சென்னை கண்காட்சியில் சிங்கப்பூர் நூல்கள் அறிமுகம்

சென்னை கண்காட்சியில் சிங்கப்பூர் நூல்கள் அறிமுகம்

2 mins read
8f190d83-885b-4708-94fc-cf6ee7284d19
-

சென்­னை­யில் தொடங்­கி­யுள்ள புத்­த­கக் கண் காட்­சி­யில் இடம்பெற்ற சிங்­கப்­பூ­ரின் காட்­சிக் கூடத்­தில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மூன்று சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர்­க­ளின் நூல்­கள் அறி­மு­கம் செய்­யப்­பட்­டன.

மூத்த பெண் எழுத்­தா­ளர் திரு­வாட்டி கம­லா­தேவி அர­விந்­த­னின் செம்­ப­வாங் நாவல், சிங்­கப்­பூ­ரின் முதல் பெண் நாவ­லா­சி­ரியை திரு­வாட்டி சூர்ய ரத்­னா­வின் அறம் சிறு­க­தைத் தொகுப்பு, திரு. நா. ஆண்­டி­யப் ­ப­னின் விண்­ணில் வீடு கட்டி எனும் பய­ணக் கட்­டுரை நூல் ஆகி­யவை அறி­மு­கம் கண்­டன.

அவற்றை முறையே லேனா தமிழ்­வா­ணன், நீதி­ய­ர­சர் மூ. புக­ழேந்தி, பாரதி கிருஷ்­ண­ கு­மார் ஆகி­யோர் சிறப்­பாக அறி­மு­கம் செய்­த­னர்.

தாங்­கள் கேள்­விப்­பட்­டி­ருந்த கம்­பத்து வாழ்க்­கை­யைத் திரு­வாட்டி கம­லா­தேவி கண்­முன்னே கொண்­டு­வந்து காட்டி இருக்­கி­றார் என்று லேனா தமிழ்­வா­ணன் புக­ழா­ரம் சூட்­டி­னார்.

களப்­ப­ணி­கள் செய்து இந்த நாவலை உரு­வாக்­கி­யி­ருப்­பது பாராட்­டுக்­கு­ரி­யது என்­றார் அவர்.

அறம் தொகுப்­பில் இடம்­பெற்­றுள்ள சிறு ­க­தை­கள் அனைத்­தும் மிகச் சிறப்­பாக வடி­ வ­மைக்­கப்­பட்­டுள்­ளன என்­றும் சூர்ய ரத்­னா­வின் சிறு­க­தை­கள் பல நாடு­க­ளைச் சம்­பந்­தப் ­ப­டுத்தி எழு­தப்­பட்­டுள்­ளது பாராட்­டுக்­கு­ரி­யது என்றும் அந்­நூலை அறி­மு­கப்­ப­டுத்­திய நீதி­ய­ர­சர் புக­ழேந்தி குறிப்பிட்டார்.

நா. ஆண்­டி­யப்­ப­னின் விண்­ணில் வீடு கட்டி நூலை அறி­மு­கம் செய்த பாரதி கிருஷ்­ண­கு­மார், நேர்­ம­றைச் சிந்­த­னை­யு­டன் நூல் எழு­தப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

பய­ணக்கட்­டுரை நூலைத் தமிழ் இலக்­கி­யத்­து­டன் இணைத்து எழு­தி­யி­ருப்­பது பாராட்டுக்கு­ரி­யது என்­றார் அவர்.

இறு­தி­யில் திரு­வாட்டி கம­லா­தேவி, திரு­வாட்டி சூர்ய ரத்னா, நா. ஆண்­டி­யப்­பன் ஆகி­யோர் ஏற்­புரை ஆற்­றி­னர்.

ஏற்­பு­ரை­யு­டன் இணைந்து நன்­றி­யு­ரை­யும் ஆற்­றிய திரு. ஆண்­டி­யப்­பன், தாம் கேட்­ட­வு­டன் உடனே ஒப்­புக்­கொண்டு அறி­மு­கப் பணி­யைச் செவ்­வனே செய்த லேனா தமிழ்­வா­ணன், நீதி­ய­ர­சர் புக­ழேந்தி, பாரதி கிருஷ்­ண­கு­மார் ஆகிய மூவ­ருக்­கும் நன்றி தெரி­வித்­துக்­கொண்­டார்.

சிங்­கப்­பூர் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத் துணைத் தலை­வர் திரு. சு. முத்­து­மா­ணிக்­கம் வர­வேற்­புரை ஆற்றி, நிகழ்ச்சியை நெறிப்படுத்­தி­னார். (தகவல்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்)