தண்ணீர் குடிக்க மறக்க வேண்டாம்

3 mins read
4c893fde-a746-4477-9a25-ea17d1235ef5
இப்­போது அண்­மைய ஆய்­வொன்று போது­மான தண்­ணீர் குடிப்­ப­தால் உடல் வேக­மாக மூப்­ப­டை­வ­தைத் தடுக்­க­லாம். படம்: பிக்ஸாபே -

தண்­ணீர் உட­லுக்கு அவ­சி­யம். தின­மும் குறைந்­தது இரண்டு லிட்­டர் தண்­ணீர் குடிப்­பது பெரும்­பா­லா­ன­வர்களுக்கு நன்மை பயக்­கும் என்று மருத்­து­வர்­கள் பல­கா­ல­மாக அறி­வு­றுத்தி வரு­கின்­ற­னர்.

இது நம்­மில் பல­ருக்­குத் தெரிந்த ஒன்று என்­ற­போ­தும் சில நேரங்­களில் தண்­ணீர்­தானே என்று நாம் அலட்­சி­ய­மாக இருந்­து­வி­டு­வது உண்டு.

உட­லில் தண்­ணீர் பற்­றாக்­குறை, பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு வழி­வ­குக்­கக்­கூ­டும். உடல் சோர்வு, தசை வலி, தலை சுற்­றல், குளிர்­ந­டுக்­கம் போன்­றவை ஏற்­ப­டக்­கூ­டும் என்று மருத்­து­வம் கூறு­கிறது.

இப்­போது அண்­மைய ஆய்­வொன்று போது­மான தண்­ணீர் குடிப்­ப­தால் உடல் வேக­மாக மூப்­ப­டை­வ­தைத் தடுக்­க­லாம் என்­றும் பல நீண்­ட­கால நன்­மை­களை அது அளிக்­கும் என்று தெரி­வித்­துள்­ளது.

போது­மான தண்­ணீர் குடிக்­கா­த­போது அதற்கு நேர் எதி­ரான விளை­வு­கள் ஏற்­ப­டக்­கூ­டும் என்று குறிப்­பிட்­டுள்­ளது.

இப­யோ­மெ­டி­சன் எனும் ஆய்­வி­த­ழில் அந்த ஆய்வு வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. 30 ஆண்டு கால­கட்­டத்­தில் 11,255 பெரி­யவர்­க­ளின் உடல்­நல விவ­ரங்­கள் சேக­ரிக்­கப்­பட்டு ஆய்வு செய்­யப்­பட்­டன.

உட­லில் தண்­ணீர் அளவு குறை­யும்­போது ரத்­தத்­தில் உப்­பின் அளவு கூடு­கிறது. அவ்­வாறு ரத்­தத்­தில் உப்­பின் அளவு கூடும்­போது உட­லில் ஏற்­படும் மாற்­றங்­களை ஆய்­வா­ளர்­கள் கவ­னித்­த­னர்.

ஆய்­வில் கலந்­து­கொண்­ட­வர்­கள் சுமார் 40 முதல் 50 வய­து இருந்தது முதல், அவர்கள் 70 வயதைக் கடந்த வரை அவர்­க­ளின் உடல்­ந­லம் ஆரா­யப்­பட்­டது.

உட­லில் உப்­பின் அளவு குறை­வாக இருந்­த­வர்­க­ளை­விட அது சற்று அதி­க­மாக இருந்­த­வர்­க­ளுக்கு நாள்­பட்ட நோய் ஏற்­படும் வாய்ப்பு அதி­க­ரித்­தது.

அவர்­க­ளுக்கு இதய செய­லி­ழப்பு, பல்­வேறு இதய நோய்­கள், வாத­நோய், நுரை­யீ­ரல் நோய்­கள், நீரி­ழிவு, மற­தி­நோய் போன்­றவை ஏற்­படும் அபா­யம் அதி­க­மாய் இருந்­தது.

மேலும், அத்­த­கை­யோரின் உடல் மற்­ற­வர்­க­ளை­விட வேக­மாக மூப்­ப­டைந்­தது. அத­னு­டன் உட­லில் அதிக உப்பு இருந்­த­வர்­கள் இளம் வய­தில் மர­ணம் அடை­யும் அபா­ய­மும் உயர்ந்­தது.

உட­லில் போது­மான நீர்ச்­சத்து இருந்­தால், உடல் மூப்பை மெது­வ­டை­யச் செய்­ய­லாம் என்­றும் நோய்­கள் பீடிப்­ப­தைத் தள்­ளிப் போட­லாம் என்­றும் ஆய்வு முடி­வு­கள் காட்­டு­வ­தாக அமெ­ரிக்க தேசிய சுகா­தார நிலை­யத்­தைச் சேர்ந்த ஆய்­வா­ளர் நட்­டா­லியா டிமிட்­ரீவா தெரி­வித்­தார்.

தண்­ணீர் குடிப்­ப­தால் ஏற்­படும் நன்மை

தண்­ணீர் உட­லின் அனைத்து பாகங்­க­ளுக்­கும் ஊட்­டச்­சத்­துகளைச் சுமந்து செல்­வ­து­டன் கழி­வு­களை வெளி­யேற்­று­கிறது.

மாசுக்­கள், ஆரோக்­கி­ய­மற்ற உணவு வகை­களை உண்­ப­தால் நமது உட­லில் ஒரு நாளில் பல மில்­லி­யன் கழி­வு­கள் சேரும். அவற்றை உட­லி­லி­ருந்து முறை­யாக வெளி­யேற்ற தண்­ணீரை அதி­கம் குடிக்க வேண்­டும்.

நமது உட­லில் உள்ள 80 விழுக்­காட்டுத் தசை­கள் நீரால் சூழப்­பட்­டுள்­ளன. உட­லில் போதிய தண்­ணீர் இல்­லா­விட்­டால், தண்­ணீ­ருக்­குப் பதில் உட­லில் கழி­வு­கள் தங்கி, பிடிப்­பு­களை ஏற்­ப­டுத்­தும். எனவே அவற்றை வெளி­யேற்ற நீர் மிக­வும் அவ­சி­யம் ஆகும்.

பல­ருக்கு மலச்­சிக்­கல் பெரிய பிரச்­சினை. அதைக் குறைக்க அதி­கத் தண்­ணீர் அவ­சி­யம்.

தண்­ணீர் குட­ல் இ­யக்­கத்தை சீராக வைத்­தி­ருக்க உத­வு­வதே அதற்­குக் கார­ணம். போது­மான தண்­ணீர் குடிப்­ப­தால் வயிற்­றில் அமி­லத்­தன்மையும் குறை­யும்.

மேலும், தண்ணீர் மூளை­யில் 90 விழுக்காடு பங்கு வகிக்கிறது. போதிய தண்­ணீர் உட­லில் இல்­லா­விட்­டால், தலை­வலி, சோர்வு, மறதி போன்­றவை அதி­கம் ஏற்­படும். அதி­லும் 24 மணி­நே­ரத்­திற்கு மேலாக உடல் வறட்சி இருந்­தால், அது மிக­வும் மோச­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும்.

அத்துடன், போது­மான தண்­ணீர் குடிப்­பது, ஒழுங்­காக சிறு­நீர் கழிக்­க­வும் கல்­லீ­ர­லில் கற்­கள் ஏற்­ப­டு­வ­தைத் தடுக்­க­வும் உத­வும்.