உடல்நலனை சீர்குலைக்கும் துரித உணவு

உடல்நலனை சீர்குலைக்கும் துரித உணவு

3 mins read
4291d8f3-db94-420c-9408-5a5adf9ba645
-

மோன­லிசா

பரபரப்பான வாழ்க்கை முறை­யால் நம் வாழ்­வில் ஏற்­பட்­டுள்ள பல மாற்­றங்­களில் அபா­ய­க­ர­மான ஒன்று துரித உண­வு­வ­கை­களை உட்­கொள்­ளும் பழக்­கம்.

பார்ப்பதற்குப் பசி­யைத் தூண்­டும் விதத்­தி­லும் சுவைப்­ப­தற்கு ருசி­யா­க­வும் இருக்­கும் பீட்சா, பர்­கர், பொரித்த இறைச்சி போன்ற பல உண­வு­வ­கை­களை அடிக்­கடி உட்­கொள்­கி­றோம்.

ஆனால் இந்த உணவு வகை­கள் உடல்­ந­லத்­திற்கு கேடு விளை­விக்­கக்­கூ­டி­யவை.

அதில் சேர்க்­கப்­படும் நிறக் கல­வை­களும் 'அஜி­ன­மோட்டோ' போன்ற சுவை­யூட்­டி­களும் நாள­டை­வில் மனி­தர்­க­ளுக்கு வயிற்­றுப்­புண், புற்­று­நோய், உடல் எடை அதி­க­ரிப்பு, நீரி­ழிவு, இதய நோய் போன்ற பல பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

பெரி­ய­வர்­க­ளை­விட சிறு­வர்­களே இவ்­வகை உண­வு­களை அதி­கம் விரும்பி உண்­கின்­ற­னர். பிள்­ளை­க­ளின் வற்­பு­றுத்­த­லின் பேரில் பெற்­றோ­ரும் அடிக்­கடி இணை­யத்­தி­லும் நேர­டி­யா­கக் கடை­க­ளுக்­குச் சென்­றும் அவற்றை வாங்­கித் தரு­கின்­ற­னர்.

வள­ரும் பரு­வத்­தில் இவ்­வகை உணவுப் பழக்­கங்­கள் பிள்­ளை­ க­ளின் வளர்ச்­சியைப் பெரி­தும் பாதிக்­கும் என்­பதை உணர்­தல் அவ­சி­யம்.

கூடு­மா­ன­வரை வீட்­டி­லேயே சமைத்த உணவைச் சாப்­பி­டு­வதே உகந்­தது என்­பது நிபு­ணர்­க­ளின் ஆலோ­சனை.

வீட்­டிலே வித­வி­த­மான பல­வகை பாரம்­ப­ரிய உண­வு­களை ருசி­யு­டன் தயா­ரித்து உண்­ண­லாம். பிள்­ளை­க­ளுக்­கும் பாரம்­ப­ரிய உண­வு­வ­கை­களை அறி­மு­கப் படுத்த அது வாய்ப்பு தரும்.

அத்­து­டன், சிறு­வ­ய­தி­லேயே துரித உண­வு­கள் உடல்­ந­லத்­திற்கு அளிக்­கும் தீங்­கு­க­ளை­யும் விளக்­கிக்­கூறி அவர்­க­ளைப் பக்­கு­வப்­ப­டுத்­த­லாம்.

"துரித உண­வினை தினந் தோறும் உட்­கொள்­வ­தன் மூலம் நாள­டை­வில் உடல் பரு­மன், நீரி­ழிவு, உயர் ரத்த அழுத்­தம் போன்ற பல்­வேறு உடல்­ந­லக் கோளா­று­கள் ஏற்­ப­ட­லாம்.

குறிப்­பாக, பதின்ம வயதுப் பெண்­கள் இந்த உண­வு­வ­கை­களை அதி­கம் உட்­கொள்­வது பூப்­ப­டை­தல், மாத­வி­டாய் போன்­ற­வற்­றை­யும் பாதிக்­கும்," என்று கூறி­னார் பொது­நல மருத்­து­வ­ரான அஸ்­வின் வாரி­யர்.

மேலும், உணவை சரி­யான அள­வில் சரி­யான நேரத்­தில் சாப்­பி­டப் பழ­கிக் கொள்ளவேண்­டும் என்­றும் பசிக்­கும்­போது மட்­டும் தேவைக்­கேற்ப உண்­பதை விடுத்து பொழு­து­போக்­கிற்­கா­க­வும் ருசிக்­கா­க­வும் உண்­ப­தைத் தவிர்ப்­பது அவ­சி­யம் என்­றும் அவர் கூறி­னார்.

தனி­யார் நிறு­வ­னத்­தில் நிர்­வாக அதி­கா­ரி­யாகப் பணி­பு­ரி­யும் சரஸ்­வதி ராஜேந்­தி­ர­னு­டைய 8 வயது மக­னும் 6 வயது மகளும் ஓராண்­டுக்கு முன்­னர் ஒரு­முறை துரித வகை உண­வினை உண்­ட­னர். ருசி பிடித்துப் போகவே அடிக்­கடி அழைத்துச் செல்ல வேண்­டும் என்று அவர்­கள் தாயா­ரி­டம் அடம்­பி­டிக்க ஆரம்­பித்­த­னர். மாதத்­திற்கு இரு முறை என்று கட்­டுப்­ப­டுத்­தி­ய­போ­தும் ஒவ்­வொரு முறை­யும் அந்­நா­ளுக்­காக காத்­தி­ருக்க ஆரம்­பித்­த­னர்.

பிறகு இதற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கும் நோக்­கில் பிள்­ளை­க­ளுக்கு இவ்­வகை உணவு வகை­கள் ஏற்­ப­டுத்­தும் உடல் கோளாறு கள் பற்­றிய காணொ­ளி­க­ளைக் காண்­பித்­தார் இந்த தாயார்.

மேலும், பொது­நல மருத்­து­வ­ரி­டம் தமது பிள்­ளை­களை அழைத்துச் சென்று நேர­டி­யாக மருத்­து­வரே இதன் ஆபத்­து­களை விளக்­கு­வ­தைக் கேட்­கும்­படி செய்­தார்.

பல நாள் இம்­மு­யற்­சி­யில் ஈடு­பட்­ட­தன் பல­னாய் தற்­போது தமது பிள்­ளை­களே இது­போன்ற உண­வு­க­ளின் தீங்­கு­களை நண்­பர்­க­ளுக்கு விளக்­கு­கின்­ற­னர் என்று சரஸ்­வதி மகிழ்­வு­டன் கூறு­கி­றார். கூடு­த­லாக இவர் பல பாரம்­ப­ரிய உண­வு­வ­கை­க­ளை­யும் அன்­றா­டம் சமைக்­கத் தொடங்­கி­ இ­ருக்­கி­றார்.

monolisa@sph.com.sg