சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2010ஆம் ஆண்டு முதல் நடத்தும் ஆனந்த பவன் அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி, இவ்வாண்டும் நடைபெற இருக்கிறது.
அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவு நாளை ஒட்டி வரும் ஆகஸ்ட் மாதம் பரிசளிப்பு விழா நடைபெறும்.
சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகிய மூன்று துறைகளில் ஒன்றைச் சேர்ந்த படைப்புக்குப் பரிசு வழங்கப்பட்டு வரும் நிலையில் இவ்வாண்டு கவிதை நூலுக்குப் பரிசு வழங்கப்பட உள்ளது.
அதனால் 2020, 2021, 2022 ஆகிய மூன்று ஆண்டுகளில் முதல் பதிப்பாகப் பதிப்பிக்கப்பட்ட கவிதை நூல்களின் 4 படிகளைக் குடியுரிமை அல்லது நிரந்தரவாசத் தகுதி பெற்ற எழுத்தாளர்கள் இந்தப் போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
நூல்களை அனுப்பி வைக்க இறுதி நாள் மார்ச் 31ஆம் தேதியாகும்.
கவிதைத் துறையில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்துகொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.
மற்ற துறைகளில் பரிசு பெற்றவர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.
நூல்களை அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி : Association of Singapore Tamil Writers, BLK 723 #13-149, Yishun St 71, Singapore 760723. அல்லது பொருளாளர் பிரேமாவிடம் (HP No. 91696996) Aaria Creations, 32 Upper Dickson Road, Singapore 207491 என்னும் முகவரியில் நேரிலும் கொடுக்கலாம்.
சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளில் இருந்து மூன்று நடுவர்கள் சிறந்த நூலைத் தேர்ந்தெடுக்க உதவுவார்கள்.
அந்த நூலுக்கு 2,000 வெள்ளி ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்படும்.
போட்டிக்கான விதிகளையும் விண்ணப்பப் படிவத்தையும் www.singaporetamilwriters.com எனும் எழுத்தாளர் கழகத்தின் இணையத் தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேல்விவரங்களுக்கு எழுத்தாளர் கழகத் தலைவர் நா. ஆண்டியப்பன் (97849105), கிருத்திகா (kiruthikavirku@gmail.com) ஆகியோருடன் தொடர்புகொள்ளலாம்.

