பொதுவாக பழங்களை உண்பது நல்லது என்பது தெரிந்ததே. இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் வாழைப்பழமும் (படம்) இதற்கு விதிவிலக்கல்ல.
எனினும், வாழைப்பழத்தை உட்கொள்வதில் மட்டும் நற்பலன்கள் இல்லை. இதைப் பசையாக்கித் தேய்த்துக்கொள்வதிலும் நன்மைகள் உண்டு.
பொடுகுப் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் வாழைப்பழத்தைத் தலையில் தேய்த்துக்கொள்வது நல்லது. வாழைப்பழத்தைப் பசையாக்கி அதில் எலுமிச்சைச் சாறு உள்ளிட்டவற்றைக் கலந்துகொண்டு இதைச் செய்யலாம்.
முடி சரியாக வளராதோருக்கும் வாழைப்பழம் தீர்வளிக்கிறது. வாழைப்பழத்தைக் கொண்டு 'மாஸ்க்' எனப்படும் அழகுப் பராமரிப்புக்கான பசைக் கவசம் செய்து தலையில் தேய்த்துக்கொள்வது முடியை வளரச் செய்ய உதவும். பழுத்த வாழைப்பழத்தையும் பப்பாளித் துண்டுகளையும் அறைத்து பசை செய்து தலையில் தேய்த்துக்கொண்டால் தலைமுடிக்கு நல்லது.