தோட்டக்கலை நாட்டம்; மேம்பட்ட மனநலம்

தோட்டக்கலை நாட்டம்; மேம்பட்ட மனநலம்

2 mins read
dd818aea-107b-4ac2-a21b-9ccf8267feb1
-
multi-img1 of 3

கரு­ணா­நிதி துர்கா

சுற்­றுப்­பு­றம், பல்­லு­யிர்ச்­சூ­ழல் ஆகி­ய­வற்­று­டன் மன­ந­லத்­தை­யும் பாது­காக்க உத­வு­கிறது தோட்­டக்­கலை. சிங்­கப்­பூர்­வா­சி­கள் பல­ரும் இதில் ஆர்­வத்­து­டன் ஈடு­ப­டு­கின்­ற­னர். வாட­கைக்கு இடம் எடுத்து உற்­சா­கத்­து­டன் பயி­ரி­டும் மூவர் அது­கு­றித்­துப் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

'கிரீன் அப்' நிறு­வ­னத்தை 2019ல் தோற்­று­வித்த லலிதா நாயர், 61, தோட்­டக்­கலை பற்றி இளம் வய­தி­ன­ருக்கு கற்­றுக் கொடுப்­ப­தி­லும் ஆர்­வம் கொண்­ட­வர். இயற்­கை­யோடு ஒன்றி வாழ வேண்­டும் என்­றும் இயற்­கை­யைப் பாதிக்­கும் எதை­யும் செய்­யக் கூடாது என்­றும் குடும்­பப் பெரி­ய­வர்­கள் சொல்­வ­தைக்­கேட்டு வளர்ந்­த­வர் திரு­மதி லலிதா.

சிறு­வ­ய­தில் பாட்­டி­யின் தோட்­டத்தை ரசித்த இவர், அதி­லி­ருந்த மரங்­கள், செடி­கொ­டி­கள், அவற்­றின் பயன்­க­ளைப் பற்றி பாட்­டி­யி­ட­மி­ருந்து கற்­றுக்­கொண்­டார்.

இத­னால் இயற்­கைக்­கும் சுற்­றுச்­சூ­ழ­லுக்­கும் மதிப்­ப­ளிக்­கும் எண்­ணம் இளம் வய­தி­லேயே பசு­ம­ரத்­தா­ணி­போல் பதிந்­து­விட்­டது என்­கி­றார் லலிதா.

நீடித்த நிலைத்­தன்மை மிக்க வாழ்க்­கை­முறை தொடர்­பான பயி­ல­ரங்­கு­களை இவர் நடத்தி வரு­கி­றார்.

கிராஞ்சி கெலப் பண்­ணை­யில் 8,000 சதுர அடி நிலத்தை வாட­கைக்கு எடுத்து 'நேச்­சர் நூக்' எனும் தோட்­டத்தை அமைத்­துள்­ளார். அங்கு, 80க்கு மேற்­பட்ட மூலி­கை­கள், செடி­கொ­டி­கள், மரங்­கள் ஆகி­ய­வற்றை வளர்க்­கி­றார் லலிதா.

குடும்­பத்­தி­ன­ரின் ஊக்­கத்­தா­லும் உத­வி­யா­லும் தோட்­டக்­க­லை­யில் ஈடு­படும் அதிரா மணி­கண்­டன், 17, தற்­போது நீ ஆன் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் கணக்­கி­யல் பட்­ட­யப் படிப்பை மேற்­கொள்­கி­றார்.

நான்கு ஆண்­டு­க­ளாக தோட்­டக்­க­லை­யில் அதிக ஈடு­பாடு காட்டி வரும் இவர் வீட்­டில் செடி வளர்ப்­ப­தோடு ஜூரோங் லேக் கார்­டன் பகு­தி­யில் ஒரு சிறிய நிலப்­ப­ரப்­பில் மிள­காய், வெண்­டைக்­காய் போன்ற செடி­க­ளைப் பயி­ரிட்­டுள்­ளார்.

சிங்­கப்­பூ­ரின் தட்­ப­வெப்­ப­நிலைக்கு ஏற்ற பயிர்­கள் பல இருக்­கின்­றன. அவற்­றைப் பயி­ரி­டு­வ­தால் இங்­கும் வேளாண்­மைத் துறை தழைக்க இய­லும் என்­றார் அதிரா.

தோட்­டக்­கலை குறித்து நாளுக்கு நாள் புதி­ய­ன­வற்றைக் கற்­றுக்­கொள்­வ­தா­கக் கூறு­கி­றார் திரு­மதி ஸ்ரீஜா நாரா­ய­ண­மூர்த்தி, 41.

கடந்த 15 ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் இவர், சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் ஆராய்ச்சி உத­வி­யா­ள­ரா­கப் பணி­பு­ரி­கி­றார்.

வீட்டு வாச­லில் முடிந்த அளவு முல்லை, செம்­ப­ருத்தி, ரோஜா எனப் பல­வ­கை­யான செடி­களை பூந்­தொட்­டி­களில் வளர்க்­கும் இவர், தேசி­யப் பூங்­காக் கழ­கத்­தின் நில ஒதுக்­கீட்­டின் மூலம் ஜூரோங் லேக் கார்­டன்­சில் வெவ்­வேறு பழங்­க­ளை­யும் காய்­க­றி­களை­யும் பயி­ரிட்­டுள்­ளார்.

தோட்ட வேலை மன­வு­ளைச்­சலை நீக்கி மகிழ்ச்­சி­யைத் தரு­வ­தா­கக் கூறு­கின்றனர் லலிதா, அதிரா, ஸ்ரீஜா மூவரும்.