மறதிநோய் வகைகள்

மறதிநோய் வகைகள்

3 mins read
08f70da9-f1c3-4dca-95cf-129bf72d646c
-

சிங்­கப்­பூ­ரில் 60 வயது அல்­லது அதற்­கும் மேற்­பட்ட வய­துள்­ள­வர்­களில் 10 பேரில் ஒரு­வ­ருக்கு மற­தி­நோய் இருப்­ப­தாக சுகா­தார அமைச்­சின் புள்­ளி­வி­வ­ரங்­கள் கூறு­கின்­றன.

'டை ஹார்ட்' திரைப்­ப­டங்­களில் நடித்துப் புகழ்­பெற்ற அமெ­ரிக்க நடி­கர் புரூஸ் விலிஸ் மற­தி­நோ­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள செய்­தி­யால் மற­தி­நோய்­மீது பல­ரது கவ­னம் திரும்­பி­யது. புரூஸ் விலி­சுக்கு மூளை முன்­பக்­கச் சுருக்க மற­தி­நோய் (Frontotemporal dementia) எனப்­படும் மற­தி­நோய் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

மற­தி­நோ­யில் 100க்கு மேற்பட்ட வகை­கள் உள்­ள­தாக அல்­ஸை­மர்ஸ் நோய் இன்­டர்­நே­ஷ­னல் தெரி­வித்­துள்­ளது. ஒவ்­வொன்­றுக்­கும் வெவ்­வேறு அறி­கு­றி­கள் இருப்­ப­தா­க­வும் அது குறிப்­பிட்­டது. பொது­வா­கக் காணப்­படும் சில­வகை மற­தி­நோ­ய்களைப் பற்றி தெரிந்­து­கொள்­ள­லாம்.

அல்­ஸை­மர்ஸ் நோய்

உல­க­ள­வில் மற­தி­நோய் உள்­ள­வர்­களில் 60 முதல் 70 விழுக்­காட்­டி­ன­ருக்கு அல்­ஸை­மர்ஸ் நோய் இருப்­ப­தாக உலக சுகா­தார நிறு­வ­னம் கூறி­யுள்­ளது. மூளை அணுக்­க­ளுக்­குள்­ளே­யும் அதைச் சுற்­றி­யும் சில வகைப் புர­தங்­கள் உரு­வாகி தேங்­கு­வ­தால் அந்­நோய் ஏற்­ப­டு­கிறது.

அத­னால் மூளை அணுக்­க­ளுக்கு இடையே தக­வல்­கள் அல்­லது சமிக்­ஞை களை அனுப்­பும் இர­சா­ய­னக் கடத்­தி­கள் குறைந்­து­வி­டும். காலப்போக்­கில் மூளை­யின் பல்­வேறு பகு­தி­கள் சுருங்­கத் தொடங்­கும். இதில் முத­லில் பாதிக்­கப்­ப­டு­வது ஒரு­வ­ரின் நினை­வு­கள்­தாம்.

அல்­ஸை­மர்ஸ் நோய் காலப்­போக்­கில் மோச­மா­வ­தால் அதன் அறி­கு­றி­களும் மோச­ம­டை­யும். அத­னால் நினை­வாற்­றல் மங்­கு­வ­து­டன் சிந்­திக்­கும் திற­னும் பாதிக்­கப்­படும்.

தமது சுற்­றத்­துக்­கும் சுற்­றத்­தா­ருக்­கும் பதில் தரும் ஆற்­ற­லை­யும் சாப்­பிடு­வது, குளிப்­பது போன்ற எளிய செயல் ­க­ளைச் செய்­யும் ஆற்­ற­லும் குறை­யும்.

ரத்­த­நாள மற­தி­நோய்

அல்­ஸை­மர்ஸ் நோய்க்­குப் பிறகு ரத்­த­நாள மற­தி­நோய்­தான் (Vascular Dementia) உல­க­ள­வில் ஆக அதி­க­மாகக் காணப்­ப­டு­வ­தாக ஜான் ஹாப்­கின்ஸ் மருத்­து­வ­மனை கூறி­யுள்­ளது.

மூளை­யில் உள்ள ரத்த நாளங்­கள் பாதிக்­கப்­ப­டு­வ­தால் அல்­லது அவற்­றில் ரத்­தம் சீரா­கச் செல்­லா­த­தால் இவ்­வகை மறதி நோய் ஏற்­ப­டு­கிறது. பெரும்­பா­லும் வாத­நோ­யால் இந்­நிலை உண்­டா­கிறது.

மூளை­யின் எந்த இடம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது, எவ்­வ­ளவு பெரிய பகுதி பாதிக்­கப்­பட்­டுள்­ளது என்­ப­தைப் பொறுத்து, ஒரு­வ­ருக்கு மறதி ஏற்­ப­ட­லாம்.

அல்­லது, நோய் மோச­மாக இருக்­கும் பட்­சத்­தில், தெளி­வாக சிந்­திக்க முடி­யா­மல் போக­லாம். இல்­லை­யென்­றால் வழக்­க­மான இயக்­கத்தை முடக்­கும் அள­வுக்கு மோச­மான நினை­வாற்­றல் இழப்பு ஏற்­ப­டக்­கூ­டும்.

இத­ய­யோய், ரத்­த­நா­ளங்­கள் இறுகு தல் ஆகிவை ரத்­தக்­கு­ழாய் மற­தி­நோய் அபா­யத்தை அதி­க­ரிக்­கும். இந்­நோய் ஏற்­படும் அபா­யத்தை உண்­டாக்­கும் உயர் ரத்த அழுத்­தம், நீரி­ழிவு, உயர் ரத்­தக் கொழுப்பு, புகைப்­பி­டித்­தல் போன்­ற­வற்­றைக் குறைத்­தால் நோய் மோச­மா­வ­தைத் தள்­ளிப் போட­லாம் என்று சிங்­கப்­பூ­ரின் டிமென்­ஷி­யா­ஹப் இணை­யத்­த­ளம் தெரி­வித்­தது.

லூயி பாடி மறதி நோய்

மூளை அணுக்­க­ளுக்­குள் ஆல்ஃபா சினுக்­கி­ளைன் எனும் ஒரு வகைப் புர­தம் உண்­டா­கிப் பெரு­கும்­போது லூயி பாடி (Lewy Body) வகை மற­தி­நோய் ஏற்­ப­டு­கிறது. இவ்­வகை மற­தி­நோய், மூளை­யின் சில குறிப்­பிட்ட பகு­தி­க­ளைத் தாக்­கு­கிறது. அதன்­வழி, நினை­வாற்­றல், சிந்­த­னைத் திறன், நட­மாட்­டம், நடத்­தைப் போன்­ற­வற்றை பாதிக்­கும்.

மெது­வாக நட­மா­டு­தல், உடல்­ந­டுக்­கம், தசை இறுக்­கம், காட்சி பிரமை, போன்­றவை இந்­நோ­யின் அறி­கு­றி­க­ளா­கும். உட­லில் இறுக்­கம் அதி­க­ரிப்­பது, தடு­மாற்­றம், மெது­வான நடை போன்­வற்­றால் லூயி பாடி மற­தி­நோய் உள்­ள­வர்­கள் அடிக்­கடி விழும் ஆபத்­துள்­ளது.

மூளை முன்­பக்­கச் சுருக்க மற­தி­நோய்

இவ்­வகை மற­தி­நோ­யால்­தான் புரூஸ் விலிஸ் பாதிக்­கப்­பட்­டுள்­ளார். மூளை­யின் முன்­பக்­கம் மற்­றும் பக்­க­வாட்­டில் உள்ள பகு­தி­களில் உள்ள நரம்­ப­ணுக்­கள் காணா­மல் போய், மூளைப் பகு­தி­கள் சுருங்­கு­வ­தால் இந்­நோய் ஏற்­ப­டு­வ­தாக ஜான் ஹாப்­கின்ஸ் மருத்துவமனை கூறி­யுள்­ளது.

மூளை­யின் பகு­தி­கள் சுருங்­கி­ய­பின்­னர், இந்­நோய் உள்­ள­வர்­க­ளின் குண நலன்­கள், நடத்தை, உணர்ச்­சி­கள் போன்­ற­வற்­றில் மாற்­ற­மும் மொழி­யைப் புரிந்­து­கொண்டு பேசு­வ­தில் சிர­ம­மும் எற்­ப­ட­லாம்.

பல்­வகை மற­தி­நோய்

ஒன்­றுக்கு மேற்­பட்ட மற­தி­நோய் வகை தாக்­கும்­போது பல்­வகை மற­தி­நோய் (Mixed Dementia) ஏற்­ப­டு­வ­தாக அல்­ஸை­மர்ஸ் சங்­கம் குறிப்­பி­டு­கிறது. பொது­வாக, அல்­ஸை­மர்ஸ் நோயும் ரத்­த­நாள மற­தி­நோ­யும் ஒன்­றாக எற்­ப­டு­வ­துண்டு. சில நேரங்­களில் அல்­ஸை­மர்ஸ் நோய், ரத்­த­நாள மற­தி­நோய், லூயி பாடி வகை மூன்­றும் ஒன்­றாக ஏற்­ப­டக்­கூ­டும்.

மூளை­யின் எந்­தப் பகுதி பாதிக்­கப்­பட்­டுள்­ளது என்­ப­தைப் பொறுத்து இவ்வகை நோயின் அறி­கு­றி­கள் மாறும் என்று மருத்து­வர்­கள் கூறு­கின்­ற­னர்.