நியூயார்க்: மலர்கள், கடற்கரை, புல்வெளி, மேகங்கள், பருத்தி, ஆகியவற்றின் நறுமணம் கொண்ட மெழுகு வத்திகளில் சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் பிரபலம். 'யேங்கி கேன்டல்' போன்ற நிறுவனங்கள் இனிப்புத் தின்பண்டங்களின் மணம் அடங்கிய மெழுதுவத்திகளைத் தயாரித்து வருகின்றன. சில வகைகள் கிறிஸ்துமஸ் நேரங்களில் அதிகம் வாங்கப்படுகின்றன.
அதே வரிசையில் தற்போது பாஸ்டா, தக்காளி, வறுத்த பூண்டு, வெண்ணை போன்ற இனிப்புவகை அல்லாத மற்ற உணவு வகைகளின் மணம் அடங்கிய மெழுகுவத்திகள் தற்போது பிரபலமாகி வருகின்றன.
இத்தகைய மெழுகுவத்திகள் பெரும்பாலும் மணத்துக்காக மட்டுமல்ல அவை தூண்டும் இனிமையான பழைய ஞாபகங்களுக்காக விரும்பப்படுகின்றன.
உணவகங்கள், சமையற்கலை நிபுணர்கள் ஆகியோருடன் கைகோத்து நறுமண நிறுவனங்கள் இவற்றைத் தயாரிக்கின்றன.
இதில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களில் ஒன்று, நியூயார்க்கைச் சேர்ந்த 'டிஎஸ் அண்ட் துர்கா' எனும் வாசனைத் திரவ நிறுவனமாகும். வாசனைத் திரவத் தயாரிப்பு பற்றி சுயமாகக் கற்றுக்கொண்ட டேவிட் மோல்ட்சும் அவரது மனைவி கவி அஹுஜாவும் நிறுவனத்தை நடத்துகின்றனர். ஜூப்பிடர் என்ற உணவகத்துடன் இணைந்து வேகவைத்த ரவா மாவின் மணத்தை மெழுகுவத்தியாகத் தயாரித்துள்ளனர்.

