சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தின் புதிய நடவடிக்கைகள்

சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தின் புதிய நடவடிக்கைகள்

2 mins read
8f1b91e4-60ce-495f-8cc0-6e71c5401c5b
-

கரு­ணா­நிதி துர்கா

சிங்­கப்­பூர் அறி­வி­யல் நிலை­யம் இம்­மா­தம் பல புதிய நட­வ­டிக்­கை­க­ளை­யும் நிகழ்ச்­சி­க­ளை­யும் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

'ஸ்டெம்' எனப்­படும் அறிவி யல், தொழில்­நுட்­பம், பொறி­யி யல், கணி­தம் ஆகி­ய­ துறை­க­ளின் ஆற்­றலை உணர்த்­தும் கண்­காட்­சி­களும் இவற்­றில் அடங்­கும்.

'மூவி டிரீட்ஸ் அட் ஓம்னி தியேட்டர்'

ஓம்னி திரை­யங்­கில் மார்ச் 3ஆம் தேதி வரை 'டைனொ­சோர்ஸ் ஆஃப் அன்­டார்­டிகா' திரைப்­ப­ட­மும் மார்ச் 10ஆம் தேதி வரை 'சீ லயன்ஸ்: லைஃப் பை எ விஸ்க்­கர்' என்ற திரைப்­ப­ட­மும் திரை­யி­டப்­படும். ஒரு திரைப்­ப­டத்­தைக் காணக் கட்­ட­ணம் $14.

'ஸ்டார் கேஸிங்'

தொலைநோக்கி வழியாக விண்­மீன்­க­ளைக் கண்டுகளிப்­ப­தோடு மின்­னி­லக்­கக் கோள­ரங்கு எனும் நேரடி நிகழ்ச்­சி­யை­யும் காண­லாம். இருள் சூழ்ந்த வானில் நட்­சத்­தி­ரங்­க­ளைக் கண்டு, சூரி­யக் குடும்­பத்­தின் கோள்­க­ளைப் பற்றி இந்­ந­ட­வடிக்கை மூலம் மேலும் அறிந்­து­கொள்­ள­லாம். இன்­றும், இம்­மா­தம் 17ஆம் தேதி­யும் இரவு 7.30 மணி முதல் 10 மணி வரை இது நடை­பெ­றும். கட்­ட­ணம் $17.

'எனர்ஜி டைட்­டென்ஸ்' நிகழ்ச்சி

நேரடி செயல் விளக்­கங்­கள் கொண்ட இந்­நி­கழ்ச்சி மின்­னாற்­றல் குறித்த அறி­வி­யல் சார்ந்த தக­வல்­களை எடுத்­துக்­கூ­றும். இதற்­குத் தனிக் கட்­ட­ணம் இல்லை. அறிவி­யல் நிலை­யத்­துக்­கான நுழை­வுச்­சீட்டு­களை வாங்­கி­னால் போதும்.

வார­நாள்­களில் நண்­ப­கல் 12 மணிக்­கும் வார இறு­தி­யில் நண்­ப­கல் 12 மணி, மாலை 4.30 மணி ஆகிய நேரங்­களில் இது நடை­பெ­றும்.

'பட்­டர்­ஃபி­ளைஸ் அப் குளோஸ்'

இம்­மா­தம் 1ஆம் தேதி தொடங்­கிய இக்­கண்­காட்­சிக்கு $14 செலுத்தி நுழை­வுச்­சீட்டு வாங்­கிக்­கொள்­ள­லாம். இது அடுத்த மாத இறு­தி­யில் நிறை­வு­பெ­றும். காலை 10 மணி­யி­லி­ருந்து மாலை 5 மணி வரை இதைக் காண­லாம்.

அன்­பர் தினக் கொண்­டாட்­டம்

அன்­பர் தினத்­தைக் கொண்­டா­டும் வகை­யில் சாக்­லெட் பற்­றிய அறி­வி­யல் பூர்­வ­மான தக­வல்­க­ளைத் தெரிந்­து­கொள்ள உத­வும் நிகழ்ச்­சி­யு­டன் சில உற்­சா­க­மூட்­டும் நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இன்று முதல் நாளை மறு­நாள் வரை­யும், அன்­பர் தின­மான இம்­மா­தம் 14ஆம் தேதி­யும் இவை நடை­பெ­றும்.

காலை 10.30 மணி, பிற்­ப­கல் 12.30 மணி, 2.30 மணி, மாலை 4.30 மணி ஆகிய நேரங்­களில் இந்­ந­ட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­றும்.

மேற்­கண்ட நிகழ்­வு­க­ளுக்கு https://www.gevme.com/scsonlinetickets எனும் இணைய முக­வ­ரி­யில் முன்­ப­திவு செய்து கொள்ளாலாம்.