முத்தமிழ் விழாவைச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் இவ்வாண்டு மீண்டும் தமிழ் மொழி விழாவின் ஓர் அங்கமாக வரும் ஏப்ரல் மாதம் நடத்தவிருக்கிறது. இதன்படி பொதுமக்களுக்கு வழக்கம்போல் சிறுகதைப் போட்டி நடத்தப்படும்.
அத்துடன் சிறந்த அறிவியல் கதை, சிறந்த வரலாற்றுக் கதை ஆகியவற்றுக்குத் தனியாகப் பரிசுகள் வழங்கப்படும்.
பொதுமக்களுக்கான சிறுகதைப் போட்டியின் விதிகள்: இவ்வாண்டு அழகு எனும் கருப்பொருளைக் கொண்டு கதைகள் புனையப்பட வேண்டும். கதைகள் சிங்கப்பூர் சூழலில் அமைந்திருந்தால் சிறப்பு.
பொதுமக்கள் எழுதும் கதைகள் 1,200 முதல் 1,500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். ஒருவர் அதிகபட்சமாக 3 கதைகள் அனுப்பலாம்.
கதைகளை https://forms.gle/JUDrKzfetBDbbv7u9 என்ற இணைப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சிறப்பு அறிவியல் சிறுகதைக்கு டாக்டர் காமேஸ்வரன் மற்றும் டாக்டர் லலிதா காமேஸ்வரன் நினைவுப் பரிசாக $250 வழங்குகிறார்கள். சிறப்பு வரலாற்றுச் சிறுகதைக்கு டாக்டர் சங்கரன் மற்றும் முனைவர் சித்ரா சங்கரன் வழங்கும் பரிசு $250.
சிறப்புச் சிறுகதைகளுக்கான விதிகள்: போட்டியில் பங்கேற்போர் அறிவியல் கருவைக் கொண்ட கதைகளையும் வரலாற்றுக் கருவைக் கொண்ட கதைகளையும் அனுப்பலாம். கதைகள் சிங்கப்பூர் சூழலில் அமைந்திருக்க வேண்டும். 1,200 முதல் 1,500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். கதைகளை https://forms.gle/BVB1NPDtKWNHvkjH6 என்ற இணைப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சிறுகதைப் போட்டிகளுக்குப் பொதுவான விதிகள்: சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்களும் நிரந்தரவாசிகளும் போட்டியில் பங்கேற்கலாம்.
பெயர், முகவரி, தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைத் தனியாக 'கூகல் டிரைவில்' பதிவு செய்ய வேண்டும். போட்டி முடிவுகள் ஏப்ரலில் நடக்க இருக்கும் முத்தமிழ் விழாவில் வெளியிடப்படும்.
போட்டிகளுக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள், மார்ச் 25ஆம் தேதியாகும்.
மேல்விவரங்களுக்கு எழுத்தாளர் கழகத் துணைத் தலைவர் திரு. சு. முத்துமாணிக்கத்தைத் (96753215) என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

