தசை வலிமை அதிகமில்லாத நடுத்தர வயது மாதரிடையே நீரிழிவு அபாயம் இருமடங்கு

தசை வலிமை அதிகமில்லாத நடுத்தர வயது மாதரிடையே நீரிழிவு அபாயம் இருமடங்கு

2 mins read
8ef365d1-aff2-4122-9618-ba31eb705776
படம்: இணையம் -

வழக்­க­மான தசை வலிமை உள்ள மாத­ரு­டன் ஒப்­பி­டு­கை­யில் தசை வலிமை அதி­க­மில்­லாத மாத­ருக்கு நீரி­ழிவு நோய் ஏற்­படும் அபா­யம் இரு­ம­டங்கு என்று 1,170 மாதர் பங்­கேற்ற ஆய்வு ஒன்று கண்­ட­றிந்­துள்­ளது. 45 வய­துக்­கும் 69 வய­துக்­கும் இடைப்­பட்ட இவர்­கள், தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யும் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் யோங் லூ லின் மருத்­து­வப் பள்­ளி­யும் கூட்­டாக மேற்­கொண்ட ஆய்­வில் பங்­கேற்­ற­னர்.

வலி­மை­யைச் சோதிக்­கக்­கூடிய ஒரு கைய­டக்­கக் கரு­வி­யைக் கொண்டு ஆய்­வில் பங்­கேற்ற மாத­ரின் கைப்­பிடி பலத்தை ஆய்­வா­ளர்­கள் அள­விட்­ட­னர். அதைக்­கொண்டு பங்­கேற்­பா­ளர்­க­ளது உடம்­பின் மேல்­ப­கு­தித் தசை வலி­மையை ஆய்­வா­ளர்­கள் மதிப்­பிட்­ட­னர்.

சீன, மலாய், இந்­திய இனத்­த­வர் பங்­கேற்ற இந்த ஆய்­வில் கீழ் மூட்டு வலி­மை­யும் சோதிக்­கப்­பட்­டது. பங்­கேற்­பா­ளர்­கள் தங்­க­ளின் கைகளை மடக்­கி­ய­வாறு வரி­சை­யாக ஐந்து முறை உட்­கார்ந்து எழுந்­த­னர்.

ஆய்­வில் பங்­கேற்ற 1,170 பேரில், 12 விழுக்­காட்­டி­ன­ருக்கு நீரி­ழிவு நோய் இருப்­பது தெரி­ய­வந்­தது. ரத்த குளுக்­கோஸ் பரி­சோ­தனை இதை உறு­திப்­ப­டுத்­தி­யது. நீரி­ழிவு நோய் உள்ள மாத­ரி­டையே 18 கிலோ­வுக்­கும் குறை­வான அளவு கைப்­பிடி பலம் காணப்­பட்­டதை ஆய்வு உறு­திப்­ப­டுத்­தி­யது.

அத்­து­டன் எழுந்து நிற்­ப­தற்கு 12 வினா­டிக்கு மேல் எடுத்­துக்­கொண்ட மாத­ருக்கு நீரி­ழிவு நோய் ஏற்­படும் சாத்­தி­யம் அதி­கம் என்­றும் கண்­ட­றி­யப்­பட்­டது.

நீரி­ழிவு நோய் தொடர்­பில் தசை வலிமை எத்­த­கைய முக்­கி­யத்­து­வம் பெறுகிறது என்­பதை ஆய்வு ஆத­ரிப்­ப­தாக தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யின் ஓய்­வு­பெற்ற ஆலோ­ச­க­ரும் பேரா­சி­ரி­ய­ரு­மான யோங் இயூ லியோங் தெரி­வித்­தார்.

உடம்­பின் மேல் தசைப்­ப­குதி வலி­மை­யை­யும் மூட்டு வலி­மை­யை­யும் சேர்த்து ஆரா­யும்­போது நீரி­ழிவு நோய் ஏற்­படும் அபா­யத்தை மேலும் துல்­லி­ய­மாக மதிப்­பி­ட­லாம் என்­றார் அவர்.