பானங்களுக்கான ஊட்டச்சத்து குறியீடு கொண்டு வரும் மாற்றங்கள்

பானங்களுக்கான ஊட்டச்சத்து குறியீடு கொண்டு வரும் மாற்றங்கள்

3 mins read
a6716749-0f28-4a17-9cf2-b934a2d1cd45
-

கரு­ணா­நிதி துர்கா

நுயூட்ரி கிரேடு (Nutri-grade) கட்­டாய ஊட்­டச்­சத்து முத்­தி­ரை­கள் சிங்­கப்­பூ­ரின் சில்­லறை வர்த்­த­கங்­களில் விற்­கப்­படும் பானங்­களில் இருக்­க­வேண்­டும் என்ற திட்­டத்தை சிங்­கப்­பூர் சுகா­தார அமைச்சு அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

நான்கு நிறக் குறி­யீ­டு­க­ளு­டன் 'ஏ', 'பி', 'சி', 'டி' ஆகிய தரங்­களை கொண்­டி­ருக்­கும் இந்த முத்­திரை சர்க்­கரை, கொழுப்பு அள­வு­கள் ஆகி­ய­வற்­றைக் கருத்­தில் கொண்டு நிர்­ண­யிக்­கப்­படும்.

'சி', 'டி', தரங்­க­ளி­லான பானங்­க­ளுக்கு நுயூட்ரி கிரேடு முத்­திரை கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. 'டி' தரத்­தி­லுள்ள பானங்­களுக்கு விளம்­ப­ரக் கட்­டுப்­பா­டு­களும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

சென்ற ஆண்­டி­று­தி­யில் அமல்­ப­டுத்­தப்­பட்ட இத்­திட்­டம் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் வாங்­கும் போக்­கில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

"வாடிக்­கை­யா­ளர்­கள் அதிக அளவு சர்க்­க­ரை­யும், கொழுப்­பும் உள்ள பானங்­களை அடை­யா­ளங்­கண்டு மேலும் தக­வ­ல­றிந்து ஆரோக்­கி­ய­மான பானங்­க­ளைத் தேர்ந்­தெ­டுக்க இத்­திட்­டம் உத­வும்," என்று சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம் அறி­வித்­தது.

"வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்க்­கும் வகை­யில் கவர்ச்­சி­யாக வெளி­யி­டப்­படும் விளம்­ப­ரங்­களின் தாக்­கத்­தைக் குறைப்­ப­தும் தொழில்­து­றை மறு­சீ­ர­மைப்­புக்­குத் தூண்­டு­வ­தும் அந்த விளம்­பரத் தடை­க­ளின் நோக்­க­மா­கும்," என்­றும் அறி­விக்­கப்­பட்­டது.

"பெரும்­பா­லும் நான் வாங்­கும் பானங்­கள் 'ஏ' தரம் கொண்­டவையாகத்தான் இருக்­கும். அதோடு, என் பிள்­ளை­க­ளி­ட­மும் இத்­த­ரத்­தைக் கருத்­தில்கொண்டு பானங்­களை வாங்­க­வேண்­டும் என நான் வலி­யு­றுத்­து­வ­துண்டு," என்று கூறி­னார் திரு­மதி அனு­பாமா பால­சுப்­ர­ம­ணி­யன், 42.

"சர்க்­கரை அளவு மிக­வும் குறை­வாக இருக்­கும் பானங்­களை மட்­டும்­தான் உட்­கொள்­வேன் என்­ப­தில்லை. இருப்­பி­னும், தரக் குறி­யீ­டு­க­ளின் வழி­யாக நான் உட்­கொள்­ளும் பானங்­கள் எந்த அள­வுக்கு ஆரோக்­கி­ய­மா­னவை என்று என்­னால் தெரிந்­து­கொள்ள முடி­கிறது," என்று கூறி­னார் மாணவி மகதி திருப்­பதி.

இவ்­வாறு பொது­மக்­க­ளின் கருத்­துகள் ஒருபுறம் இருக்க, பானங்­களை விற்­கும் கடை­க­ளின் உரி­மை­யா­ளர்­களும் இத்­திட்­டம் கொண்டு வரக்­கூ­டிய மாற்­றங்­களை பற்றிக் கூறி­னர்.

"வாடிக்­கை­யா­ளர்­களில் பலர் இந்த முத்­தி­ரை­க­ளைக் கவ­னித்து வாங்­கு­வ­துண்டு. ஊட்­டச்­சத்து முத்­திரை மட்­டு­மல்­லாது 'ஹெல்த்­தி­யர் சாய்ஸ்' முத்­தி­ரை­யை­யும் பார்த்து வாங்­கு­கின்­ற­னர்," என்று செல்வி ஸ்டோர்சில் பணி­பு­ரி­யும் திரு கோவிந்­த­சாமி, 50, கூறி­னார்.

"இத்­திட்­டம் நடப்­பிற்கு வந்து வெகு­நாட்­கள் ஆகா­த­தால் இது­வரை வாடிக்­கை­யா­ளர்­கள் பானங்­க­ளைத் தேர்வு செய்­வ­தில் பெரிய மாற்­றம் தெரி­ய­வில்லை. ஆனால், வரும் நாட்­களில் நிச்­ச­யம் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் வாங்­கும் போக்­கில் மாற்­றம் தெரி­யும் என எதிர்பார்க்­கி­றேன்," என்று அவிக்னா ஸ்டோ­ரின் முத­லாளி திரு­மதி விஜ­ய­லட்­சுமி, 51, கூறி­னார். இத்­திட்­டம் இது­வரை பொட்­ட­ல­மி­டப்­பட்ட பானங்­க­ளுக்கு மட்­டுமே அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆனால், 2023ஆம் ஆண்டில் புதி­தா­கத் தயா­ரிக்­கப்­பட்ட பானங்­க­ளுக்­கும் இத்­திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும்.

"நாங்­கள் உட­னுக்­கு­டன் தயா­ரிக்­கும் பானங்­களில் எந்­த­வித பத­ப்படுத்தி வைக்கப்படும் சரக்குகளும் சேர்ப்­ப­தில்லை. புதி­தாக தயா­ரிக்­கப்­பட்ட பானங்­கள் என்­றாலே வாடிக்­கை­யா­ளர்­கள் அவற்றை தயக்­க­மின்றி வாங்­கு­வர்," என்று சையது ஆல்வி சாலை­யில் இருக்­கும் சகுந்­த­லாஸ் உண­வ­கத்­தின் முத­லாளி, திரு பாலாஜி, 43, கூறி­னார்.

"ஆரோக்­கி­யத்­தில் மிகுந்த கவ­னம் கொண்­ட­வர்­கள் தங்­க­ளது உணவுமுறையை கட்­டுப்­பாட்­டில் வைத்­துக்­கொள்ள விரும்­பு­வர். அவ்­வா­றான வாடிக்­கை­யா­ளர்­கள் சாப்­பாட்டு வேளை­யில் வாங்­கு­வதை, உட்­கொள்­வ­தைப் பற்றித் தெரிந்­து­கொள்ள இத்­திட்­டம் நிச்­ச­யம் உத­வும்," என்று 'ஸ்பி­ரிங்­லீஃப் பரோட்டா பிளேஸ்' நிறு­வ­னத்­தின் நிறு­வ­னர் திரு சு வி குணா­ளன், 48, கூறி­னார். இத்­திட்­டம் சிங்­கப்­பூ­ரர்­கள் உட்­கொள்­ளும் சர்க்­கரை அள­வில் மாற்­றத்­தைக் கொண்டு வரும் என நம்­பிக்கை கொண்­டுள்­ளது சுகா­தார அமைச்சு.