தூசுமூட்டத்தாலும் சிங்கப்பூரின் மாறிவரும் வானிலையாலும் பலரும் மூக்கடைப்பால் அவதிப்படுகின்றனர். இதற்கு கருஞ்சீரகம் ஒரு சிறந்த தீர்வு எனக் கூறப்படுகிறது.
ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகப் பொடியை 50 மி.லி. தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து சூடாக்கி அதில் இரண்டு சொட்டை மூக்கில் விட்டால் மூக்கடைப்பு விலகும்.
அதோடு ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகப் பொடியை வெந்நீரில் தேன் கலந்து குடித்தால் சிறுநீரகக் கற்களும் பித்தப்பைக் கற்களும் கரையும் என்பர். விடாத இருமலால் அவதியுறுவோர் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகப் பொடியை அரை தேக்கரண்டி பூண்டு விழுதுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்ற உதவும்.

