ஆய்வு: வேலையிட நண்பர்கள் முக்கியம்

ஆய்வு: வேலையிட நண்பர்கள் முக்கியம்

2 mins read
7ce08b06-bc73-4533-85ab-9201922e259f
-

உங்­க­ளின் ஒட்­டு­மொத்த நல­னுக்கு எது முக்­கி­யம்: நீங்­கள் செய்­யும் வேலையா, அல்­லது உங்­க­ளு­டன் வேலை செய்­யும் கூட்­டமா? 80 ஆண்­டு­க­ளுக்கு மேலாக நீளும் ஓர் ஆய்வை மேற்­கோள் காட்­டும் புதிய புத்­த­கம் ஒன்­றில், நாம் நினைப்­ப­தை­விட வேலை­யிட உற­வு­கள் அதிக முக்­கி­யத்­து­வம் பெறு­கின்­றன என்று அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. இந்த ஆய்­வுக்­காக பல தலை­மு­றை­களைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­கள் தங்­க­ளின் ஆய்­வில் பங்­கேற்­போரை வாழ்­நாள் முழுக்­கப் பின்­தொ­டர்ந்­துள்­ள­னர்.

பெரும்­பா­லும் 'ஹார்­வர்ட்' பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளா­க­வும் குறைந்த வரு­மா­னப் பிரி­வி­ன­ரா­க­வும் உள்ள இந்த ஆய்வு பங்­கேற்­பா­ளர்­களை ஆய்­வா­ளர்­கள் சில ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை பேட்டி காண்­ப­தும் கேள்­வி­க­ளுக்­குப் பதில் எழு­த­வும் வைக்­கின்­ற­னர். தற்­போது ஆய்­வின் பங்­கேற்­பா­ளர்­க­ளு­டைய பிள்­ளை­களும் ஆய்­வில் பங்­கேற்­கின்­ற­னர்.

நமது வாழ்­வா­தா­ரத்­திற்கு நாம் என்ன செய்­கி­றோம் என்­பதை மட்­டும் கவ­னிக்­கா­மல் யாரு­டன் அதைச் செய்­கி­றோம் என்­ப­தில் கூடு­தல் கவ­னம் செலுத்த வேண்­டும் என ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

"நாம் விழித்­தி­ருக்­கும் நேரத்­தில் பெரும்­பா­லான நேரத்தை வேலை­யில்­தான் செல­வி­டு­கிறோம். எங்­க­ளின் ஆய்­வுப் பங்­கேற்­பா­ளர்­க­ளைப் பல ஆண்­டு­களாக நாங்­கள் பின்­தொ­டர்ந்­த­தி­லி­ருந்து இப்­போது அவர்­க­ளின் பிள்­ளை­க­ளைப் பின்­தொ­டர்­வது வரை நாங்­கள் கண்­ட­றிந்­தது என்­ன­வென்­றால் வேலை­யி­டத்­தில் நாம் ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளும் உற­வு­கள் மிக முக்­கி­யம் என்­பதே. பல­ருக்­கும் முக்­கி­ய­மான ஓர் இணைப்பை ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கும் தன்மை, நாம் செய்­யும் வேலைக்கு உண்டு," என்று ஆய்வை மேற்­கொண்­ட­வர்­களில் ஒரு­வ­ரான மனோ­தத்­துவ நிபு­ணர் மார்க் ஸ்குல்ஸ் குறிப்­பிட்­டார்.

இந்த ஆய்­வின் மூலம் 'ஆக மகிழ்ச்­சி­யான மனி­தர்' எனப் பங்­கேற்­பா­ளர்­களில் ஒரு­வர் கண்­டறி­யப்­பட்­டுள்­ளார். ஆனால், இவர் எழுத்­தா­ளர் ஆக வேண்­டும் என்ற தம் கனவை அடை­ய­வில்லை. அதற்­குப் பதி­லாக ஆசி­ரி­யர் ஆனார்.

திட்­ட­மிட்­ட­வாறு நடக்­கா­மல் போன­து­டன் தந்­தை­யின் மர­ணம், தாயா­ருக்கு உடல்­ந­லக் குறைவு என்­றி­ருந்த அந்த 'ஆக மகிழ்ச்­சி­யான மனி­தர்', தம் மாண­வர்­களு­ட­னும் சக ஆசி­ரி­யர்­க­ளு­ட­னும் ஏற்­ப­டுத்­திக்­கொண்ட உற­வால் மகிழ்ச்­சி­யின் உச்­சத்தை எட்­டி­ய­தாக ஆய்வு கண்­ட­றிந்­தது.

இத­னால், 'லியோ' என்ற அந்த நபர், பதவி உயர்­வைக் கூட பல­முறை நிரா­க­ரித்­துள்­ளார்.

பணம் முக்­கி­ய­மல்ல என்று சொல்­லி­விட முடி­யாது. ஆனால் அடிப்­படை வச­தி­க­ளைத் தரும் நிதி நிலையை ஒரு­வர் பெற்ற பிறகு, மகிழ்ச்­சிக்கு பணம் அவ்­வ­ளவு முக்­கி­யத்­து­வம் பெறு­வதில்லை என்று புத்­த­கத்­தில் எழு­திய டாக்­டர் ஸ்குல்ஸ் மற்­றும் மன­நல மருத்­து­வர் ராபர்ட் வால்­டிங்­கர் குறிப்­பி­டு­கின்­ற­னர்.

லியோ எழுத்­தா­ளர் ஆகி­யி­ருந்­தால் பல நாட்­க­ளைத் தனி­மை­யில் கழித்­தி­ருப்­பார். ஆனால், வகுப்­ப­றை­க­ளி­லும் ஆசி­ரி­யர் அறை­க­ளி­லும் அவர் பெற்ற அனு­ப­வங்­களே அவ­ரின் அன்­றாட வேலை அனு­ப­வத்தை மெரு­கூட்டி அவ­ருக்கு மகிழ்ச்சி அளித்­தி­ருக்­கின்­றன என்று புத்­த­கத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

"மற்­ற­வர்­க­ளு­டன் உற­வா­டும் வாய்ப்பு எப்­போ­துமே நமக்கு இருக்­கிறது. உற­வு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வது சுல­ப­மல்ல. அந்த உற­வு­க­ளைக் கவ­னிப்­பது முக்­கியம். நட்­பில் எப்­போது எது நடக்­கும் என்று முன்­னு­ரைக்க முடி­யா­த­தால் அதில் ஆபத்­தும் சிக்­க­லும் இருக்­க­லாம். இருப்­பினும் வேலை­யி­டத்­தில் நமது நேரத்தை இன்­ப­மா­கக் கழிக்­க­வும் மகிழ்ச்­சியை உண­ர­வும் அந்த நட்பை நாடு­வது அவ­சி­யம்," என்­கின்­ற­னர் நூலா­சி­ரி­யர்­கள்.

செய்தி: புளூம்­பெர்க்,

படம்: வெக்­டீசி