நத்தைச் சளி திரவம் தரும் தோல் பளபளப்பு

நத்தைச் சளி திரவம் தரும் தோல் பளபளப்பு

4 mins read
4f2ec81c-f28d-43b2-885a-f23444e31238
-
multi-img1 of 2

பொன்­மணி உத­ய­கு­மார்

ஒப்­ப­னை­யு­டன் சேர்ந்து தோல் பரா­ம­ரிப்­பின் முக்­கி­யத்­து­வத்தை இன்று அனைத்து வய­தி­ன­ரும் அறிந்­துள்­ள­னர். பொது­வாக, முகப்­ப­ருக்­க­ளைப் போக்­கு­வது, நிற­மி­களை, அதா­வது தோலில் நிறத்­திட்­டு­க­ளைத் தவிர்ப்­பது, ஈரப்­ப­தத்­தைப் பாது­காப்­பது போன்ற பல கார­ணங்­க­ளுக்­காக தோல் பரா­ம­ரிப்­பில் பலர் ஆர்­வம் காட்­டு­வ­துண்டு.

உல­க­ள­வில் ஏறத்­தாழ $135 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் மதிப்­புள்ள தோல் பரா­ம­ரிப்­புத் துறை­யில் கோலோச்­சும் பல்­வேறு நாடு­க­ளின் நிறு­வ­னங்­களும் போட்­டிப் போட்­டுக்­கொண்டு வாடிக்­கை­யா­ளர்­க­ளைக் கவர புதுப்­புது தோல் பரா­ம­ரிப்பு முறை­களை அறி­மு­கம் செய்­து­வ­ரு­கின்­றன.

அவ்­வாறு வாடிக்­கை­யா­ளர் களைக் கவர்ந்­துள்ள தோல் பரா­ம­ரிப்­புப் பொருள்­களில் 'ஸ்னெ­யில் மியூ­சின்' (snail mucin) எனும் நத்­தைச் சளி­யைக் கொண்டு தயா­ரிக்­கப்­படும் முகத்­தி­ர­வம் மிக­வும் பிர­ப­லம்.

நடை­பா­தை­யில் நத்­தை­யைக் காணும்­போது சிலர் ஒதுங்­கிப் போகவோ அதை அகற்­றவோ முற்­ப­டு­வ­துண்டு. சிலர் நத்­தையை அரு­வ­ருப்­பு­டன் பார்ப்­பார்­கள்.

ஆனால் நத்­தை­யில் சுரக்­கும் சளி­யைப் பதப்­ப­டுத்தி செய்­யப்­படும் முகத் திர­வம் அன்­று­மு­தல் இன்­று­வரை பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது. நத்­தைச் சளி முற்­கா­லத்­தில் கிரேக்­கத்­தி­லும் பிறகு இத்­தாலி போன்ற நாடு­க­ளி­லும் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கத் தக­வல்­கள் கூறு­கின்­றன.

கடந்த பத்து, இரு­பது ஆண்­டு­க­ளாக அழ­குப் பரா­ம­ரிப்­புத் துறை­யில் ஆதிக்­கம் செலுத்தி வரும் கொரிய நிறு­வ­னங்­கள் நத்­தைச் சளி­யைக் கொண்­டு­தோல் பரா­ம­ரிப்­புத் திர­வத்­தைப் பெரு­ம­ள­வில் தயா­ரித்­துப் பிர­ப­ல­மாக்­கின.

சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த தோல் மருத்­து­வர் கோமதி ராஜ­ரத்­தி­னம் நத்தை சளி­யி­லி­ருந்து பிரித்­தெ­டுக்­கப்­படும் திர­வத்­தின் தயா­ரிப்பு ஐந்­தி­லி­ருந்து ஆறு ஆண்­டு­க­ளுக்கு முன்பே தொடங்­கி­விட்­டது என்­றார். தமது மருந்­த­கத்­தில் முன்பு பயன்­ப­டுத்­தப்­பட்ட இந்­தத் திர­வம் மீண்­டும் பிர­ப­ல­ம­டைந்­தி­ருப்­பது ஆச்­ச­ரி­யம் அளிப்­ப­தாக அவர் கூறி­னார்.

ஈராண்­டு­க­ளாக இந்­தத் திர­வத்தை பயன்­ப­டுத்­தி­வ­ரும் 21 வயது அர்ச்­சனா, தமது கன்­னத்­தில் முகப்­ப­ரு­வால் ஏற்­பட்ட தழும்­பு­க­ளைக் குறைக்க இதைப் பயன்­ப­டுத்த தொடங்­கி­னார்.

இணை­யத்­தில் தீர்வு தேடி­ய­போது சமூக ஊட­கப் பிர­ப­லங்­கள் பலர் கொரி­யா­வில் தயா­ரிக்­கப்­படும் தோல் பரா­ம­ரிப்­புப் பொருள்­களை பரிந்­துரை செய்­துள்­ள­னர்.

குறிப்­பாக 'ஸ்னெ­யில் மியூ­சின்' நத்­தைச் சளித் திர­வத்தை பயன்­ப­டுத்­த­லாம் என்ற பல­ரது பரிந்­து­ரை­க­ளைப் பார்த்­தார் அர்ச்­சனா.

'ஸ்னெ­யில் மியூ­சின்' நத்­தைச் சளித் திர­வம், முகத்­தோல் உலர்ந்­து­போ­கா­மல் பாது­காத்து, தோலில் உள்ள மாசு­களை அகற்றி, முகம் மூப்­ப­டைந்த தோற்­றம் பெறு­வ­தைக் குறைப் பதா­கக் கூறப்­ப­டு­கிறது. காயங்­களை ஆற்றி தழும்­பு­க­ளைக் குறைப்­ப­தி­லும் அது பங்­காற்­று­வ­தா­க­வும் சொல்­லப்­ப­டு­கிறது.

நத்­தைச் சளி­யில் உள்ள புர­தங்­கள், நொதி­கள், கிளைக்­கோ­லிக் அமி­லம் போன்­ற­வற்­றால் அப்­ப­யன்­கள் ஏற்­ப­டு­வ­தாக நிபு­ணர்­களும் கூறு­கின்­ற­னர்.

திர­வம் கட்­டுப்­ப­டி­யான விலை­யில் கிடைத்­த­தால் அர்ச்­சனா மற்ற சில பரா­ம­ரிப்­புப் பொருள் களு­டன் அதைப் பயன்­ப­டுத்த தொடங்­கி­னார். முன்­பைக் காட்­டி­லும் தற்­போது முகத்­தில் பருக்­கள் குறைந்து பள­ப­ளப்பு கூடிய இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

முகப்­ப­ருக்­க­ளுக்­காக மட்­டு­மல்­லா­மல், தோலை ஈரப்­ப­தத்­து­டன் வைத்­தி­ருப்­ப­தற்­காக 19 வயது லோகேஷ் இந்­தத் திர­வத்­தைக் கடந்த ஆண்­டி­லி­ருந்து பயன்­ப­டுத்தி வரு­கி­றார்.

தமது உற­வி­னர் பரிந்­து­ரைத்­த­தால் இதைப் பயன்­ப­டுத்­தத் தொடங்­கிய இவர், தற்­போது தமது தோலில் எண்­ணெய் பிசு­பி­சுப்­புத் தன்மை குறைந்­துள்­ள­தாக கூறி­னார்.

ஆனால் அனைத்து பொருட்­களும் அனை­வ­ருக்­கும் பொருந்­தும் என்று சொல்­ல­மு­டி­யாது.

ஒவ்­வொ­ரு­வ­ரின் தோலின் தன்­மை­யைப் பொறுத்து முகத் திர­வங்­க­ளை­யும் பசை­க­ளை­யும் தேர்ந்­தெ­டுக்க வேண்­டும் என்­றார் திரு­மதி ரேகா, 43.

தாம் பணி­பு­ரி­யும் நிறு­வ­னத்­தில் அனை­வ­ரும் 'ஸ்னெ­யில் மியூ­சின்' பயன்­ப­டுத்­து­வ­தைப் பார்த்து இவ­ரும் இதைப் பயன் படுத்த முனைந்­துள்­ளார். ஆனால் அதன்­பி­றகு இவ­ரது தோலில் தடிப்­பு­கள் தென்­ப­டத் தொடங்­கி­விட்­டன.

'ஸ்னெ­யில் மியூ­சின்' பயன்­பாட்­டில் எந்­தத் தீங்­கும் இல்லை என்­றார் டாக்­டர் கோமதி. எனி­னும் எந்­தத் தோல் பரா­ம­ரிப்­புப் பொரு­ளை­யும் பயன்­ப­டுத்­தும் முன்பு அது தங்­கள் தோலுக்கு உகந்­ததா என்று சோதிப்­பது மிக­வும் அவ­சி­யம் என்று அவர் எச்­ச­ரித்­தார்.

எந்­தப் புதிய திர­வத்தை அல்­லது பசை­யைப் பயன்­ப­டுத்­தும் முன்­னர், 20 காசு நாண­யம் அள­விற்கு அதை தோலின் ஒரு சிறிய பகு­தி­யில் சில நாள்­க­ளுக்­குத் தொடர்ந்து தட­விப் பார்க்­க­வேண்­டும் என்று டாக்­டர் கோமதி கூறி­னார். அப்­ப­கு­தி­யில் எந்­த­வி­த­மான பாதிப்­பும் ஏற்­ப­ட­வில்லை என்று உறு­தி­செய்த பிறகே முகம் முழு­வ­தும் அதைப் பூச­லாம் என்று கூறி­னார் அவர்.

குறிப்­பாக அதி­கம் முகப்­ப­ருக்­கள் வரக்­கூ­டி­ய­வர்­கள் நத்­தைச் சளித் திர­வத்தை பயன்­ப­டுத்­தும் முன்­னர் கண்­டிப்­பா­கச் சோதித்­துப் பார்க்க வேண்­டும் என்று டாக்­டர் கோமதி தெரி­வித்­தார்.

ஈரப்­ப­தத்­தைக் காக்­கக்­கூ­டிய இத்­தி­ர­வம் தோலில் உள்ள துளை­களை அடைத்­து­விட வாய்ப்­பு­கள் உண்டு என்­பதே அதற்­குக் கார­ணம் என்­றார் அவர்.

'ஸ்னெ­யில் மியூ­சின்' பயன் படுத்­து­வ­தற்கு முன் அது எங்கு தயா­ரிக்­க­ப­டு­கிறது, எந்த நிறு­வ­னம் தயா­ரிக்­கிறது, என்­னென்ன பொருள்­கள் சேர்க்­கப்­பட்­டுள்­ளது என்­ப­தை­யும் கவ­னத்­தில் கொள்ள வேண்­டும் என்­ப­தும் டாக்­டர் கோம­தி­யின் அறி­வுரை ஆகும்.

'ஸ்னெ­யில் மியூ­சின்' சிகிச்­சை­க­ளுக்­குப் பின்பு தோல் குண­ம­டை­வ­தற்­காக பயன்­ப­டுத்­த­பட்­டது என்ற டாக்­டர் கோமதி, அதை­விட சிறந்த பொருள்­கள் தற்­போது உற்­பத்தி செய்­யப்­பட்டு வரு­வ­தால் அதைத் தமது மருந்­த­கத்­தில் பயன்­ப­டுத்­து­வதை நிறுத்தி­விட்­ட­தாக சொன்­னார்.

'ஸ்னெ­யில் மியூ­சின்' பயன்­பாட்­டைத் தவிர, பொது­வாக 'ரெட்­டி­னோல்' எனப்­படும் வைட்­ட­மின் 'ஏ' திர­வம் அல்­லது வைட்­ட­மின் 'சி' திர­வம் தோலில் ஏற்­படும் சுருக்­கங்­களை தவிர்க்­கும் என்­றார்.

ஈரப்­ப­தத்­தைக் காக்க 'ஹைய­லூ­ரோ­னிக்' அமி­லம் 'நைய­சி­ன­மைட்' அமி­லம் ஆகி­யவை அல்­லது உலர்ந்த சரு­மத்­திற்கு பிசு­பி­சுப்பு அதி­கம் உள்ள அடர்த்­தி­யான பசை (heavy cream) போன்­ற­வற்றை பயன்­ப­டுத்­த­லாம் என்­றும் டாக்­டர் கோமதி ஆலோ­சனை வழங்­கி­னார்.

அதோடு நிற­மி­க­ளைத் தவிர்க்க சூரிய கதி­ரி­லி­ருந்து காத்­துக்­கொள்ள பயன்­ப­டுத்­தும் 'சன் பிளாக்'கை பயன்­ப­டுத்­து­வது முக்­கி­யம் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.