உடற்பயிற்சியை நாடும் சிறுவர்கள்

ரச்­சனா வேலா­யு­தம்

வருங்­காலத் தலை­மு­றை­யி­னருக்கு உடற்­ப­யிற்சி செய்­வ­தில் அதிக ஈடு­பாடு இல்லை என்­பதை அண்­மை­யில் நடத்­தப்­பட்ட ஆய்­வின் முடி­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

உல­க­ள­வில் ஒப்­பி­டும்­போது, சிங்­கப்­பூ­ரில் உள்ள 18 வய­துக்கு உட்­பட்ட சிறுவர்கள் போதிய அள­வு உடற்­ப­யிற்சி செய்­வ­தில்லை என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சோ சுவீ ஹோக் பொதுச்­ சு­கா­தார கழ­கம் நடத்­திய ஆய்­வில் தெரி­ய­வந்­தது.

ஒருநாளில் குறைந்­தது ஒரு மணி நேரம் உடற்­ப­யிற்சி செய்ய வேண்­டும் என்ற பரிந்­து­ரைப்பை ஆய்­வில் பங்­கேற்­ற­வர்­களில் பாதிக்கு மேற்­பட்­டோர் இதை பூர்த்­தி­செய்­ய­வில்லை.

இதில், சிங்­கப்­பூ­ரில் இந்­திய சமூ­கத்­தைச் சேர்ந்த சிறு­வர்­கள் சிலர், உடற்­ப­யிற்­சி­யில் தங்­க­ளின் ஈடு­பாடு குறித்து தமிழ் முர­சி­டம் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

சுவிஸ் காட்­டேஜ் உயர்­நி­லைப் பள்­ளி­யில் பயி­லும் 16 வயது ஜி.எஸ்.விதுர், சிறு வய­தி­லி­ருந்து காற்­பந்து விளை­யா­டு­வ­தில் நாட்­டம் கொண்­ட­வர்.

ஒன்­பது வய­தில் இருந்தே தன் நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து காற்­பந்து விளை­யா­டு­வதை வழக்­க­மா­கக் கொண்ட இவர், அந்­தப் பழக்­கத்தை இன்­று­வரை கைவி­ட­வில்லை.

ஆசி­ரி­யர்­க­ளின் ஊக்­கு­விப்­பால் பள்­ளி­யில் நடை­பெ­றும் உடற்­ப­யிற்சி நட­வ­டிக்­கை­க­ளி­லும் உற்­சா­க­மாக ஈடு­பட்டு வரும் விதுர், உடற்­ப­யிற்­சி­யின் முக்­கி­யத்­து­வத்தை நன்கு அறிந்­து­கொண்­டுள்­ள­தா­கக் கூறி­னார்.

“முழு­மை­யான கல்வி என்ற நோக்­கத்­து­டன், நமக்கு உடற் பயிற்­சி­யின் நலன்­கள், ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கை­மு­றை­யு­டன் வாழ்­வ­தற்­கான அறி­வு­ரை­கள், தவ­றான முறை­யில் உடற்­ப­யிற்சி செய்­வ­தால் ஏற்­படும் விளை­வு­கள் போன்­ற­வற்றை நமக்­குக் கற்­றுக்­கொ­டுக்­கி­றார்­கள்,” என்­றார் விதுர். இதில், ஆரோக்­கிய வாழ்க்­கை­மு­றைக்­கான குறிப்­பு­கள், பயிற்சி வகுப்­பு­கள் போன்ற இல­வச அறி­வு­ரை­கள் இணை­யத்­தில் எளி­தாக கிடைப்­ப­தால் இளை­யர்­க­ளி­டையே உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­படும் பழக்­கம் அதி­க­ரித்து வரு­கிறது. “படிக்­கும் எனக்­குப் பணம் செலுத்தி உடற்­ப­யிற்­சிக் கூடங்­களுக்­குச் செல்ல முடி­யா­த­தால், சமூக ஊட­கங்­க­ளி­லி­ருந்து கிடைக்­கும் இல­வச அறி­வு­ரை­கள் ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கை­முறையை ஆரம்­பிக்க ஊக்­கம் தருகின்றன,” என்று நம்­பு­வ­தா­கக் கூறு­கி­றார் தனி­யார் பள்­ளி­யைச் சேர்ந்த 15 வயது ஆதித்யா பி.

உடல் பரு­ம­னைக் குறைக்க, தின­மும் யூடி­யூப் வலைத்­த­ளத்­தில் உள்ள உடற்­ப­யிற்­சிக் காணொ­ளியை ஆதித்யா பின்­பற்­று­வ­தாகக் கூறுகிறார்.

மேலும், “என் உடல் ஆரோக்­கி­யத்­தைப் பேணிக்காக்க நான் உடற்­ப­யிற்­சிக் கூடத்­திற்கு இரண்டு நாள்­க­ளுக்கு ஒரு­முறை சென்று உட­லில் உள்ள முக்­கிய தசை­களை வலுப்படுத்த பளு தூக்­கும் பயிற்­சி­யில் ஈடு­ப­டு­வேன்.

“அதே­வே­ளை­யில், சரி­யான முறை­யில் இந்­தப் பயிற்­சி­யைச் செய்ய டிக்­டாக் தளத்­தில் உடற்­ப­யிற்­சிப் பயிற்­று­விப்­பா­ளர்­க­ளின் அறி­வு­ரை­யைப் பின்­பற்­று­வேன். ஆனா­லும், பள்ளிக்கூட நேரம் தவிர்த்து மற்ற நேரங்களிலும் உடற்­ப­யிற்சி செய்ய விருப்­ப­மாக உள்­ளது. இருந்­தா­லும் பள்ளி, குடும்­பம், துணைப்­பாட வகுப்­பு­கள், இணைப்­பாட வகுப்­பு­கள் போன்ற பொறுப்­பு­க­ளைச் சமா­ளிப்­ப­தற்கே நேரம் செல­வா­கி­விடு­கிறது,” என்­கி­றார் ஆதித்யா.

“இரத்த அழுத்­தம், மார­டைப்பு போன்ற உடல்­ந­லப் பிரச்­சி­னை­களில் இருந்து நம்­மைப் பாது­காக்க வேண்­டும் என்ற எண்­ணத்­தில் நான் பள்­ளி­யில் தொடர்ச்­சி­யாக உடற்­ப­யிற்சி செய்து வரு­கி­றேன். ஆனால், என் பரப­ரப்­பான வாழ்க்­கைச் சூழ­லில், பள்­ளிக்கு வெளியே உடற்­ப­யிற்சி செய்ய நேரம் இல்லை,” என்று 14 வயது சரண் ஜி கூறினார்.

மற்றொரு மாண­வ­ரான ஆதித்யா, நாள்­தோ­றும் மாலை 7 மணிக்கு தன் தாயா­ரு­டன் சேர்ந்து மெது­வோட்­டம் ஓடு­வ­தா­கக் கூறி­னார். அவ்­வாறு மெது­வோட்­டம் மேற்­கொள்­ளும்போது அதை ஒரு சுமை­யாக எண்­ணா­மல் உற்­சா­க­மூட்­டும் செயல் என நினைத்­துச் செய்­வேன். அப்­போது­தான், என்­னால் சோர்­வின்றி உற்­சா­க­மாக மெது­வோட்­டம் செல்ல முடி­யும்.

அத்­து­டன் மெது­வோட்­டத்­திற்­குச் செல்­ல அந்த மாலைப் பொழுது எப்­போது வரும் என்று உற்­சா­க­மா­கக் காத்­துக்கொண்­டி­ருப்­பேன்,” என்று கூறி­னார் ஆதித்யா.

உடற்­ப­யிற்சி பற்றி பிள்­ளை­களுக்கு விழிப்­பு­ணர்­வூட்­டு­வ­தோடு அவர்­க­ளுக்கு அதற்­கான வாய்ப்­பை­யும் பெற்­றோர்­கள் ஏற்­ப­டுத்­தித் தர­வேண்­டும் என்­கின்­ற­னர் ஆய்­வா­ளர்­கள். உடற்­ப­யிற்­சிக்கு என்று ஒரு நேரத்தை ஒதுக்கி பிள்­ளை­க­ளு­டன் சேர்ந்து பெற்­றோ­ரும் உற்சாகத்துடன் உடற்­பயிற்­சி­யில் ஈடு­ப­ட்டு பயனடையலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!