காலம் கடந்தும் சற்றும் குறையாத அன்பு, காதல்

காலம் கடந்தும் சற்றும் குறையாத அன்பு, காதல்

3 mins read
7c4ea544-75c5-40a9-ba51-6fb308c9d957
-
multi-img1 of 3

பொன்­மணி உத­ய­கு­மார்

ஏறக்­கு­றைய ஐம்­பது ஆண்­டு­களுக்­கு­முன் சந்­தித்த ஃபிராங்க்-மலர் சிங்­கம் தம்­ப­தி­ய­ருக்கு ஆண்­டு­தோ­றும் அன்­பர் தினம் கோலா­கல நிகழ்­வா­கவே அமைந்து வரு­கிறது. தாங்­கள் மட்­டு­மல்­லா­மல் தங்­கள் நண்­பர்­களு­டன் சேர்ந்து இவ்­வாண்டு அன்­பர் தினத்தை இவர்கள் கொண்­டா­டு­கின்­ற­னர்.

சிங்­கப்­பூர் குடி­ய­ரசு ஆகா­யப் படை­யில் பணி­பு­ரிந்து ஒய்­வு­பெற்ற திரு ஃபிராங்க் சிங்­கம் கடந்த 10 ஆண்­டு­க­ளாக மண­மக்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்கி­வ­ரும் சேவை­யை ஆற்றி வருகிறார்.

கண­வன், மனை­வி­யாக தங்­க­ளது அன்பை தனித்­துவ முறை­யில் பரி­மாறி வந்­தா­லும் திரு­மண பந்­தத்­தின் தொடக்­கத்தை அவர்­கள் இது­வரை மறக்­க­வில்லை.

ஒரு­வ­ருக்கு ஒரு­வர் தங்­கள் அழ­கில் மயங்­கிய நாளை அன்­பு­டன் இரு­வ­ரும் இன்­றும் நினை­வு­கூர்ந்­த­னர். மலே­சி­யத் தலை­நகர் கோலா­லம்­பூ­ரில் முதல்­மு­றை­யாக சந்­தித்த இவர்­க­ளின் மண­வாழ்வு ஏற்ற இறக்­க­மாக இருந்து வந்­துள்­ளது.

"மண­வாழ்க்கை தொடக்­கத்­தி­லி­ருந்தே சீராக இருக்­கும் என்று எதிர்­பார்க்க முடி­யாது. ஓரிரு ஆண்­டு­கள் கடந்த பின்­னரே வாழ்க்­கைத் துணை­யைப் பற்றி முழு­மை­யா­கத் தெரிந்­து­கொள்ள முடி­யம், அப்­போ­து­தான் சவால்­கள் தொடங்­கும்," என்று கூறி­னார் திரு ஃபிராங்க், 71.

இத்­தம்­ப­திக்கு இரண்டு மகன்­களும் இரண்டு பேரப்­பிள்­ளை­களும் உள்­ள­னர்.

முன் பின் அறி­மு­கம் இல்­லா­மல் 38 ஆண்­டு­க­ளுக்கு முன்பு திரு­மண மேடை­யில் முதல்­மு­றை­யாக சந்­தித்­த­னர் ஹாஜா­நஜ்­முதின்-ஜரீனா பானு தம்­ப­தி­யர். அன்­பைப் பரி­மா­றிக்­கொள்­வ­தில் பிள்­ளை­க­ளுக்கு சிறந்த எடுத்­துக்­காட்­டு­டன் திக­ழும் இவர்­கள், அன்­பர் தினம் மட்­டும் இல்­லா­மல் மற்ற தினங்­க­ளி­லும் அன்­ப­ளிப்­பு­க­ளைப் பரி­மாற்­றிக்­கொள்­ளும் வழக்­கத்­தைக் கொண்­டுள்­ள­னர்.

ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ரின் குணத்­தைப் புரிந்­து­கொண்டு அறி­வுரை பரி­மாறி இத்­தனை ஆண்­டு­களை வெற்­றி­க­ர­மாக கடந்து வந்­துள்ள இவர்­கள் உல­கம் போற்­றும் அன்­பர் தினத்­தை­யும் தாண்டி, எல்லா நாள்­க­ளி­லும் அன்பை வெளிப்­ப­டுத்­து­வ­தில் தயக்­கம் காட்­டு­வ­தில்லை.

"இன்­று­வரை நாங்­கள் பிரிந்து இருந்­த­தில்லை. வெளி­நா­டு­களுக்குப் பய­ணம் செய்­த­போ­து­கூட நாங்­கள் ஒன்­றா­கவே சென்று வந்­துள்­ளோம்," என்­றார் திரு­மதி ஜரீனா, 55.

"மற்­ற­வ­ரை­விட நான்­தான் பெரி­ய­வர் என்று நாங்­கள் ஒரு­போ­தும் எண்­ணி­ய­தில்லை. இதுவே எங்­கள் திரு­மண வாழ்­வின் தாரக மந்­தி­ரம்," என்று கூறி­னார் திரு ஹாஜா­நஜ்­மு­தின், 61.

ஒரு­வர் மீது மற்­றொ­ரு­வர் அக்­கறை செலுத்­து­வதே அன்­பின் வெளிப்­பாடு என்று நம்­பு­கின்­ற­னர் கோமதி-அன்­ப­ழ­கன் தம்­பதி. கிட்­டத்­தட்ட 46 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர், தம்­மு­டைய 14வது வய­தில் திரு அன்­ப­ழ­கனை முதல்­முறை­யாக சந்­தித்த திரு­மதி கோமதி, அந்த காலத்­தில் இன்று­போல் பேசிப் பழ­கும் வாய்ப்பு கிடைக்­க­வில்லை என்­றார்.

ஒரு­வ­ரோடு ஒரு­வர் பேச­வில்லை என்­றா­லும் இரு­வ­ருக்­கி­டையே இருந்த ஈர்ப்பு ஆண்­டு­கள் கடந்­தும் குறை­ய­வில்லை.

முன்பு ராணு­வத்­தில் பணி­புரிந்த இரு­வ­ரும், திரு­மதி கோமதி 23 வய­தா­ன­போது திரு­ம­ணம் செய்­து­கொள்ள முடி­வெடுத்­த­னர்.

கடந்த ஆண்­டு­தான் இந்தத் தம்பதி தங்­க­ளு­டைய அறு­ப­தாம் ஆண்டு திருமண விழா­வைக் கொண்­டாடி மகிழ்ந்­த­னர். திரு­மணப் பந்­தம் வலு­வாக இருந்து வரு­வ­தற்கு மூன்று முக்­கிய கார­ணங்­களை திரு­மதி கோமதி முன்­வைத்­தார்.

முத­லா­வது, விட்­டுக்­கொ­டுத்து நடப்­பது. இரண்­டா­வது, புரிந்­து­ணர்வை வளர்த்­துக்­கொள்­வது. மூன்­றா­வது, நிபந்­த­னை­யற்ற அன்பை வெளிப்­ப­டுத்­து­வது. எளி­தில் பட்­டி­ய­லி­டக்­கூ­டிய இந்­தக் குணங்­கள் ஆழ­மான அர்த்­தம் உடை­யவை என்­றும் அவர் கூறி­னார்.

இவ்­வி­ரு­வ­ரும் ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ரின் தேவையை நன்கு அறிந்­து­கொண்டு ஒன்­றாக நேரம் செல­விட்டு தங்­க­ளுக்கு இடை­யி­லான பிணைப்பை வலுப்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ள­னர். தங்­கள் துணை­வி­யா­ரின் தேவை­களை அலட்­சி­யப்­ப­டுத்­தா­மல் அவரை எப்­போ­தும் கவ­னத்­தில் வைத்­தி­ருப்­பது அவ­சி­யம் என்று சொன்­னார் திரு­மதி கோமதி.

காலம் பல கடந்­தா­லும் இவர்­க­ளின் அன்­பைப் பரி­மா­றிக்­கொள்­ளும் நேரங்­களில் மாற்­றமே பெறா­தது ஒன்­றா­கச் சேர்ந்து இரவு உணவு அருந்­து­வது. அன்­பின் வெளிப்­பாடு, அன்­புக்­குரிய­வ­ரின் ஆரோக்­கி­யத்­தில் அக்­கறை கொள்­வ­தில் இருக்­கிறது என்று நம்­பு­கி­றார் திரு­மதி கோமதி, 60.

அன்­பர் தினத்தை கொண்­டா­டும் நேரத்­தில், இந்த மூன்று தம்­ப­தி­களும் அன்­ப­ளிப்­பு­க­ளைப் பரி­மா­றிக்­கொள்­வ­தை­யும் தாண்டி, இவர்­க­ளுக்கு இடை­யி­லான புரிந்­து­ணர்வே காதல் மலர்­வ­தற்கு உந்­து­த­லாக அமை­கிறது.

அன்­பர் தினம் இளை­யர்­க­ளுக்கு மட்­டு­மல்ல, ஒரு­வர் மற்­றொ­ரு­வர் மீது அன்பை வெளிப்­படுத்­து­வ­தில் இந்­தத் தம்­ப­தி­கள் எடுத்­துக்­காட்­டா­கத் திகழ்­கின்­ற­னர்.