ஆசிய உணவு கிராமமாக மாறும் பனானா லீஃப் அப்போலோ உணவகம்

ஆசிய உணவு கிராமமாக மாறும் பனானா லீஃப் அப்போலோ உணவகம்

2 mins read

ஆ விஷ்­ணு­வர்­தினி

ஆசியா முழு­வ­தி­லு­மி­ருந்து உணவு வகை­களை வழங்­கும் சிங்­கப்­பூ­ரின் முதல் உண­வ­க­மாக அமை­ய­வி­ருக்­கிறது 'அப்­போலோ ஃபுட் வில்­லேஜ்'. லிட்­டில் இந்­தியா ஆர்க்­கேட்­டில் இருந்த பனானா லீஃப் அப்­போலோ உண­வ­கத்­தில் கடந்த ஓராண்­டாக புதுப்­பிப்­புப் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. தற்­போது, 500 உணவு வகை­க­ளைப் பரி­மா­று­வ­து­டன் 350 பேர் அமர்ந்து உண்­ணக்­கூ­டிய புது உண­வ­க­மாக அது உரு­வெ­டுத்­துள்­ளது.

புதுப் பொலிவு பெற்­றுள்ள இந்த உண­வ­கம் அடுத்த திங்­கட்­கி­ழமை திறக்­கப்­படும். வர­லாறு, மர­பு­டைமை, பல்­வகை உணவு ஆகி­ய­வற்றை ஒரே கூரை­யின்­கீழ் இணைப்­ப­தற்கு முயற்சி செய்­துள்­ளது இந்த புது உண­வ­கம்.

இந்­தி­யா­வின் பல்­வேறு மாநி­லங் களின் கலா­சா­ரங்­களை பறை­சாற்­றும் ஓவி­யங்­களும் கலைப்­பொ­ருள்­களும் இவ்­வி­டத்­துக்கு அழகு சேர்த்­துள்­ளன.

உண­வ­கத்­தின் ஒரு பகு­தி­யில் சிங்­கப்­பூர் கூடம் அமைக்­கப்­பட்டு சிங்­கப்­பூ­ரின் வர­லாற்­றுப் புகைப்­ப­டங்­கள், அம­ரர் திரு லீ குவான் இயூ­வின் புகைப் படங்­கள் ஆகி­யன இடம்­பெற்­றுள்­ளன.

கடந்த 1974ல் தொடங்­கப்­பட்டு பெரும்­பா­லும் இந்­திய உணவை வழங்கி வந்­துள்ள பனானா லீஃப் அப்­போலோ, இனி அப்­போலோ ஃபுட் வில்­லே­ஜில் இந்­திய-சீன கலவை உணவு, கிழக்­கா­சிய உணவு ஆகி­ய­வற்­றை­யும் வழங்க இருக்­கிறது.

உண­வ­கத்­தின் சிறப்பு உணவு வகை­யான மீன் தலை குழம்பு தொடர்ந்து வழங்­கப்­படும். எனி­னும் இக்­கி­ளை­யின் தென்­னிந்­திய உண­வுப் பட்­டி­யல் பெரும்­பா­லும் மாற்­றப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­தார் உண­வ­கத்­தின் தலைமை நிர்­வாகி செ. சங்­க­ர­நா­தன்.

கொவிட்-19 காலத்­தின்­போது பனானா லீஃப் அப்­போ­லோ­வின் லிட்­டில் இந்­தியா ஆர்க்­கெட் கிளை ஊழி­யர் பற்­றாக்­குறை கார­ண­மாக சில மாதங்­க­ளுக்கு முடங்­கி­யி­ருந்­தது.

"அச்­ச­ம­யத்­தில் புது முயற்சி எடுத்து எங்­க­ளைப் புதி­தாக அடை­யா­ளப் படுத்­திக் கொள்ள வேண்­டும் என்று எண்­ணி­னோம். கூடு­தல் சுற்­றுப்­ப­ய­ணி­களை ஈர்க்­கும் வண்­ணம் எங்­க­ளது புது வடி­வ­மைப்பு இருக்­கும் என நம்­பு­கி­றோம்," என்­றார் திரு சங்­கர்.

ஈயச்­செம்பு, மண்­பா­னை­கள் முத­லி­ய­வற்­றைப் பயன்­ப­டுத்­தும் பாரம்­ப­ரிய இந்­திய சமை­யல் முறை­களும் அறி முகப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்­தி­யா­வின் பல மாநி­லங்­க­ளி­லி­ருந்து வர­வ­ழைக்­கப்­பட்ட சமை­யல் கலை­ஞர் குழு, ஆரோக்­கி­ய­மான முறை­யி­லும் உண­வைத் தயா­ரிக்க இருப்­ப­தாக பனானா லீஃப் அப்­போலோ கூறி­யது. 'வீகன்' எனப்­படும் நனி­சைவ உண­வு­வ­கை­க­ளை­யும் 'க்ளூட்­டன்' இல்­லாத உண­வு­வ­கை­க­ளை­யும் வாடிக்­கை­யா­ள­யர்­கள் எதிர்­பார்க்­க­லாம். 'லாஃப்டி பீக்ஸ்' எனும் மது­பா­னக் கூட­மும் இவ்­வி­டத்­தில் ஒருங்கே இடம்­பெற்­றுள்­ளது.

வெவ்­வேறு தனிப்­பட்ட இடங்­க­ளுக்­குத் தேடி செல்­லா­மல் ஒரே இடத்­தில் பல்­வகை உண­வு­களை ஒருங்­கி­ணைத்­துள்ள இம்­மு­யற்­சியை லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டைமை சங்­கத்­தின் ஆலோ­ச­கர் ராஜ்­கு­மார் சந்­திரா பாராட்­டி­னார்.

"ஏறத்­தாழ இரு­பது ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் சாதா­ரண உணவு நிலை­ய­மாக இருந்­த இவ்­வி­டம் இப்­போது நவீ­ன­ம­ய­மாகி உள்­ளது. அதே வேளை­யில் லிட்­டில் இந்­தி­யா­வின் மர­பு­டை­மையை மற­க்காமல் இதன் நிறு­வ­னர்­கள் புகைப்­ப­டங்­கள், ஓவி­யங்­கள் ஆகி­ய­வற்றை இணைத்­தது சிறப்பு," என்­றார் அவர்.