விளையாட்டுக் காலணிக் கண்காட்சி

விளையாட்டுக் காலணிக் கண்காட்சி

2 mins read
f563c312-9584-4bde-9dce-53e2b29c2a02
-

விளையாட்டுக் காலணிகளுக்கான சிறப்புக் கண்காட்சியான 'ஸ்னீக்கர்டோப்பியா', சிங்கப்பூர் வந்துள்ளது. பல அரிய வகை விளையாட்டுக் காலணிகளையும் கலைப் படைப்புகளையும் கண்காட்சியில் கண்குளிரப் பார்த்து மகிழலாம்.

அமெ­ரிக்­கா­வின் லாஸ் ஏஞ்­ச­லிஸ் நக­ரில் தொடங்­கப்­பட்ட புகழ்­பெற்ற 'ஸ்னீக்­கர்­டோப்­பியா' விளை­யாட்­டுக் கால­ணி­கள் கண்­காட்சி நாளை முதல் ஜூலை 30ஆம் தேதி வரை சிங்­கப்­பூ­ரின் கலை அறி­வி­யல் அரும்­ பொரு­ள­கத்­தில் நடை­பெற உள்­ளது. ஆசி­யா­வில் இந்தக் கண்காட்சி நடை­பெ­று­வது இதுவே முதன்­மு­றை­யா­கும்.

இதில் 100க்கும் மேற்­பட்ட அரிய, குறிப்­பிட்ட காலத்­துக்கு மட்­டும் விற்­கப்­பட்ட விளை­யாட்­டுக் கால­ணி­கள் காட்­சிக்கு வைக்­கப்­படும்.

அக்­கா­ல­ணி­கள் பிர­தி­ பலிக்­கும் துணைக் கலாச்­சாரங்­கள், அவற்­று­டன் தொடர்­பு­டைய, ஹிப் ஹாப் வகை இசை, ஆடை அணி­க­லன்­கள் போன்­ற­வற்­றை­யும் கண்­காட்சி ஆரா­யும். ஆடை அலங்­கா­ரம் முதல் வீதிச் சித்­தி­ரங்­கள் வரை­யிலான பல்­வேறு அம்­சங்­களை எடுத்­து­ரைக்­கும் வகை­யில் 60க்கும் மேற்­பட்ட கலைப் படைப்­பு­கள் கண்­காட்­சிக்­காக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

அனைத்­து­லக, உள்­நாட்டுக் கலை­ஞர்­கள் இவற்றை உரு­வாக்­கி­யுள்­ள­னர். அவர்­களில் 16 சிங்­கப்­பூர் கலை­ஞர்­கள் சிங்­கப்­பூ­ரின் தனித்­து­வ­மான பார்­வையை முன்­வைப்­பர் என்று ஏற்­பட்­டா­ளர்­கள் கூறி­னர்.

'ஸ்னீக்­கர்­டோப்­பியா' கண்­காட்­சியை உரு­வாக்­கி­ய­வர்­களில் ஒரு­வ­ரான அமெ­ரிக்­கர் ஸ்டீவ் ஹேரிஸ், உல­க­ள­வில் பலரை இணைக்­கும் ஒற்­றைப் பொருள் என்று விளை­யாட்­டுக் கால­ணி­களை வரு­ணித்­தார்.

விளை­யாட்­டுக் கால­ணி­ க­ளைக் கொண்­டா­டும் கலா­சா­ரம் அமெ­ரிக்­கா­வில் தொடங்­கி­ய­போ­தும் சிங்­கப்­பூ­ரில் அது பிர­ப­ல­மாகி வரு­வதை ஏற்­பாட்­டா­ளர் ராஸ் லியோ சுட்­டி­னார். அரிய விளை­யாட்­டுக் கால­ணி­கள் இன்று முத­லீ­டு­க­ளா­கப் பார்க்­கப்­பட்­டா­லும் அவை கலை, கற்­பனை ஆற்­ற­லின் வெளிப்­பா­டா­கவே முதன்­மு­த­லில் பார்க்­கப்­பட்­டதை அவர் நினை­வு­கூர்ந்­தார்.

மாயத் தோற்­றத்தை உரு­வாக்­கும் சிற்­பம், பெண்­கள் உரு­வாக்­கிய கலைப்­ப­டைப்­பு­கள், விளை­யாட்­டுக் கால­ணி­க­ளின் தோற்­றம், அவற்­றின் பயன்­பாடு, அவற்­றைப் பிர­ப­ல­மாக்­கிய கூடைப்­பந்து விளை­யாட்டு போன்­ற­வற்றை எடுத்­து­ரைக்­கும் பகு­தி­யும் கண்­காட்­சி­யில் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

விளை­யாட்­டுக் காலணி உற்­பத்­தி­யில் நீடித்த நிலைத் தன்மை புகுந்­துள்­ள­தற்கு அடை­யா­ள­மாக மறு­சு­ழற்சி செய்­யப்­பட்ட அட்­டை­களில் பெரிய விளை­யாட்­டுக் கால­ணிச் சிற்­பத்தை பிரெஞ்சு கனேடி கலை­ஞர் அலீஸ் ஸ்மொ­லுக் அமைத்­துள்­ளார்.