினேஷன் அறையில் நடைபெறவிருக்கிறது. மேலும், கதைக்களத்திற்கு வந்திருக்கும் போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலுடன் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும்.
பிப்ரவரி மாத நூல் அறிமுகப் போட்டிக்கு, சிங்கப்பூர்த் தேசிய நூலகத்திலுள்ள நூல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் சுவையான அறிமுகத்தை எழுதி அனுப்ப வேண்டும்.
மூன்று பிரிவுகளாக இடம்பெறும் பிப்ரவரி மாத சிறுகதைப் போட்டிக்கு எழுதுவதற்கான தொடக்க வரிகள்:
உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரிவு: 200 முதல் 300 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
'காற்பந்தாட்டம் என்றாலே கோபப்படும் அப்பாவின் முகத்தில் அன்று உற்சாகம் பொங்கியது.'
இளையர் பிரிவு: 300 முதல் 400 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
'மலர்க் குவியலுக்குள் விழுந்து கிடப்பதைப்போல மனம் பரவசமானது.'
பொதுப்பிரிவு: 400 முதல் 500 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
"பொருள் சேவை வரி ஒரு விழுக்காடு அதிகரிக்கிறதுக்காகவா இவ்வளவு பொருள் வாங்கியிருக்கே?" என்று வியப்புடன் கேட்டார்.
படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு http://singaporetamilwriters.com/kkcontest என்ற மின்னியல் படிவத்தின் வழியாக 27/01/2023 வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பி வைக்கவும்.

