பல ஊட்டச்சத்துகள் நிறைந்த தயிரைக் கொண்டு, முகத்தைப் பளபளக்கச் செய்யலாம்.
தயிர், தோல் காய்ந்துபோகாமல் முகத்தில் உள்ள ஈரத்தன்மையைப் பாதுகாக்கும்.
கரும்புள்ளிகளை அது மறையச் செய்யும். தயிரை முகத்தில் பூசி, அது காயும் வரை 15 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் நன்கு கழுவினால் முகம் பள பளப்பாகும்.
இல்லையென்றால் ஒரு சிட்டிகை மஞ்சளை அதனுடன் சேர்த்து முகத்தில் பூசலாம்.
மஞ்சள் கிருமி நாசினி என்பதால் முகத்தில் உள்ள சிறிய பருக்கள் மறைய உதவும்.
தயிரில் தேன் சேர்த்து முகத்தில் பூசிக்கொண்டு வந்தால் முகத்தில் உள்ள கருநிறத்திட்டுகள் குறையும். தயிருடன் ஓட்ஸ் சேர்ப்பதும் நாளடைவில் நல்ல பயன் தரும்.

