கடல் குப்பைகளை அகற்றுவதில் ஆர்வம்

2 mins read

கரு­ணா­நிதி துர்கா

சிங்­கப்­பூ­ரில் பெரு­கி­வ­ரும் கடல் குப்­பை­க­ளின் அளவை கட்­டுக்­குள் கொண்­டு­வர பல­ரும் தங்­க­ளால் ஆன பங்கை ஆற்றி வரு­கின்­ற­னர்.

நாலா புற­மும் கட­லால் சூழப்­பட்­டுள்ள சிங்­கப்­பூர் போன்ற தீவு நாடு­க­ளுக்கு இப்­பி­ரச்­சினை முறி­ய­டிக்­கப்­பட வேண்டும்.

கட­லில் குப்பை சேரும் பிரச்­சி­னையை எதிர்­கொள்ள சென்ற ஆண்டு தேசிய கடல் குப்பை அகற்­றும் உத்­தி­பூர்வ செயல்திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது.

2021ல் 10 கடற்­க­ரை­க­ளி­லும் கட­லோ­ரப் பகு­தி­க­ளிலும் பிளாஸ்­டிக் போத்தல்­கள், நெட்­டி­கள், மரக்­கிளை­கள் உள்­ளிட்ட 4,009 டன் கழிவுகளை தேசிய சுற்­று­ப்புற வாரி­யம் அப்­பு­றப்­ப­டுத்­தி­யது.

இந்­தக் கழி­வு­க­ளின் அளவு 2020ல் 3,490 டன்­னா­க­வும் 2019ல் 3,640 டன்­னா­க­வும் இருந்­தது.

உயர்­நி­லைப்­பள்ளி முதல் தொடக்­கக்­கல்­லூரி வரை பள்ளி­க­ளு­டன் இணைந்து கடலோரப் பகுதி­களைத் தூய்மைப்படுத்­தும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கி­றார் சிட்­டி­பாபு அஸ்­வின், 18.

"நெகிழி குப்­பை­களை கட­லி­லி­ருந்து அகற்­று­வ­தால் கடல்­வாழ் உயி­ரி­னங்­கள் அவற்றை உட்­கொள்­ளும் வாய்ப்­பு­களை குறைத்து அவற்­றின் பாது­காப்பை உறு­தி­செய்ய முடி­கிறது," என்று அவர் கூறி­னார்.

தன்­னார்­வத்­து­டன் கட­லோ­ரப் பகுதி­களைத் தூய்­மைப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் டி.ஸ்ரீராம், 24, ஆண்­டு­தோ­றும் இரு­மு­றை­யா­வது இம்­மு­யற்­சியை மேற்­கொள்­கி­றார்.

"தொண்­டூ­ழி­யர்­க­ளா­கச் சேர்ந்து அகற்­று­வது கட­லில் சேரும் குப்­பை­க­ளின் ஒரு சிறிய பங்­கு­தான்.

"பொது­மக்­க­ளி­டையே கடல் குப்­பை­களை குறைப்­பது பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­னால் குப்பை அளவு குறை­யும்," என்று ஸ்ரீராம் கூறி­னார்.

சுமார் நான்கு ஆண்­டு­க­ளாக 'கோஸ்ட்­டல் நேட்­டிவ்ஸ்' எனும் அமைப்­பில் இருக்­கி­றார் ஷின்ட்டொ கெ அன்ட்டொ, 34.

அன்­றா­டம் பரா­ம­ரிக்க முடி­யாத கட­லோ­ரப் பகு­தி­களை சுத்­தம் செய்­யும் தொண்­டூ­ழி­யப் பணி­யில் 'கோஸ்ட்­டல் நேட்­டிவ்ஸ்' ஈடு­பட்டு வரு­கிறது.

அண்­மை­யில் இந்த அமைப்பு பாசிர் ரிஸ் கடற்­க­ரையை 10 பேர் இணைந்து இரண்டு மணி நேரம் சுத்­தம் செய்­த­தில் கிடைத்த குப்பை­யின் எடை கிட்­டத்­தட்ட 200 கிலோகிராம் என்­றார் ஷின்ட்டொ.

"ஒரு­முறை பயன்­ப­டுத்­தி­விட்டு வீசப்­படும் பொருள்­க­ளின் புழக்­கத்­தைக் குறைக்க நாம் அனை­வ­ரும் நமது பங்கை ஆற்ற வேண்­டும். சில ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே பல உண­வ­கங்­கள் நெகிழி உறிஞ்சு குழாய்­க­ளின் பயன்­பாட்டை நிறுத்­தி­விட்­டன.

இது­போன்ற முயற்­சி­களை நாம் தொடர்ந்து எடுத்து வந்­தால் நிச்­ச­யம் சுற்­றுச்­சூ­ழ­லைப் பாது­காக்க முடி­யும்," என்று ஷின்ட்டொ கூறி­னார்.

லிட்­டில் 'கிரீன் மேன்' எனும் லாப நோக்­க­மில்லா அமைப்­பைச் சேர்ந்த பிர­ஜக்தா பாலாஜி, 44, தன் குடும்­பத்­து­டன் இணைந்து இத்­த­கைய நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கி­றார்.

"நாம் அகற்­றும் ஒவ்­வொரு கடல் குப்­பை­யும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது. அது­மட்­டு­மல்­லா­மல், சில பழக்­கங்­களை நாம் மாற்­றிக்­கொள்­வ­தால் சுற்றுச்சூ­ழ­லுக்கு ஏற்­படும் பாதிப்­பைக் குறைக்க முடி­யும். உதா­ர­ணத்­திற்கு, கடைக்­குச் செல்­லும்­போது துணிப்­பை­க­ளைக் கொண்டு­செல்­வ­தால் நெகி­ழிப் பைக­ளின் பயன்­பாடு குறை­கிறது," என்று பிர­ஜக்தா கூறி­னார்.

கடல்­வாழ் உயி­ரி­னங்­க­ளுக்­கும் மனி­தர்­க­ளுக்­கும் மட்­டு­மல்­லாது, பூமிக்­கும் தீங்கு விளை­விக்­கும் கடல் குப்பை பிரச்­சி­னையை முறி­ய­டிக்க தனி­ம­னி­தர்­களும் பங்­காற்ற வேண்­டும்.