சிங்கப்பூரைச் சித்திரிக்கும் 60 மீட்டர் நீள ஓவியம்; 18 மாதங்களில் நிறைவுசெய்த ஓவியர்

சிங்கப்பூரைச் சித்திரிக்கும் 60 மீட்டர் நீள ஓவியம்; 18 மாதங்களில் நிறைவுசெய்த ஓவியர்

2 mins read
c541b00f-af6b-4f07-b236-70f2ac94be33
-

சுற்­றி­யி­ருந்த ஏறத்­தாழ 30 பேர் இமை கொட்­டா­மல் பார்த்­தி­ருக்க, தமது 18 மாத உழைப்­பில் உரு­வான சித்­தி­ரத்தை தியோங் பாரு சமூக மன்­றத்­தில் நேற்று நிறைவு செய்­தார் சிங்­கப்­பூர் ஓவி­யர் யிப் இயூ சோங்.

சிங்­கப்­பூர் காட்­சி­களை உள்­ள­டக்­கிய அந்த ஓவி­யம் 60 மீட்­டர் நீளம் கொண்­டது. அதா­வது ஐந்து இரண்டு மாடி பேருந்­து­களை ஒன்­றாக நிற்க வைத்­தால் உள்ள நீளம் அது. 54 வயது திரு யிப், வரைந்­துள்ள ஆக நீள­மான ஓவி­ய­மும் அது­தான். அவர் வரை­வ­தற்கு மிக நீண்­ட­கா­லம் எடுத்­துக்­கொண்ட ஓவி­ய­மும் அது­தான்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்­தில் திரு யிப் ஓவி­யத்­தைத் தொடங்­கி­னார். இடை­யி­டையே மற்ற ஓவி­யப் பணி­க­ளை­யும் அவர் மேற்­கொண்­டார்.

ஓவி­யத்­துக்கு அவர் இன்­ன­மும் பெயர் சூட்­ட­வில்லை. ஆனால் இவ்­வாண்டு பிற்­ப­கு­தி­யில் அதைக் காட்­சிக்கு வைக்க அவர் திட்­ட­மி­டு­கி­றார்.

27 கான்­வஸ் திரை­க­ளைச் சேர்த்து திரு யிப் வரைந்த ஓவி­யம், 1970களி­லும் 1980களி­லும் இருந்த சிங்­கப்­பூ­ரைக் கண்­முன் கொண்டு வந்­துள்­ளது. தமது இள­மைக் கால நினை­வு­க­ளைக் காட்­சிப்­ ப­டுத்தி உள்­ள­தாக அவர் கூறி­னார்.

பர­ப­ரப்­பான பண­ப்ப­ரி­வர்த்­தனை வணி­கர்­களும் நினை­வுப்­ப­ரி­சு­களை விற்ற கடை­களும் பர­ப­ரப்­பாக இயங்­கிய ராஃபிள்ஸ் பிளே­சின் சேஞ் ஆலி, தெக்­கோங் தீவில் உள்ள அடிப்­படை ராணு­வப் பயிற்சி முகா­மின் ஒரு படுக்கை அருகே நிற்­கும் பயிற்­சி­யா­ளர், என சிங்­கப்­பூ­ருக்கே சொந்­த­மான காட்­சி­கள் அவ­ரது கைவண்­ணத்­தில் ஓவி­ய­மாகின.

நியூ பிரிட்ஜ் ரோட்­டில் அமைந்­துள்ள கொங் சாவ் வுய் கூன் குல­ம­ரபு சங்­கக் கட்­ட­டத்­தின் மேலே சிங்க நட­ன­ம­ணி­களும் தற்­காப்­புக் கலை நிபு­ண­ரும் பயிற்சி செய்­யும் காட்­சியை வரைந்து திரு யிப் ஓவியத்தை நேற்று நிறைவு செய்தார்.

நீள­மான சீனப் பாரம்­ப­ரிய சுருள் தாள்­களை நினை­வு­ப­டுத்­தும் வகை­யில் சிங்­கப்­பூர் பாணி­யில் ஓவி­யத்தை வரை­யும்­படி தமது நண்­பர் ஒரு­வர் ஊக்­கு­வித்­த­தாக திரு யிப் கூறி­னார்.

சிங்­கப்­பூர் காட்­சி­க­ளைக் கொண்ட ஓவி­யம் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு நெருக்­க­மாக இருக்­கும் என்று அவர் நினைத்­தார். தமது கற்­ப­னை­யில் தோன்­றிய கதை­களை ஓவி­ய­மாக வடி­த்­த­தா­க­வும் அவை உண்­மை­யில் சித்­தி­ரிப்­பு­கள் என்­றும் திரு யிப் குறிப்­பிட்­டார்.