மேம்பட்ட தகவல் பரிமாற்றத்துக்கு புதிய 'வாட்ஸ்அப்' அம்சங்கள்

2 mins read
47c55e14-6b26-46c1-9a21-78f70ccc01c4
-

'வாட்ஸ்­அப்' செய­லி­யில் ஒரே நேரத்­தில் 100 'மீடியா ஃபைல்' எனப்­படும் கோப்­பு­களை மற்­ற­வர்க்கு அனுப்­பும் புதிய அம்­சத்தை மெட்டா நிறு­வ­னம் உரு­வாக்­கி­யுள்­ளது.

தற்­போது ஒரு நேரத்­தில் இத்­த­கைய 30 கோப்­பு­களை மட்­டுமே அனுப்ப முடி­யும்.

முதற்­கட்­ட­மாகத் தேர்வு செய்­யப்­பட்ட சில­ருக்கு மட்­டும் சோதனை அடிப்­ப­டை­யில் இது வழங்­கப்­பட்டு உள்­ளது.

மற்­ற­வர்­கள் இந்த வச­தி­யைப் பெற சிறிது காலம் காத்­தி­ருக்க வேண்­டும்.

எப்­போது இந்த வசதி அனை­வ­ருக்­கும் வழங்­கப்­படும் என்­பது குறித்த தெளி­வான தக­வல் இல்லை.

தக­வல் பரி­மாற்­றத்தை மேம்­ப­டுத்­தும் மேலும் சில அம்­சங்­களும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

'வாய்ஸ் ஸ்டேட்­டஸ்' எனும் அம்­சம், பய­னர்­கள் கிட்­டத்­தட்ட 30 நொடி வரை­யி­லான ஒலிப்­பதிவு ஒன்றை தங்­கள் 'ஸ்டேட்­டஸ்' ஆக வைத்­துக் கொள்ள வழி­வகுக்­கும்.

பய­னர்­கள் தங்­கள் குர­லைப் பதிவு செய்­தும் பயன்­ப­டுத்­த­லாம்.

அதை விருப்­பப்­பட்­ட­வர்­களுக்கு மட்­டும் பகி­ரும் சிறப்பு வச­தி­யும் வழங்­கப்­படும்.

இந்­தக் குரல் பதிவு 24 மணி நேரத்­துக்­குப் பிறகு தானா­கவே மறை­யும்­ப­டி­ அ­மைக்க இய­லும்.

'ஸ்டேட்­டஸ் ரியாக்­‌ஷன்ஸ்' அம்­சம் மூலம் மற்­ற­வர் வெளி­யிடும் 'ஸ்டேட்­ட­சிற்கு' அதி­க­பட்­சம் எட்டு 'இமோஜி' எனப்­படும் உணர்வை வெளிப்­ப­டுத்­தும் குறி­யீ­டு­க­ளைப் பயன்­படுத்தி ஒரு­வர் கருத்­து­ரைக்­க­லாம்.

'ஸ்டேட்­டஸ் ப்ரோ­ஃபைல் ரிங்ஸ்' என்­பது மற்­றோர் அம்­சம். நம் தொடர்­புப் பட்­டி­ய­லில் உள்ள ஒரு­வர் 'ஸ்டேட்­டஸ்' அம்­சத்­தைப் பயன்­படுத்­தி­னால், அவ­ரது படத்­தைச் சுற்றி வளை­யம் ஒன்­றைக் காட்­டும். இதைக்கொண்டு அவ­ரது 'ஸ்டேட்­டஸ்' என்ன என்று அடுத்­த­டுத்­துப் பார்க்க விரும்­பு­வோர் அவ்­வாறு எளி­தா­கச் செய்­ய­லாம்.

புதிய அம்­சங்­கள் அடுத்த சில வாரங்­களில் அனைத்துலக அளவில் அனை­வருக்­கும் கிடைக்­கக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தக­வல், படம்: இணை­யம்