தெலுக் பிளாங்காவில் தமிழ் மொழித்திறன் போட்டி

தெலுக் பிளாங்காவில் தமிழ் மொழித்திறன் போட்டி

2 mins read
14ccdf08-9f48-4320-abbf-a3353fa194a6
-

தெலுக் பிளாங்கா சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­கு­ழு­வின் ஏற்­பாட்­டில் 35ஆம் ஆண்டு தமிழ் மொழித்­தி­றன் முதல் சுற்றுப் போட்­டி­கள் அனைத்­தும் தெலுக் பிளாங்கா சமூக மன்ற பல­நோக்கு மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது.

பிப்­ர­வரி 4ஆம் தேதி தொடக்­க­நிலை நான்­காம் வகுப்பு மாண­வர்­க­ளுக்­கான கட்­டு­ரைப் போட்­டி­யும் ஆறாம் வகுப்பு மாண­வர்­க­ளுக்­கான பேச்சுப் போட்­டி­யும் நடை­பெ­றும்.

பிப்­ர­வரி 11ஆம் தேதி தொடக்­க­நிலை 5ஆம் வகுப்புக் ­கான பேச்­சுப் போட்­டி­யும் 25ஆம் தேதி அன்று மூன்றாம் வகுப்பு மாண­வர்­க­ளுக்­கான கதை சொல்­லும் போட்­டி­யும் இடம்­பெ­றும்.

மார்ச் 4ஆம் தேதி சனிக்­கி­ழமை இரண்டாம் வகுப்பு மாண­வர்­க­ளுக்­கான வாசிப்­புப் போட்­டி­யும் 11ஆம் தேதி தொடக்­க­நிலை ஒன்­றாம் வகுப்பு மாண­வர்­க­ளுக்­கான பாட்­டுப் போட்­டி­யும் நடத்­தப்­படும்.

மேற்­கண்ட நாள்­கள் எல்­லாம் சனிக்­கி­ழ­மை­கள் ஆகும். எல்லா நாள்­க­ளி­லும் போட்­டி­கள் பிற்­ப­கல் 1.30 மணிக்­குத் தொடங்­கும்.

அனைத்­துப் போட்­டி­யா­ளர்­களும் பிற்­ப­கல் 1.00 மணி முதல் தெலுக் பிளாங்கா சமூக மன்ற பல­நோக்கு மண்­ட­பத்­தில் பதிவு செய்ய வேண்­டும்.

இறு­திச் சுற்­று­கள் அனைத்­தும் மார்ச் 25ஆம் தேதி பிற் பகல் 1.00 மணி முதல் தெலுக் பிளாங்கா சமூக மன்ற கேட்­போர் கூடத்­தில் நடை­பெ­றும்.

போட்­டி­க­ளுக்­கான விண்­ணப்­பப் படி­வங்­கள் எல்லா தொடக்­கப்­பள்­ளி­ தலைமை ஆசி­ரி­யர்­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளதாக தெலுக் பிளாங்கா சமூக மன்ற இந்­தி­யர் நற்­ பணிச் செயற்­குழு கூறி­யது.

நிய­ம­னம் செய்­யப்­பட்ட மாண­வர்­க­ளின் பெயர்­கள் அடங்­கிய விண்­ணப்­பங்­களை, மின்­னஞ்­சல் அல்­லது தொலைப்­பி­ரதி மூல­மாக வரும் ஜன­வரி 30ஆம் தேதிக்­குள் தெலுக் பிளாங்கா சமூக மன்­றத்­துக்கு அனுப்­பு­மாறு பள்ளி முதல்­வர் ­க­ளை­யும் தமிழ் ஆசி­ரி­யர்­க­ளை­யும் நற்­ப­ணிச் செயற்­குழு கேட்­டுக்­கொண்­டது.

மேல்விவ­ரம் பெற தொடர்பு ­கொள்ள வேண்­டி­ய­வர்­கள்:

கி. இரா­ம­மூர்த்தி - 8118 4671 க. ராஜா­ராம் - 9771 4943

ச. விஜய் - 9148 2343