அரிசி அல்லது மாவுப் பொட்டலங்களில் வண்டுவராமல் இருப்பதற்கு சில வழிகள்:
காய்ந்த மிளகாய், பூண்டு, பிரிஞ்சி இலை, வேப்ப இலை, போன்றவற்றை மாவு அல்லது அரிசி பாத்திரத்தில் வைக்கலாம். அது வண்டுகளைத் தடுக்க உதவும். மஞ்சள் துண்டு அல்லது வசம்பை வைத்தாலும் பயனளிக்கும். கிராம்பை அரிசி, மாவு பாத்திரத்தில் அல்லது சமையலறை அலமாரியில் வைத்தால் வண்டுகள் வராது. மேலும், தீக்குச்சிப் பெட்டிகளையும் பாத்திரத்தில் வைக்கலாம். ஏனெனில் தீக்குச்சியில் உள்ள கந்தகம் வண்டுகளை விரட்ட உதவும்.

