ஃபேஸ்புக், இன்ஸ்டகிராமில் கட்டணமுள்ள சேவை

1 mins read

சான் பிரான்சிஸ்கோ: மெட்டா நிறுவனம் தான் நடத்திவரும் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் சமூக ஊடகங்களில் கட்டணமுள்ள சேவையை அறிமுகம் செய்துள்ளது.

சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு நிறுவனம் மாதாந்திரக் கட்டணச் சேவையைத் தொடங்கியுள்ளது.

அங்கீரிக்கப்பட்ட கணக்குக்கான நீலநிற 'சரி' குறியைப் பெற மாதத்துக்கு 11.99 அமெரிக்க டாலர் (S$16) அல்லது 14.99 அமெரிக்க டாலர் (S$20) செலுத்த வேண்டும். அச்சேவை ஆஸ்திரேலியா, ் நியூசீலந்து இரண்டிலும் பின்னர் மற்ற நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

ஏற்கெனவே அங்கீகாரம் பெற்ற கணக்குகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று கூறப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சேவையைப் பயன்படுத்தலாம்.

அச்சேவை போலிக் கணக்குகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் என்று மெட்டாவின் தலைமை நிர்வாகி மார்க் ஸக்கர்பெர்க் நேற்று முன்தினம் கூறினார்.