தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனிருத்தின் 'ஒன்ஸ் அபான் எ டைம்' இசை நிகழ்ச்சி

2 mins read
316cbe34-cacb-435c-becc-a77034e88ef6
-

ஆ. விஷ்ணு வர்­தினி

சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய நேரடி இந்­திய இசை நிகழ்ச்­சி­யாக அமைய இருக்­கின்­றது, தமிழ்த் திரை­யி­சைக் கலை­ஞர் அனி­ருத்­தின் எதிர்­வ­ரும் இசை நிகழ்ச்சி. அவ­ரது முதல் 360 கோண மேடை நிகழ்­வாக அமை­யும் இந்த இசை நிகழ்ச்

­சி­யை மொத்­தம் 12,000 பேர் நேரில் கண்டு மகிழ இருக்­கின்­ற­னர். தமிழ்த் திரை­யி­சைத் துறை­யில் தனது பத்­தா­வது ஆண்டு நிறை­வைக் கொண்­டா­டும் வகை­யில் அனி­ருத் மேற்­கொண்­டுள்ள 'ஒன்ஸ் அபான் எ டைம்' உல­கப் பய­ணத்­தை­யொட்டி அவ­ரது சிங்­கப்­பூர் வருகை அமை­கிறது.

2019ஆம் ஆண்­டிற்­குப் பின் மீண்­டும் சிங்­கப்­பூ­ரில் இசை நிகழ்ச்சி படைக்­க­வி­ருக்­கும் அனி­ருத்தை நிறைந்த அரங்­கம் வர­வேற்க இருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது, நிகழ்வு ஏற்­பாட்­டா­ள­ரான மேஸ்ட்ரோ புரொ­டக்­‌ஷன்ஸ். வரும் சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வி­ருக்­கும் இந்த இசை நிகழ்ச்சி சிங்­கப்­பூ­ருக்கு மட்­டு­மன்றி, அனி­ருத்­தின் தென்­

கி­ழக்­கா­சிய இசை நிகழ்ச்­சி­களில் ஆகப் பெரி­ய­தா­க­வும் அமை­கிறது. பிர­பல பாட­கர்­களும் இசைக் கலை­ஞர்­களும் அனி­ருத்­து­டன் சிங்­கப்­பூர் உட்­புற அரங்­கத்­தின் மேடை­யில் இணை­ய­வி­ருக்­கின்­ற­னர்.

'அர­பிக் குத்து', 'செல்­லம்மா' ஆகிய பிர­பல பாடல்­க­ளுக்குக் குரல் கொடுத்த ஜோனிதா காந்­தி­யின் வரு­கை­யை­யும் ரசி­கர்­கள் எதிர்­பார்க்­க­லாம். உல­க­ள­வில் நேரடி இசை நிகழ்ச்சிகள் மீண்­டெ­ழுந்து வரும் நிலை­யில், வெளி­நாட்­டி­ன­ரும் எதிர்­வ­ரும் இந்­நி­கழ்­வில் கலந்­து­கொள்ள இருக்­கின்­ற­னர். மேஸ்ட்ரோ புரொ­டக்­‌ஷன்ஸ் நிறு­வ­னத்­தின் தலைமை அதி­காரி திரு பார்த்­தி­பன் முரு­கைய்­யன், அனி­ருத்­தின் இசை நிகழ்ச்­சி­யின் பார்­வை­யா­ளர்­களில் ஏறத்­தாழ 25% வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­வோர் என குறிப்­பிட்­டார். அமெ­ரிக்கா, கனடா, இங்­கி­லாந்து முத­லிய நாடு­க­ளி­லி­ருந்து பார்­வை­யா­ளர்­கள் கலந்­து­கொள்­வர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஜன­வரி மாதத்­தில் நுழை­வுச்­சீட்­டுகள் விற்பனைக்கு விடப்பட்ட அரை மணி நேரத்­தி­லேயே 8,500க்கும் மேற்­பட்ட நுழை­வுச்­சீட்­டு­கள் விற்­ப­னை­யாகின. அண்­மைய காலத்­தில் மிக பிர­ப­ல­ம­டைந்­துள்ள, பெரி­ய­ள­வி­லான, ஆங்­கில, கொரிய இசை நிகழ்ச்­சி­க­ளுக்கு நிக­ரான வர­வேற்பை இது­பெற்­றுள்­ள­தா­க­வும் திரு பார்த்­தி­பன் தெரி­வித்­தார்.