சாக்லேட் பிடிப்பதற்கான காரணம்

சாக்லேட் பிடிப்பதற்கான காரணம்

2 mins read
2b9418b8-3780-458c-ae86-d2946ed4c0af
-

சாக்­லேட்டை ஏன் பல­ருக்­கும் பிடிக்­கிறது என்ற ரக­சி­யத்­தைக் கண்­ட­றிந்து விட்­ட­தாக ஆய்­வா­ளர்­கள் கூறி­யுள்­ள­னர்.

சாக்­லேட் ஒருவது நாவில் கரை­வ­தில்­தான் அந்த ரக­சி­யம் அடங்­கி­யுள்­ள­தாக பிரிட்­ட­னில் உள்ள லீட்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­கள் தெரி­வித்­த­னர். ஏசி­எஸ் செயல்­முறை மூலப்­பொ­ருள்­கள் என்ற சஞ்­சி­கை­யில் ஆய்வு முடி­வு­கள் வெளி­யி­டப்­பட்­டன.

சாக்­லேட் சாப்­பி­டும் முறை­யின் ஒவ்­வொரு கட்­டத்­தை­யும் அவர்­கள் பிரித்து ஆராய்ந்­த­னர்.

சாக்­லேட்­டின் வெளிப்­ப­ட­லங்­களில் உள்ள கொழுப்­பு­கள் நாவி­லுள்ள உமிழ்­நீர் சுரப்­பி­களில் பட்­டுக் கரை­யும்­போது உள்ள இழை­வும் அதில் பெறும் உணர்­வும்­தான் சாக்­லேட் ஒருவருக்கு மிக­வும் பிடிப்­ப­தற்கு முக்­கிய கார­ணம். அதுவே சாக்­லேட் சாப்­பி­டும்­போது நிறை­வ­டை­யும் உணர்­வைத் தரு­வ­தாக ஆய்­வா­ளர்­கள் கூறி­னர்.

சாக்­லேட்­டின் உட்­ப­ட­லங்­களில் உள்ள கொழுப்பு நாவில் படும்­போது அச்­சு­வை­யால் புலன்­க­ளுக்­குப் பெரிய தாக்­கம் இல்லை என்­றும் ஆய்­வா­ளர்­கள் கண்­ட­றிந்­த­னர்.

இந்த ஆய்­வின் விளை­வாக புதிய வகை சொகுசு சாக்­லேட்­டைத் தயா­ரிக்க ஆய்­வா­ளர்­கள் முயன்று வரு­கின்­ற­னர். இந்த வகை சாக்­லேட்­டில் மேற் பட­லத்­தில் மட்­டும் அதி­கக் கொழுப்பு சேர்க்­கப்­பட்­டி­ருக்­கும். ஆனால் சாக்­லேட்­டின் உள்­ப­கு­தி­களில் மிக­வும் குறை­வான கொழுப்பு சேர்க்­கப்­படும்.

அதற்­காக நாவைப் போன்றே இருக்­கும் செயற்கை முப்­ப­ரி­மா­ணக் கரு­வியை ஆய்­வா­ளர்­கள் தயா­ரித்­துள்­ள­னர். நாவில் உள்ள சுவை­கள் அக்­க­ரு­வி­யில் சேர்க்­கப்­பட்­டி­ருக்­கும். அதில் கரு­நிற சொகுசு சாக்­லேட்டை வைத்து ஆய் வாளர்­கள் அதன் சுவை­யைச் சோதித்து வரு­கின்­ற­னர்.

இதன் வழி, உட­லுக்கு அதி­கத் தீங்கு ஏற்­ப­டுத்­தாத சாக்­லேட்டை உரு­வாக்க ஆய்­வா­ளர்­கள் நம்­பிக்கை கொண்­டுள்­ள­னர். ஆனால் அதற்­குக் காலம் பிடிக்­கும் என்று கரு­தப்­ப­டு­கிறது.

தற்போது சாக்­லேட் சாப்­பிட விரும்­பு­வோர் 'மில்க்' சாக்­லேட், இனிப்பு மேற்­ப­ரப்பு உள்ள சாக்­லேட் ஆகி­ய­வற்­றைத் தவிர்த்து, கரு­நிற சாக்­லேட்டைத் தேர்வு செய்­வது உட­லுக்கு நல்­லது.