ஆரம்பநிலை அறிகுறிகள்

ஆரம்பநிலை அறிகுறிகள்

1 mins read
e8ecb154-14ba-45f0-8434-648368613876
-

புகழ்­பெற்ற தமிழ் நடிகை பானுப்­ரியா தமக்கு நினை­வாற்­றல் மங்­கு­வ­தாக அண்­மை­யில் கூறி­யி­ருந்­தார். அவ­ருக்கு மற­தி­நோய் உள்­ள­தென்று மருத்­துவ ரீதி­யா­கக் கூறப்­பட்­ட­தாக செய்­தி­கள் இல்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஆனால் பொது­வாக சாதா­ரண மறதிக்­கும் மறதி நோய்க்­கு­மான வேறு­பாடு­க­ளைக் கண்­டு­கொள்­வது சிர­ம­மா­கவே உள்­ளது. மறதி நோயின் அறி­குறி­க­ளைத் தொடக்­கத்­தி­லேயே கண்டு ­கொண்­டால் நோய் மோச­ம­டை­வதைத் தள்­ளிப்­போட முடி­யும் என்று மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

குறு­கி­ய­நேர மறதி: மறதி என்­பது மற­தி­நோ­யின் ஆரம்­ப­நிலை அறி­கு­றி­களில் ஒன்று. பல்­லாண்­டு­களுக்கு முன் நடந்­ததை மறக்­கா­த­வர்­கள், அன்று காலை­யில் என்ன உண்­டோம், பொருள்­களை எங்கு வைத்­தோம், போன்ற அம்­சங்­களை மறந்­து­வி­டக்­கூ­டும்.

சலிப்பு: ஆர்­வம் இல்­லா­த­தும் சலிப்­பும் மற­தி­நோ­யின் அறி­கு­றி­யாக இருக்­க­லாம். மற­தி­நோய் உள்­ள­வர்­க­ளுக்­குப் பழைய பொழு­து­போக்­கு­களில் அல்­லது வெளியே சென்று மகிழ்­வ­தில் அல்­லது குடும்­பத்­தா­ரு­டன் நேரம் கழிப்­ப­தில் ஆர்­வம் குன்­றக்­கூ­டும்.

திசை­மா­றிச் செல்­வது: மற­தி­நோய் ஏற்­ப­டும்­போது எங்­கி­ருக்­கி­றோம், எத்­தி­சை­யில் செல்­ல­வேண்­டும் என்­பன மறந்­து­போ­க­லாம். முன்பு பழக்­கப்­பட்ட இடங்­க­ளுக்­குச் செல்­வ­தில் அவர்­க­ளுக்கு சிர­மம் ஏற்­ப­டக்­கூ­டும்.

குழப்­பம்: நபர்­கள், தேதி, நாள், இடம் போன்­ற­வற்­றைச் சரி­யாக அடை­யா­ளம் கண்டு சொல்­ல­மு­டி­யாது குழப்­ப­ம­டை­வ­தும் ஓர் அறி­கு­றி­யா­கும்.

கோபம்/மன­அ­ழுத்­தம்: மற­தி­நோய் உள்­ள­வர்­கள் அடிக்­கடி கோபம் அல்­லது மன அழுத்­தம் கொள்­ள­லாம். அல்­லது அவர்­கள் அன்­றா­டம் பழக்­கப்­பட்­டவை மாறி­னால் பதற்­றமாகலாம்.

சொற்­கள்: மற­தி­நோய் உள்­ளோர் சில நேரங்­களில் சில அடிப்­படை சொற்­களை மறக்­க­லாம் அல்­லது மற்­ற­வர்­க­ளைப் புரிந்­து­கொள்­வ­தில் அவர்­க­ளுக்­குச் சிர­மம் ஏற்­ப­ட­லாம்.