அன்பர் தின அன்பளிப்புகள்

அன்பர் தின அன்பளிப்புகள்

3 mins read
8e68e629-6d6c-4a40-8c82-8c733d94f388
-

வரும் 14ஆம் தேதி அன்பர் தினத்தில் தங்கள் அன்புக்குரியவர்கள், நண்பர்கள், இணையர்கள் ஆகியோர் எவ்வாறு அன்பை வெளிப்படுத்துவர் என்று பலர் எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். அதேநேரம் அன்பர்களுக்கானப் பரிசுப் பொருள்களைத் தேர்ந்தெடுப்பது சிலருக்குச் சவாலாக இருக்கக்கூடும்.

ஒவ்­வோர் ஆண்­டும் மலர் கொத்­துக்­கள், சாக்­லேட், கரடிபொம்மை, வாசனை திர­வி­யங்­கள், மெழு­கு­வத்தி என அன்­ப­ளிப்­பு­கள் தந்து சலித்­துப் போன­வர்­க­ளுக்­குச் சில பரிந்­து­ரை­­கள் உள்­ளன.

தொழில்­நுட்­பப் பொருள்­கள்

தங்­கள் அன்­பர் அதி­கம் கணி­னி­யில் நேரம் செல­வி­டு­ப­வ­ராக இருந்­தால், அவ­ருக்கு விசைப் பலகை, கணினி 'மவுஸ்', மடிக்­கணி­னியைப் பொறுத்­தி­வைக்­கும் நிறுத்தி, 'ஹெட்­ஃபோன்ஸ்' எனப்படும் காதொலிப்பான்கள் போன்­ற­வற்றை வழங்­க­லாம்.

அத­னு­டன் இணை­யர்­கள் தங்­க­ளது தொழில்­நுட்ப பொருட்­களை ஒரே நிறத்­தில் அல்­லது ஒரே வடி­வத்­தில் வேறு வண்­ணங்­களில் வாங்­கிக்கொள்­ள­லாம்.

தொழில்­நுட்­பச் சாத­னங்­க­ளைப் பாது­காக்­கும் உறை­களை அன்­பர்­க­ளுக்­குப் பிடித்த வண்­ணங்­க­ளி­லும் வடி­வங்­க­ளி­லும் வாங்­கித் தர­லாம். தங்­க­ளின் தனிப் பய­னுக்­காக பிரத்­தி­யோ­க­மாக மாற்­றப்­பட்ட உறை­க­ளை­யும் முன்­கூட்­டியே கடை­களில் செய்­யச்சொல்லி வாங்கித் தர­லாம். இது­போன்ற சேவை­கள் பல இடங்­களில் உட­னுக்­கு­டன் வழங்­கப்­ப­டும்.

புகைப்­ப­டங்­கள்

புகைப்­ப­டங்களைக் கொண்டு பல மாறு­பட்ட பரி­சுப்பொருள்­களை வழங்­க­மு­டி­யும். ஒரு­வர் தமது அன்­புக்­கு­ரி­ய­வ­ரு­டன் எடுக்­கும் புகைப்­ப­டங்­களை இணைத்து இதய வடி­வத்­தில் பொருத்தி அத­னைப் புகைப்­படச் சட்­டத்­தில் பாது­காத்து அன்­ப­ளிப்­பா­கக் கொடுக்­க­லாம்.

அல்­லது கழுத்துச் சங்­கி­லி­யில் அணி­யும் பதக்­கத்­தில் புகைப்­ப­டத்­தைப் பதிக்­க­லாம். இனிய நினை­வு­களை நினை­வூட்­டும் வண்­ணம் இந்த அன்­ப­ளிப்பு அமை­யும்.

புகைப்­ப­டங்­கள் கொண்டு வரை­யப்­பட்ட ஓவி­யங்­கள், உலோ­கத் தட்­டு­களில் பொறிக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­கள், மரப்பலகை, மெழு­கு­வத்தி, சவர்க்­கா­ரம் போன்­ற­வற்­றில் செதுக்­கிய புகைப்­ப­டங்­கள் போன்­ற­வற்­றை­யும் அன்­ப­ளிப்­பாக வழங்­க­லாம்.

தனிப்­பட்­ட­வர்­க­ளின் படங்­க­ளு­டன் இவற்­றைத் தயா­ரித்­துத் தரும் சேவை­கள் உள்­ளன. நாமே நம் கையால் தயா­ரித்­துக் கொடுக்­கும்­போது அதற்கு மதிப்பே தனி.

நேரம் செல­வி­டு­வது

ஒரு பொரு­ளில் அன்பு அடங்கி­வி­டுமா என்று நினைப்­ப­வர்­கள், வார இறுதி நாட்­களில் வெளி­நாட்டுப் பய­ணங்­க­ளைத் திட்­ட­மிட்டு அழைத்­துச்­செல்­வது மகிழ்ச்சி அளிக்­கும் அன்­ப­ளிப்­பாக அமை­யும்.

வெளி­நாடு செல்ல இய­லா­த­வர்­கள் 'ஸ்டே­கே­ஷன்' எனப்­படும் உள்­ளூ­ரில் விடு­மு­றைக்கு அல்­லது சுற்­று­லாத் தலங்­க­ளுக்­குச் சென்று நேரம் செல­வி­ட­லாம்.

ஒன்­றாக நேரத்­தைக் கழிக்க நினைப்­போர் நகப் பரா­ம­ரிப்பு, முகப் பரா­ம­ரிப்பு, உடற்­பி­டிப்பு போன்ற சேவை­க­ளைப் பெற ஒன்­றாக செல்­ல­லாம்.

தனிப்­ப­ய­னுக்­கான பொருள்­கள்

கடைத்­தொ­கு­தி­களில் விற்­கப்­படும் பொருள்­களை வாங்­கிக் கொடுக்­கவோ பெறவோ விரும்­பா­த­வர்­கள் தங்­களுக்காக மட்டும் வடி­வ­மைக்­கப்­பட்ட சிறப்பு அன்ப­ளிப்­பு­ க­ளைப் பரி­சீ­லிக்­க­லாம்.

அணி­க­லன்­கள், வாசனைத் திர­வி­யங்­கள், உணவுப்பொருள்­கள், மெழு­கு­வத்தி, புத்­த­கங்­கள் என்று பல­வற்றை நுணுக்­க­மாக வடிவமைத்துத் தருவது ஒரு­வர் நேரம் ஒதுக்கி மெனக்­கெட்டு அன்­ப­ளிப்பைத் தேர்ந்­தெ­டுத்­ததைக் காட்­டும்.

கண்­மணி, அன்­போடு

பொருள்­களை அன்­ப­ளிப்­பாக கொடுக்க விரும்­பா­த­வர்­கள் தாங்­களே வாழ்த்து மடல்­கள், கடி­தங்­கள் போன்­ற­வற்றை எழுதி அல்­லது செய்­து­த­ர­லாம்.

ஒரு பொரு­ளை­விட அன்பு நிறைந்த சொல்­லைப் பரி­ச­ளிக்க விரும்­பு­வோ­ரும் அன்­ப­ளிப்­பு­களை வாங்க நேரம் ஒதுக்க இய­லா­த­வர்­க­ளுக்­கும் இது­போன்ற எளிய ஆனால் ஆழ­முள்ள அன்­ப­ளிப்­பு­களை பரி­மா­றிக்­கொள்­ள­லாம்.

- பொன்­மணி உத­ய­கு­மார்