மணக்கும் மெழுகுவர்த்தியும் மாசடையும் காற்றும்

மணக்கும் மெழுகுவர்த்தியும் மாசடையும் காற்றும்

1 mins read
8954cb4c-791b-4429-8b87-ba54b8300d08
-

மெழு­கு­வர்த்­தியை ஒளிக்­காக மட்­டு­மன்றி நுகர்­வோ­ருக்கு உற்­சா­க­மூட்­டும் வகை­யில் நறு­ம­ணம் சேர்க்­கப்­பட்­ட­வற்­றை­யும் நம்­மில் பலர் பயன்­ப­டுத்­து­கி­றோம்.

பல்­வேறு நறு­ம­ணங்­களில் கிடைக்­கும் இந்த மெழு­கு­வர்த்­தி­களை ஏற்­று­வ­தால் மனம் அமை­தி­ய­டை­கிறது. மூளை சுறு­சு­றுப்­ப­டை­கிறது. மூச்சு சீரா­கிறது என்று பல­ரும் கூறு­கின்­ற­னர். ஆனால் இத்­த­கைய நறு­மண மெழு­கு­வர்த்­தி­க­ளால் காற்­றின் தரம் பாதிக்­கப்­ப­டுமா என்ற கவலை சில­ருக்கு எழுந்­துள்­ளது.

செயற்­கை­யான ரசா­ய­னப் பொருள்­கள் மூலம் மண­மூட்­டப்­பட்ட மெழு­கு­வர்த்­தி­களை அதிக எண்­ணிக்­கை­யில் பயன்­ப­டுத்­தும்­போது தீங்கு நேரும் என்­கின்­ற­னர் வல்­லு­நர்­கள்.

இத்­த­கைய மெழு­கு­வர்த்­தி­கள் எரி­யா­த­போ­தும் ஓர் அறை­யில் உள்ள காற்­றின் தரத்­தைக் குறைக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

எனவே இயற்­கை­யான முறை­யில் உயர்­தர நறு­மண எண்­ணெய்­க­ளைக் கலந்து மண­மூட்­டப்­பட்ட மெழு­கு­வர்த்­தி­களைத் தேர்ந்­தெ­டுத்­துப் பயன்­படுத்­தும்­படி வல்­லு­நர்­கள் வலி­யு­றுத்­து­கின்­ற­னர்.

குறிப்­பாக தேன்­மெ­ழுகு காற்­றின் தரத்தை மேம்­ப­டுத்த உத­வக்­கூ­டி­யது என்­பதை அவர்­கள் சுட்­டி­னர். இதி­லி­ருந்து வெளி­யா­கும் வேதிப்­பொ­ருள் நச்­சுப் பொருள்­கள், மாச­டை­யச் செய்­யும் பொருள்­கள் ஆகி­ய­வற்­று­டன் கலந்து காற்­றி­லி­ருந்து அவற்றை நீக்க உத­வு­கின்­றது. இத­னால் காற்­றின் தரம் மேம்­படும். அறை­யின் அளவு, காற்­றோட்­டம் ஆகிய அம்­சங்­க­ளை­யும் கவ­னித்­தல் அவ­சி­யம்.

தகவல், படம்: இணையம்