வியட்னாமில் இது முயல் ஆண்டல்ல, பூனை ஆண்டு

வியட்னாமில் இது முயல் ஆண்டல்ல, பூனை ஆண்டு

1 mins read
d3feb134-78ed-448b-830f-ab2e9a3278da
-

சீனர்­க­ளின் சந்­தி­ரமு­றை பஞ்­சாங்­கத்­தில் 12 ஆண்­டு­கள் உள்­ளன. ஒவ்­வோர் ஆண்­டும் ஒரு விலங்­கைக் குறிக்­கும்.

அவ்­வ­கை­யில் பெரும்­ பாலானா நாடு­களில் இந்த ஆண்டு முயல் ஆண்­டா­கக் கொண்­டா­டப்­ப­டு­கிறது. ஆனால் வியட்­னா­மில் மட்­டும் இந்த சந்­தி­ர­முறை ஆண்டு முயல் ஆண்­டா­கக் கொண்­டா­டப்­ப­ட­வில்லை. அங்கு இது பூனை ஆண்டு.

வியட்னாம் முழுவதும் பூனைகளின் சிற்பங்களும் சித்திரங்களும் பதாகைகளும் அலங்கரிக்கின்றன.

மொழி வேறு­பாடு இதற்கு ஒரு கார­ண­மாக இருக்­க­லாம் என்று வியட்­னா­மி­யர்­கள் கருது கின்­ற­னர். மாண்­ட­ரின் மொழி­யில் மாவ் என்ற சொல் முய­லைக் குறிக்­கும். ஆனால் வியட்­னா­மிய மொழி­யில் அச்­சொல் பூனை­யைக் குறிக்­கும்.

இத­னால்­தான் முயல் ஆண்டு பூனை ஆண்­டாக மாறி இருக்­க­லாம் என்­பது ஒரு நம்­பிக்கை.

வியட்­னா­மி­யர்­கள் முயல் வளர்ப்­பது அரிது என்­றும் பூனை­களே அவர்­க­ளின் உற்ற தோழர்­கள் என்­றும் பண்­பாட்டு ஆய்­வா­ளர் கோ ஹுவோங் கியாங் கூறி­னார்.

பூனை­கள் தங்­கள் விளை­பொ­ருள்­களை எலி­க­ளி­ட­மி­ருந்து பாது­காக்­கும் என்­றும் அதிர்ஷ்­டத்­தைக் கொண்­டு­வ­ரும் என்­றும் வியட்­னா­மி­யர்­கள் நம்­பு­ வதாக கோ சொன்­னார்.