மாதாமாதம் மாதர் படும் பாடு

பொன்­மணி உத­ய­கு­மார்

தங்­க­ளின் மாத­வி­டாய்க் காலத்­தில் ஸ்பெ­யின் நாட்டு மாதர், மூன்­றி­லி­ருந்து ஐந்து நாள்­கள் வரை ஒவ்­வொரு மாத­மும் சம்­ப­ளத்துடன் விடுப்பு எடுத்­துக்­கொள்­ள­லாம். மாதர் நலனை பேணும் வகை­யில் ஜப்­பான், தென்­கொ­ரியா, தைவான், இந்­தோ­னீசியா, ஸாம்­பியா போன்ற நாடு­களை அடுத்து ஸ்பெ­யின் அரசு இது தொடர்­பான சட்­டத்தை நிறை­வேற்­றி­யது.

கடும் வலி­யால் மாத­வி­டாய்க் காலத்­தில் அவ­தி­யு­றும் மாதர் சிலர், அதைப் பொறுத்­துக்­கொண்டு வேலைக்­குச் செல்­வது வழக்­க­மா­கி­விட்­டது.

‘இந்த வம்பே வேண்டாம்’

மாத­வி­டாய் குறித்­துப் போதிய அறி­தல் இல்­லாத ஆண் மேலா­ளர்­கள், மாத­விடாய்க் காலத்­தில் வலி ஏற்­ப­டாத பெண் முத­லா­ளி­கள் ஆகிய இரு­த­ரப்­பி­ன­ருக்­கும் புரிந்­து­ணர்வு குறை­வாக இருக்­கிறது என­லாம். இத­னால், மாத­வி­டாய்க் காலத்­தில் கடும் வலி­யால் அவ­தி­யு­றும் மாதர் ‘இந்த வம்பே வேண்­டாம்’ என விடுப்பு கோரா­மல் வலியுடன் வேலை பார்க்கிறார்கள்.

இந்­நி­லை­யில் மாத­வி­டாய்க் கால விடுப்­புத் திட்­டம் சிங்­கப்­பூ­ரில் நடை­முறைப்­ப­டுத்­து­வது தொடர்­பில் மாதர் சில­ரி­டம் கருத்து கேட்­டது தமிழ் முரசு.

நீக்குப்போக்கு தேவை

மனி­த­வ­ளத் துறை­யில் பணி­பு­ரி­யும் 22 வயது ராகா, தாம் 13 வய­தி­லி­ருந்தே மாத­வி­டாய்க் காலத்­தில் வலியை அனு­ப­வித்­துள்­ள­தா­கப் பகிர்ந்­து­கொண்­டார். வேலை­யி­லி­ருந்து விடுப்பு பெற, மருத்­து­வச் சான்­றி­த­ழைப் பெறும் நிலை அவருக்குப் பல­முறை ஏற்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் மாத­வி­டாய்க்­கென நிறு­வ­னங்­கள் விடுப்பு நாள்­களை ஒதுக்­கி­னால் நன்­றாக இருக்­கும் எனக் கரு­தும் இவர், சிங்­கப்­பூர் முத­லா­ளி­கள் எந்த அள­விற்கு இதை ஏற்­றுக்­கொள்­வார்­கள் என்­பது கேள்­விக்­கு­றியே எனக் கூறி­னார். விடுப்பு கிடைக்­காத பட்­சத்­தில் வீட்­டி­லி­ருந்து வேலை பார்க்­கும் நீக்குப்போக்கு இருப்பது நன்று என்­றும் இவர் தெரி­வித்­தார்.

ஓய்வு முக்கியம்

கணக்­காய்­வா­ளர் ஷிரின், 21, வேலை­யில் சேர்ந்து ஓராண்டு காலம் ஆகி­விட்­டது என்­றார். இருப்­பி­னும் மாத­விடாய்க் காலத்­தில் வேலை­யி­லி­ருந்து விடுப்பு கோரு­வ­தற்­குத் தாம் பெரி­தும் தயங்­கு­வ­தாக அவர் கூறி­னார். ஆனால் தமது நிறு­வ­னம் அவ்­வப்­போது வீட்­டிலிருந்து வேலை பார்க்க அனு­ம­திப்­பது உத­வு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

மார­டைப்­புக்கு நிக­ரான அதே அளவு வலி மாத­வி­டாய்க் காலத்­தில் ஏற்­படும் என்று மருத்­து­வர்­கள் கூறி­யும் பலர் மாத­வி­டாய் வலியை அலட்­சியப்­படுத்­து­கின்­ற­னர். போதிய ஓய்வு கிடைத்­தால் மட்­டுமே வேலை­யைச் சரி­யா­கச் செய்து முடிக்க முடி­யும் என்­பது ஷிரி­னின் கருத்­தா­கும்.

வேலையே கதி என்ற இக்காலத்தில் சட்­டத்­தி­லும் நிறு­வ­னங்­க­ளி­லும் மாத­வி­டாய்க்­கென விடுப்பு நாள்­கள் ஒதுக்­கப்­ப­டு­வது சந்தேகமே என்­றார் ஷிரின். அதிலும் அதிக உடல் உழைப்பு தேவைப்­படும் துறை­களில் மாத­விடாய்க்­கென விடுப்பு அளிப்­பது அவ­சி­ய­மான ஒன்று என்­று­ரைத்­தார்.

மௌனமாக அவதிப்படும் நிலை

முன்­ன­தாக தக­வல்­தொ­ழில்­நுட்­பத் துறை­யில் பணி­பு­ரிந்த திரு­மதி ராதிகா ராம­லிங்­கம், மாத­வி­டாய்க் காலங்­களில் அவ்­வப்­போது விடுப்பு கேட்­டி­ருந்­த­தா­கக் கூறி­னார். அத்­த­ரு­ணங்­களில் மேலா­ளர்­கள் முகம் சுளித்­த­துண்டு என்­றும் அவர் கூறி­னார்.

கடும் இடுப்பு வலி­யால் ஒவ்­வொரு மாத­மும் தவிக்­கும் இவர், மாத­வி­டாய்க் காலத்­தின் முதல் நாளி­லா­வது ஓய்வு பெற நினைப்­பார். ஆனால் மேலா­ளர்­கள் ஆண்­க­ளாக இருக்­கும் பட்­சத்­தில் அவர்­க­ளுக்கு மாத­வி­டாய் குறித்த புரி­தல் இல்­லா­த­தால் பல­முறை தாம் மௌன­மாக அவ­திப்­பட்­டுள்­ள­தா­கக் கூறி­னார்.

தற்­போது இவர் தமது மாத­வி­டாய்க் காலத்­தில் வீட்டு வேலை­கள் செய்­வதைக் குறைத்­துக்­கொள்­வ­தா­கக் குறிப்­பிட்­டார். நான்கு வயது குழந்­தைக்­குத் தாயான இவர், திரு­ம­ணம் ஆன ஆரம்ப காலத்­தில் தம் கண­வ­ருக்­குக்­கூட இதுகுறித்த புரி­தல் இல்லை என்று சொன்­னார்.

சிங்கப்பூரில் நடப்புக்கு வருமா...

அறி­தல் புரி­தலை அதி­க­ரிக்­கும். புரி­தல் மாற்­றங்­க­ளுக்கு வழி­வ­குக்­கும் என்­பதே தமிழ் முர­சி­டம் பேசிய மாத­ரி­டையே பொதுவாக நில­விய கருத்­தா­கும். வருங்­கா­லத்­தில் சிங்­கப்­பூ­ரி­லும் மற்ற நாடு­களைப் போல் மாத­வி­டாய்க் கால விடுப்­புத் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்­பது இவர்­க­ளின் விருப்­பமா­கும்.

அப்போதுதான் வலி ஏற்­படும் நாள்­களில் தயங்­கா­மல், பயப்­ப­டா­மல் ஓய்­வு­பெ­றும் வாய்ப்பையும் தைரியத்தையும் இந்த விடுப்­புத் திட்­டம் நம் மாத­ருக்கு அளிக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!