கை கொடுத்த கைத்தொழில்

கை கொடுத்த கைத்தொழில்

5 mins read
bd6da958-d41e-4eb4-bf94-32fc6edd503b
-
multi-img1 of 3

முஹமட் இர்ஃபான் அஸ்மான் பகலில் பலதுறைத் தொழிற்கல்லூரியின் கணினிப் பொறியியல் மாணவர். ஆனால், வார யிறுதிகளில் முடிதிருத்து பவராக மாறி விடுவார்.

வருகின்ற மே மாதத்தில் 18 வயதாகும் இர்ஃபானுக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவமே புதிய தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்ள வைத்தது.

2020 ஜூன் மாதத்தில் முடி திருத்தகத்துக்குச் சென்ற இர்ஃபான், இரண்டு மணி நேரம் காத்திருந்தும் முடி வெட்ட முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.

கொள்ளைநோய் பரவிய அந்தக் காலக்கட்டத்தில் முடி திருத்தும் ஊழியர் களில் பலர் தொற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்தனர்.

"அப்போதுதான் முடிவெட்டக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே ஏற்பட்டது," என்றார் இர்ஃபான்.

இணையம் வழியாகத் தலை முடியை அலங்கரிக்கும் உபகரணங் களையும் சாதனங்களையும் வாங்கிய அவர், யூடியூப் காணொளிகளைப் பார்த்துத் தலைமுடியை அலங்கரிக்கக் கற்றுக்கொண்டார்.

2021ஆம் ஆண்டு இறுதியில் முதல் முறையாக ஒரு வாடிக்கை யாளர் அவரிடம் பணம் கொடுத்து தலை முடியை வெட்டிக்கொண்டார்.

கடந்த ஆண்டு தனது தொழில் பற்றிய டிக்டாக் கணக்கு ஒன்றைத் தொடங்கினார்.

இதனால் துவாசிலிருந்துகூட வாடிக்கையாளர்கள் அவரது வீடு உள்ள பாசிர்ரிஸ் வரை வந்தனர். ஒருமுறை தலைமுடி வெட்ட அவரது கட்டணம் $20.

புதிய பாணிகளை பின்பற்றிய தால் அவருக்கு வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.

படிப்புக்கு முன்னுரிமை வழங்கிய தால் வாரயிறுதியில் மட்டும் அவர் முடிதிருத்தும் வேலையை செய்து வந்தார்.

இருந்­தா­லும் ஹரி­ராயா போன்ற பண்­டி­கை­கள் நெருங்­கும் நாட்­களில் முன்­ப­திவு எதிர்­பா­ராத அள­வுக்கு இருந்­தது.

இதில் ஈட்­டிய வரு­மா­னத்தை தலை­மு­டிக்­குப் பயன்­ப­டுத்­தும் ஒரு பொருளை உரு­வாக்க அவர் பயன்­ ப­டுத்­திக்­கொண்­டார். அது, இன்­ன­மும் ஆரம்­பக் கட்­டத்தி லேயே உள்­ளது.

"நீங்­கள் ஒரு பக்­கம் கைத் தொழி­லைக் கற்­றுக்­கொள்ள வேண்­டும். பணத்­துக்­காக அல்ல. அது, உங்­கள் தனிப்­பட்ட வளர்ச்­சிக்­கான அனு­ப­வங்­க­ளைப் பெற உத­வும்," என்று டிக்­டாக் காணொளி ஒன்­றில் இர்­ஃபான் தெரி­வித்­துள்­ளார்.

தனது அனு­ப­வங்­களை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் பகிர்ந்து கொண்ட இர்­ஃபான், பல­வி­த­மான பின்­ன­ணி­யில் உள்­ள­வர்­க­ளைச் சந்­திப்­ப­தும் அவர்­க­ளின் கதை களைக் கேட்­ப­தும் உண்­மை­யில் அறி­வுக் கண்­க­ளைத் திறக்­கிறது. புதிய தொடர்­பு­களை ஏற்­ப­டுத்துகிறது," என்­றார்.

2021ஆம் ஆண்டு, பலர் வேலை­யி­லி­ருந்து வில­கும் ஆண்­டாக அமைந்­தது. 2022 வேலை­யி­லி­ருந்து விலக முடி­யாத ஆண்­டாக இருந்­தது. 2023ஆம் ஆண்டு ஒரு புதிய தொழி­லைக் கற்­றுக்­கொள்­ளும் ஆண்­டாக அமை­ய­வி­ருக்­கிறது.

2023 டாவோஸ் நகர அறை­க­லன் தொழில்­மு­னை­வர் களுக்­கான உல­கப் பொரு­ளி­யல் அரங்­கத்­தைப் பற்­றிய கட்டுரை, பல தொழில்­களை தெரிந்து கொள்­வது ஒரு புதிய போக்­காக மாறி வரு­கிறது என்று குறிப்­பிடு கிறது.

அதா­வது 36 விழுக்­காடு அமெ­ரிக்­கர்­கள் 2022ல் கைத் தொழில் ஒன்றை ஆரம்­பித்­த­னர் அல்­லது ஆரம்­பிக்க திட்­ட­மிட்டு இருந்­த­னர்.

2022 அக்­டோ­ப­ரில் வெளியிடப்­பட்ட மெக்­கன்­சி­யின் அமெ­ரிக்­கர்­க­ளுக்­கான வாய்ப்­பு­கள் பற்­றிய ஆய்­வ­றிக்கையும் அதி­க­மான ஊழி­யர்­கள் பல தொழில்­களில் ஈடு­ப­டு­வார்­கள் என்று தெரி­வித்­தது.

ஆனால் சிங்­கப்­பூ­ரில் எத்­தனை பேர் வேறு ஒரு தொழி­லில் ஈடு­பட்டு வரு­கி­றார்­கள் என்­பது தெரி­ய­வில்லை.

கடந்த ஆண்டு வேலை செய்­த­வர்­களில் 3.1 விழுக் காட்­டி­னர் மட்­டுமே பல வேலை களை செய்து வரு­கின்­ற­னர் என்று சிங்­கப்­பூர் ஊழி­யர் அணி­யின் 2022ஆம் ஆண்­டின் புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக் கின்­றன. இது, 2021ல் சற்­றுச் கூடு­த­லாக 3.5 விழுக்­கா­டாக இருந்­தது.

ஆனால் பல தொழில்­கள், அதன் தீவி­ரம் மற்­றும் நோக்­கத் தில் மாறு­ப­டு­வ­தால் அவை வெளிப்­ப­டை­யா­கத் தெரி­யா­மல் இருக்­கக்­கூ­டிய வாய்ப்­புள்­ளது.

'ராபர்ட் வால்­டர்ஸ் சிங்­கப்­பூர்' என்ற வேலைக்கு ஆள் அமர்த்­தும் நிறு­வ­னத்­தின் அனா­ரான் திங், பல தொழில்­களில் ஈடு­ ப­டு­வது வருங்­கா­லத்­தில் பிர­ப­ல­மா­க­லாம் என எதிர்­பார்க்­கி­றார்.

அதி­க­ரித்­து­வ­ரும் பண­வீக்­கம், பொரு­ளி­யல் மந்­த­நி­லைக்­கான சாத்­தி­யம். நிலை­யில்­லாத வேலை போன்ற கார­ணி­களை அவர் கார­ண­மாக சுட்­டிக்­காட்­டு­கி­றார்.

ஒரே ஒரு பிர­தான வேலை­யில் கிடைக்­கும் வரு­மா­னம் மட்­டுமே போது­மா­ன­தாக இருக்­காது என்­கி­றார் அவர்.

பல தொழில்­களில் ஈடு­படு வோருக்கு சமூக ஊட­கங்­கள் பக்­க்­ப­ல­மாக இருக்­கின்­றன. எந்த இடத்­தி­லி­ருந்­தும் வேலை செய்­யக்கூடிய வச­தி­கள் தற் போது ஏற்­பட்­டுள்­ளன என்று அவர் கூறி­னார்.

வீட்­டி­லி­ருந்தே தொழில் செய்­யக்­கூ­டிய இணை­யம் வழி கற்­பித்­தல், தனி­யார் வாட­கைக் கார் ஓட்­டு­ந­ராக மாறு­வது போன்ற தொழில்­களில் எளி­தாக ஈடு­ப­டக்­கூ­டிய சூழல் நிலவுகிறது.

மூத்த தொழில் பயிற்­று­விப்பாள­ரான அட்­ரி­யன் சூ, சிங்­கப் பூரின் இளம் ஊழி­யர்­க­ளி­டையே மாற்­றுத் தொழில்­கள் பிர­ப­ல­மாகி வரு­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

ஊழி­யர்­கள் தங்­கள் வேலைகளுக்கு வெளியே கூடு­தல் வருமானம் மற்­றும் அனு­ப­வங்­க­ளுக்காக இத­னைச் செய்து வரு கின்­ற­னர் என்­கி­றார்.

கைத்­தொ­ழில்­களில் ஈடு­படுவதற்கு வேறு­பட்ட கார­ணங்­கள் இருந்­தா­லும், அவற்­றில் சில லாப­க­ர­மான தொழி­லாக மாறி வரு­கின்­றன.

திரு­வாட்டி நிக்­கோ­லெட் இங், பட்­டப்­ப­டிப்பு படித்­துக் கொண்டே தனது 19வது வய­தில் துணைப் பாடங்­களை கற்பித்தார்.

படிப்பு முடிந்­த­தும் ஒரு பெரிய பொதுத் தொடர்பு நிறு­வ­னத்­தில் தனது கனவு வேலை­யில் அவர் சேர்ந்­தார்.

ஆனால் ஒன்­பது மாதங்­க­ளி­லேயே அது தனக்­கான வேலை­யில்லை என்­பதை அவர் புரிந்­து­கொண்­டார்.

2014ல் வேலை­யைக் கைவிட்டு துணைப்­பா­டங்­களை அவர் கற்பிக்க ஆரம்­பித்­தார். மாண­வர் எண்­ணிக்கை கூடி­யது.

"ஆறு மாதங்­க­ளியே 60 மாண­வர்­கள் சேர்ந்­து­விட்­ட­னர்," என்று 32 வய­தான திரு­வாட்டி இங் சொன்­னார்.

தனது தொழிலை தொடர்ந்து நடத்தவும் பெருக்கவும் ஒரு நண்பரை தனது பங்காளியாக அவர் இணைத்துக்கொண்டார்.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஏழு இலக்க வருமானத் துடன் அவருக்கு ஏழு 'Write Edge' நிலையங்கள் இருந்தன.

தற்போது இந்நிறுவனம் சிங்கப்பூர் மலேசியாவில் இணையம் வழியாக துணைப்பாட வகுப்புகளை அந்நிறுவனம் நடத்தி வருகிறது. அதன் எட்டாவது கிளை அடுத்த மாதம் தொடங்கப்படவிருக்கிறது.

தனது கைத்தொழில் இன்று போல பெரிய அளவில் இருக்கும் என்று திருவாட்டி இங் கனவிலும் நினைக்காத நிலையில் திரு முஷாஃபா கமாலும், 35, முஹமட் ஃபவுசி இஸ்மாயிலும், 36 தங்களுடைய நவீன கைத் தொழிலில் மிகப்பெரிய இலக்கு டன் செயல்பட்டு வருகின்றனர்.

'லூஸிட்' எனும் மெய்நிகர் சாதனத்தை இவ்வாண்டு இறுதியில் வெளியிட அவர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்தப் புதிய திட்டம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 130 மில்லியன் வெள்ளியை ஈட்டித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டு வரைபடத்தை வீட்டு உரிமை யாளர்கள் பதிவேற்றினால் 'லூஸிட்' மென்பொருள் அதனை முப்பரிமாணத்தில் காட்டுகிறது.

இது, வீட்டின் உள்ளமைப்புகளை மெய்நிகர் காட்சியில் வடிவமைக்க உதவும்.

இருவரும் தங்களுடைய புதிய திட்டத்திற்காக 'ஒயிட்போர்ட் அசோசியேட்ஸ்' என்ற உள் அலங்கார நிறுவனத்தையும் வாங்கியிருக்கின்றனர்.

எண்ணெய், எரிவாயு தொழிற் துறையில் இருந்த இருவரும் 2018ல் சந்தித்து தங்களுடைய எண்ணத்தை செயல் வடிவில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினர்.

கடந்த ஆண்டு இவர்களுடைய நிறுவனம், நான்கு மில்லியன் வெள்ளியை ஈட்டியது.