சுடர்விடும் கலைஞர்கள்

சுடர்விடும் கலைஞர்கள்

2 mins read
c74090f8-0f68-4a57-bac8-ba6c69448af2
-

பொன்­மணி உத­ய­கு­மார்

தொன்­மை­மிகு இந்­தி­யக் கலை­களை சிங்­கப்­பூ­ரில் அடுத்த தலை­மு­றை­யி­னர் முன் எடுத்­துச் செல்வர் என்­ப­தற்கு கட்­டி­யம் கூறு­கிறது 'சுடர்' நடன நிகழ்ச்சி.

மார்ச் மாதம் 5ஆம் தேதி ஏழு மணிக்கு 'கேட்வே' அரங்­கத்­தில் நடை­பெ­ற­வுள்ள இந்­நி­கழ்ச்­சிக்­காக கடந்த செப்­டம்­பர் மாதத்­தில் ­இருந்து பயிற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர் இந்த இளம் கலை­ஞர்­கள்.

இந்த நட­னத்தை வடி­வ­மைத்த 36 வயது குமாரி உஷா அன்­பழகன் ஐந்து வய­தில் நட­னம் பழ­கத் தொடங்­கி­ய­வர்.

கடந்த 31 ஆண்­டு­க­ளாக நடனம் ஆடிவரும் உஷா, இது­வரை சிறிய நிகழ்ச்­சி­கள் பல­வற்­றுக்கு நட­னம் அமைத்­துள்­ளார். பெரி­ய­ள­வி­லான நிகழ்ச்­சிக்கு நட­னம் அமைப்­பது இதுவே முதல் முறை.

தனக்­குள் 'சுடர்' விடும் நட­னத்­தின் உணர்­வொ­ளி­யைக் கரு­வா­கக்­கொண்டு இந்த நட­னத்தை வடி­வ­மைத்­துள்­ளார் அவர்.

பாஸ்­கர் கலைக் கழ­கத்­தின் பெரிய அள­வி­லான இந்­தப் படைப்­புக்கு தமது மாணவி குமாரி உஷா நட­ன­ம் அமைத்தி­ருப்­ப­தில் அவ­ரது குரு திரு­மதி அம்­பு­ஜா­வுக்குப் பெருமகிழ்ச்சி.

இளம் கலை­ஞர்­கள் ­நி­கழ்ச்­சியை மேடை­யேற்­று­வது, பாஸ்­கர் ஆர்ட்ஸ் நிறு­வ­ன­வர்களான மறைந்த கலை­ஞர்­க­ள் பாஸ்கர் தம்­ப­தி­யின் கனவை நிறை­வேற்­றும் வண்­ணம் அமை­கிறது என்­றார் அவர்.

இளம் நட­னக் கலை­ஞர்­களுடன் இணைந்து பாஸ்­கர்ஸ் கலைக் கழ­கத்­தின் ஸ்வாதி இசைக்­கு­ழு­வின் இளம் இசைக் கலை­ஞர்­கள் இசை வழங்­கு­கின்­ற­னர்.

நிகழ்ச்­சி­யின் இசை அமைப்­புக்கு தலைமை தாங்­கும் திரு­மதி அர­ச­கு­மாரி குறு­கிய காலத்­தில் இளை­யர்­கள் நிகழ்ச்­சியை ஒருங்­கி­ணைத்­த­தில் பெருமை கொள்­வ­தாக கூறி­னார்.

வீணை, மிரு­தங்­கம், வய­லின், புல்­லாங்­கு­ழல் கலை­ஞர்­க­ளு­டன் எட்டு வாய்ப்­பாட்டு கலை­ஞர்­களும் இணைந்து நேரடி இசை வழங்­க­வுள்­ள­னர்.

இளம் தலை­மு­றை­யி­ன­ரின் கடின உழைப்­பை­யும் திற­னை­யும் வெளிப்­ப­டுத்­தும் இந்த நிகழ்ச்­சி­யில் வள­ரும் கலை­ஞர்­கள் முக்கிய பங்­காற்­று­வது மகிழ்ச்சி அளிப்­ப­தாக அவர் சொன்­னார்.

நிகழ்ச்­சிக்கு பல முன்­னோடி இசை, நடன ஆசி­ரி­யர்­கள் வழி­காட்டி வரு­கின்­ற­னர்.

இளம் கலை­ஞர்­களை முன்­னி­லைப்­ப­டுத்­தும் இத்­த­கைய நிகழ்ச்­சி­கள் கலை­ஞர்­க­ளின் வளர்ச்­சிக்­கும் கலை­யின் தொடர்ச்­சிக்­கும் பெரும் ஊக்­கு­விப்­பாக அமை­யும் என்­றார் சிங்­கப்­பூ­ரின் தன்­னி­க­ரற்ற புல்­லாங்­கு­ழல் இசை கலை­ஞர் கான­வி­நோ­தன் ரத்­னம்.

நிகழ்ச்­சிக்­கான $25.00 நுழை­வு­சீட்டை https://www.bhaskarsartsacademy.com/events.upcoming என்ற இணைப்­பில் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

uponmani@sph.com.sg