நீரிழிவு நோயாளிகளின் நண்பன் ஓட்ஸ்

நீரிழிவு நோயாளிகளின் நண்பன் ஓட்ஸ்

2 mins read
8b0ecd3f-be51-4039-949a-3a07a330ac1b
-

ரத்­தத்­தில் சர்க்­கரை அளவை அதி­கம் உயர்த்­தாத காலை உணவை விரும்­பும் நீரி­ழிவு நோயா­ளி­க­ளுக்கு உத­வும் உண­வு­வ­கை­களில் ஒன்று ஓட்ஸ்.

ஒரு கோப்பை ஓட்­சில் ஏறத்­தாழ 30 கிராம் மாவுச்­சத்து இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அதில் அதிக நார்ச்­சத்­தும் உள்­ளது. அது அதிக நேரம் வயிறு நிரம்­பி­யி­ருக்க உத­வு­கிறது.

அத­னால் ஓட்ஸ் ரத்­தத்­தில் மிக மெது­வாக சர்க்­க­ரை­யாக மாறு­கிறது. மேலும் கொழுப்­பைக் குறைக்க உத­வு­வ­தால் இத­யத்­துக்­கும் ஓட்ஸ் நன்மை தரக்­கூ­டி­யது.

ஆனால் ஓட்ஸ் உண்­ணும்­போ­தும் சில குறிப்­பு­களை மன­தில் கொள்­வது முக்­கி­யம். ஏனென்­றால் அள­வுக்கு மீறி­னால் ஓட்ஸ் பாதிப்பை ஏற்­ப­டுத்­தக் கூடி­ய­து­தான்.

உட­ன­டி­யாக வேகும் ஓட்­சில் சர்க்­கரை அல்­லது உப்பு போன்­றவை சேர்க்­கப்­பட்­டி­ருக்­க­லாம். அத­னால் சாதா­ரண ஓட்ஸ் வாங்­கு­வதே சிறப்பு.

முத­லில் ஓட்சை காலை­யில் உண்­ப­து­தான் நல்­லது. உட­லுக்கு அதி­கம் எரி­சக்தி தேவைப்­ப­டாத, உடல் மந்­த­மாக இருக்­கும் மாலை, இரவு நேரங்­களில் ஓட்­சைத் தவிர்க்க வேண்­டும்.

ஒரு வேளைக்கு சிறி­த­ளவு ஓட்ஸ், சுமார் இரண்டு மேசைக்­க­ரண்­டி­கள் போது­மா­னது.

ஓட்­சு­டன் நல்ல கொழுப்­புள்ள, சியா விதை, ஆளி விதை, பாதாம், வால்­னட், சூரி­ய­காந்தி விதை போன்­ற­வற்­றைச் சேர்த்­துக்­கொள்­ள­லாம். பட்­டைத் தூளைச் சேர்த்­தால் ஓட்­சில் சுவை சேரும். அல்லது, எள்ளு, பாதாம் போன்றவற்றால் ஆன வெண்ணை அல்லது பாலை ஓட்சில் சேர்த்துக் கொள்ளலாம்.

அத்­து­டன், பட்­டைத் தூள் ரத்­தச் சர்க்­கரை அள­வைக் குறைக்­கும் தன்மை கொண்­டது. சர்க்­கரை போன்­ற­வற்றை ஓட்­சில் சேர்ப்­ப­தைத் தவிர்த்­து­விட்டு, தேன், உலர்ந்த திராட்சை, பேரிச்­சம்­ப­ழம் போன்­ற­வற்றை மிக­வும் குறைந்த அள­வில் சேர்க்­க­லாம்.