பொங்­கல் விழா கொண்­டா­டிய ஜூரோங் வெஸ்ட் உயர்­நி­லைப்­பள்ளி

பொங்­கல் விழா கொண்­டா­டிய ஜூரோங் வெஸ்ட் உயர்­நி­லைப்­பள்ளி

2 mins read
5dd7bf85-473a-4254-8684-5ef1c478bb49
-

ஜூரோங் வெஸ்ட் உயர்­நி­லைப் பள்­ளி­யில் கடந்த ஜன­வரி 13ஆம் தேதி பொங்­கல் திரு­நாள் சிறப்­பா­கக் கொண்­டா­டப்­பட்­டது. அதில் பிற இன ஆசி­ரி­யர்­க­ளும் மாணவர்களுக்கு கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பொங்­கல் விழா கொண்­டா­டப்­ப­டு­வ­தன் நோக்­கம், அதன் மர­பு­சார்ந்த தக­வல்­கள் போன்­ற­வற்றை ஆசி­ரி­யர்­களும் மாண­வர்­களும் அறிந்­து­கொண்­ட­னர்.

பொங்­கல் சார்ந்த பண்­பாட்­டுக் கூறு­களும் இதன்­வழி மாண­வர்­களுக்­குக் கற்­பிக்­கப்­பட்­டன. கோல­மி­டு­தல் வண்­ண­மி­டு­தல் எனப் பல்­வகை நட­வ­டிக்­கை­க­ளி­லும் மாண­வர்­கள் பங்­கேற்­றுத் தமி­ழர் மர­பும் பண்­பா­டும் சார்ந்த பல செய்­தி­களை அறிந்­து­கொண்­ட­னர். மாண­வர்­க­ளுக்கு அனு­ப­வக் கல்­வியை வழங்­கு­வ­தற்­கான தளங்­களில் பொங்­கல் விழா­வும் முக்­கி­யப் பங்கு வகிப்­ப­தால் பள்ளி ஆசி­ரி­யர்­கள் ஆண்­டு­தோறும் இந்த விழா­வைக் கொண்­டாடத் திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

பிறகு, உயர்­நிலை இரண்­டைச் சேர்ந்த மாண­வர்­கள், மேற்கு வட்­டார 3 குழு­மப் பள்­ளி­க­ளின் மூலம் ஏற்­பாடு செய்­யப்­பட்ட 'பொங்­கல் விழா' கற்­றல் பய­ணத்­திற்கு அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர். இதில் ஜூரோங் மேற்கு உயர்­நி­லைப்­பள்ளி, பூன் லே உயர்­நி­லைப்­பள்ளி, ஜூயிங் உயர்­நிலைப்­பள்ளி வெஸ்ட் வுட் உயர்­நி­லைப்­பள்ளி ஆகிய பள்­ளி­க­ளைச் சேர்ந்த உயர்­நிலை இரண்டு படிக்­கும் மாண­வர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

இவர்­கள் 'லிஷா' என்­னும் அமைப்­பால் லிட்­டில் இந்­தி­யா­வில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த பொங்­கல் விழா கொண்­டாட்­டங்­க­ளை­யும் நட­வ­டிக்­கை­க­ளை­யும் பார்த்து மகிழ்ந்­த­னர். மேலும், அங்­குக் காட்­சிக்­கா­கக் கட்டி வைக்­கப்­பட்­டி­ருந்த மாடு­க­ளை­யும் ஆடு­க­ளை­யும் கண்டு மகிழ்ந்­த­னர். அது மட்­டு­மல்­லாது நமது மரபு சார்ந்த கலை­க­ளான காவ­டி­யாட்­டம், மயி­லாட்­டாம், பொய்க்­கால் குதி­ரை­யாட்­டம், கர­காட்­டம், தவி­ல­டித்­தல், நாதஸ்­வ­ரம் வாசித்­தல், நாட்­டுப்­பு­றப்­பாட்­டுப் பாடு­தல் ஆகி­ய­வற்­றை­யும் பார்த்­தும் கேட்­டும் மகிழ்ந்­த­து­டன் அந்த இசைக்­க­ரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்தி ஆடி­யும் பாடி­யும் மகிழ்ந்­த­னர்.